தீபாவளி நெருங்கிவிட்டது. புதிய உடைகளும் பட்டாசும் இனிப்புவகைகளும் இனி கடைகளெங்கும் வியாபித்திருக்கும். வண்ணவண்ண ஆடைகள் ரங்கநாதன் தெருவெங்கும் நிறைந்திருக்கும். தென்னிந்திய, வட இந்திய, மேற்கத்திய ஆடைகள் என பலதரப்பட்ட ஆடைகள் கிடைக்கும். மனிதன் ஆடைகளால் நாகரிகம் அடைந்தானா அல்லது நாகரிகத்தால் ஆடைகளை அணிந்தானா என்று தெரியவில்லை.
ஆடைகளுக்கும் நாகரிகத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஒவ்வொரு நாகரிகமும் தனக்கென தனிப்பட்ட பழக்கவழக்கங்கள், மொழி, கலை, கலாச்சாரம் இவற்றுடன் ஆடைகளையும் கொண்டுள்ளது. ஆடைகள் அந்த நாகரிகத்தின் ஒரு அடையாளமாகவும் கருதலாம். காலங்கள் மாறும்போது ஆடைகளும் அவற்றின் தேவைகளும் மாறுகின்றன. தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் தலைப்பாகை அத்தியாவசியமாய் இருந்தது. ஆனால் இன்று தலைப்பாகை என்றால் என்னவென்றே அறியாத தலைமுறையும் உள்ளது.
என்னுடைய பள்ளிக்காலம் கிராமத்திலேயே கழிந்தது. அதுவரை விதவிதமான ஆடைகளை நான் தொலைக்காட்சியில் கண்டதோடு சரி. ஆண்களுக்கு வேட்டி, சட்டை, பான்ட்; பெண்களுக்கு சேலை, தாவணி, பாவாடை அதிக பட்சமாய் சுரிதார். கிராமத்தில் அணிந்திருக்கும் ஆடையால் ஒருவன் மதிப்பிடப் படுவதில்லை. ஆனால் நகரத்தில் ஆடைகள் தான் ஒரு மனிதனின் அந்தஸ்தை நிர்ணயிக்கின்றன. ஒருவன் எவ்வளவு தான் பணம் படைத்தவனாக இருந்தாலும் கிழிந்த ஆடை அணிந்திருந்தால் அவனுடைய வீட்டிற்குள் கூட போக முடியாது.
சென்ற வாரத்தில் ஒரு நாள் நண்பர் ஒருவர் வீட்டிற்க்கு நான் சென்ற போது அவர் அப்போதுதான் தீபாவளிக்காக வாங்கி வந்த ஆடைகளை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தார். மொத்தமாக இருபது ஆடைகள். "எதற்காக இவ்வளவு ஆடைகள்? உங்களுக்கு மட்டுமா? இல்லை உறவினர்களுக்கும் சேர்த்து எடுத்து விட்டீர்களா?" என்று கேட்டேன். "இவை அனைத்தும் எனக்கு மட்டுமே!" என்றார்.
"ஏன் இவ்வளவு ஆடைகள் எடுத்து உள்ளீர்கள்?" எனக்கேட்டதற்கு அவர் "இது எனது சிறு வயது ஆசை. நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். நான் சிறுவனாக இருக்கும் போது எனது நண்பர்களெல்லாம் தீபாவளிக்காக விதவிதமாக ஆடை உடுத்துவார்கள். எனக்கு தீபாவளிக்கு பலகாரமே கிடைக்காது. அப்படி இருந்தும் ஒரு முறை புத்தாடை கேட்டதற்கு விழுந்த அடியில் தீபாவளிக்கு பட்டாசே வெடிக்க முடியாமல் போய்விட்டது. அப்போது கிடைக்காத ஆடைகளுக்காக இப்போது நான் ஒவ்வொரு பண்டிகைக்கும் குறைந்தபட்சம் 10 ஆடைகளாவது எடுக்கிறேன்." என்றார்.
இளம் வயதில் நிராகரிக்கப்பட்ட ஏக்கம் இவருக்கு சுயமாகச் சம்பாதிக்கும் போது கிடைத்தது. ஆனால் இது அனைவருக்கும் வாய்ப்பதில்லை. இன்றும் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ தீபாவளிக்காக மட்டுமல்ல மற்ற நாட்களிலும் புத்தாடைகளுக்காக ஏங்கும் எத்தனையோ குழந்தைகளை நீங்கள் காணலாம்.
இன்று எங்கு பார்த்தாலும் ஆடைகளை வாங்கச் சொல்லி ஒரே விளம்பரம்தான். தொலைக்காட்சி, வானொலி, போகும் வழியெங்கும் சுவரில், ப்ளெக்ஸ் பேனரில், பேருந்தின் பின்னால் என எங்கும் விளம்பரமயம். அந்த துணிக்கடைகளில் ஆடைகள் வாங்காவிட்டால் நீங்கள் ஏதோ ஒரு குற்றம் செய்தது போல் மாயை உருவாக்கிவிட்டார்கள். அதுவும் குழந்தைகளை ஆடவிட்டு இளம் நெஞ்சுக்குள் அவர்களின் வியாபாரத்தை நஞ்சாய் விதைக்கிறார்கள்.
பள்ளி செல்லும் பிள்ளைகள் தீபாவளிக்கு மறுநாள் புத்தாடை அணிந்து வரலாம் என சொல்லுமளவிற்கு இவர்கள் மாற்றிவிட்டார்கள். தீபாவளி கொண்டாடாதவர்களானாலும் அவர்கள் குழந்தை பள்ளி செல்லுமென்றால் அவர்களும் புத்தாடை எடுத்துத் தரவேண்டும் என்றாகிவிட்டது.
சமீபத்தில் ஒரு டீ கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தேன். அங்கு வேலை செய்யும் சிறுவன் சுவரில் தென்பட்ட ஒரு துணிக்கடையின் விளம்பரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். நான் அவனிடம், "ஏன் அதையே பார்க்கிறாய்?" என்று கேட்டேன். அதற்கு அவன் "அண்ணா அந்த பான்ட் என்ன விலை இருக்கும்?" என்று ஒரு கார்கோ பான்ட்டைக் காட்டினான். நான் "ஒரு 500 ரூபாய் இருக்கும், எதற்கு கேட்கிறாய்?" என்றேன். "எனக்கு தீபாவளி போனஸ் கிடைக்கும். போனஸ் வந்தவுடனே அந்த கடைக்கு போய் நான் அதே பான்ட்டை வாங்கப் போறேன்" என்றான். அப்போது அவன் கண்ணில் தெரிந்தது ஆர்வமா, ஏக்கமா, நம்பிக்கையா என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
67 comments:
அப்போது அவன் கண்ணில் தெரிந்தது ஆர்வமா, ஏக்கமா, நம்பிக்கையா என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
....கனவுகள் ..... சில சமயம் பலிக்கின்றன.... சில சமயம் ஏக்கமாக மிஞ்சி விடுகின்றன...
கிழிந்த ஆடை அணிந்திருந்தால் அவனுடைய வீட்டிற்குள் கூட போக முடியாது.
//
இப்பெல்லாம் கிழிச்சு போட்டா தான் பேசனே.. நல்ல டிரஸ் போட்டா தான் எவனும் மதிக்கிறதில்ல...
கையில் காசு இருக்கிறவன் கொண்டாடுகிறான்.. இல்லாதவனுக்கு திபாவளி மட்டுமல்ல மற்ற பண்டிகைகளும் திண்டாட்டம் தான்...
துணிக்கடைகள், நகைக்கடைகள் போன்றவற்றின் அளவுக்கு மீறிய விளம்பரம்பங்களால் தன் குழந்தைகளின் விருப்பபடி ஆடைகளும் மற்ற பொருட்களும் வாங்கி கொடுக்க முடியாமல் திணறும் ஏழை பெற்றோர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காது..
Pudhu pant seekiram vanga valthukkal.he...he...he
விளம்பரங்கள் அளவுக்கு மிஞ்சியே நடக்கின்றன. சகிக்க முடிவதில்லை. நம் மக்களுக்கு புத்தி இல்லை என்றால் பணம் பண்ணும் வியாபர்களை ஏன் குற்றம் சொல்லவேணும்? வாயை இளித்துக்கொண்டு டிவியில் விளம்பரங்கள் பார்த்து ,வெளியில்வந்தால் திரும்பிய பக்கமெல்லாம் விளம்பரங்களைக்கண்டு ஏதோ சொர்க்க லோகமே வந்து விட்டாற்போல ஒரு பூரிப்புடன் எல்லா மந்தைகளும் டி.நகர் பக்கம் ஓடிக்கொண்டுள்ளன . இதில் படித்து, பாமரம் , மேல்சாதி கீழ் சாதி இடைசாதி என்று சகலமும் அப்படித்தான் .
சாதி பேதமற்ற, தொட்டால் ஒட்டும் தீட்டும் இல்லாத இன, நிற வேறுபாடு காணாத இந்தியர்கள் ரெங்கநாதன் தெருவிலும் உஸ்மான் ரோட்டிலும்.
அங்கு வேலை செய்யும் சிறுவன் சுவரில் தென்பட்ட ஒரு துணிக்கடையின் விளம்பரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். நான் அவனிடம், "ஏன் அதையே பார்க்கிறாய்?" என்று கேட்டேன். அதற்கு அவன் "அண்ணா அந்த பான்ட் என்ன விலை இருக்கும்?" என்று ஒரு கார்கோ பான்ட்டைக் காட்டினான். நான் "ஒரு 500 ரூபாய் இருக்கும், எதற்கு கேட்கிறாய்?" என்றேன். "எனக்கு தீபாவளி போனஸ் கிடைக்கும். போனஸ் வந்தவுடனே அந்த கடைக்கு போய் நான் அதே பான்ட்டை வாங்கப் போறேன்" என்றான். அப்போது அவன் கண்ணில் தெரிந்தது ஆர்வமா, ஏக்கமா, நம்பிக்கையா என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை//////
நானும் அப்படி தான் இருந்தேன் ..!
Boss. Ungalukku kadhar vettithaan best.
உங்களுடைய கருத்துக்கள் முற்றிலும் உண்மைதான்.. தீபாவளி டிரஸை விடுங்க.. சின்ன வயசுல பட்டாசே வெடிக்காமகூட நிறைய குழந்தைங்க ஏங்கிப்போயிருக்காங்க..
நல்ல பதிவு..
கடைசியா நீங்க அந்தப்பையனைப் பற்றி சொன்னது டச்சிங்கா இருந்தது..
//Chitra said...
....கனவுகள் ..... சில சமயம் பலிக்கின்றன.... சில சமயம் ஏக்கமாக மிஞ்சி விடுகின்றன...//
ஆமாங்க. நிறைவேறா கனவை நோக்கி நடை போடுவது தானே வாழ்க்கை.
//வெறும்பய said...
கிழிந்த ஆடை அணிந்திருந்தால் அவனுடைய வீட்டிற்குள் கூட போக முடியாது.
//
இப்பெல்லாம் கிழிச்சு போட்டா தான் பேசனே.. நல்ல டிரஸ் போட்டா தான் எவனும் மதிக்கிறதில்ல...//
நீங்க சொல்லுறது 'கிழிச்சுப்' போட்ட டிரஸ் நண்பா. நான் சொல்லுறது 'கிழிந்து' போன டிரஸ்.
// வெறும்பய said...
கையில் காசு இருக்கிறவன் கொண்டாடுகிறான்.. இல்லாதவனுக்கு திபாவளி மட்டுமல்ல மற்ற பண்டிகைகளும் திண்டாட்டம் தான்...
துணிக்கடைகள், நகைக்கடைகள் போன்றவற்றின் அளவுக்கு மீறிய விளம்பரம்பங்களால் தன் குழந்தைகளின் விருப்பபடி ஆடைகளும் மற்ற பொருட்களும் வாங்கி கொடுக்க முடியாமல் திணறும் ஏழை பெற்றோர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காது..//
உண்மைதான் நண்பா!
//முசமில் இத்ரூஸ் said...
Pudhu pant seekiram vanga valthukkal.he...he...he//
நன்றிங்க!!
//கக்கு - மாணிக்கம் said...
விளம்பரங்கள் அளவுக்கு மிஞ்சியே நடக்கின்றன. சகிக்க முடிவதில்லை. நம் மக்களுக்கு புத்தி இல்லை என்றால் பணம் பண்ணும் வியாபர்களை ஏன் குற்றம் சொல்லவேணும்? வாயை இளித்துக்கொண்டு டிவியில் விளம்பரங்கள் பார்த்து ,வெளியில்வந்தால் திரும்பிய பக்கமெல்லாம் விளம்பரங்களைக்கண்டு ஏதோ சொர்க்க லோகமே வந்து விட்டாற்போல ஒரு பூரிப்புடன் எல்லா மந்தைகளும் டி.நகர் பக்கம் ஓடிக்கொண்டுள்ளன . இதில் படித்து, பாமரம் , மேல்சாதி கீழ் சாதி இடைசாதி என்று சகலமும் அப்படித்தான் .
சாதி பேதமற்ற, தொட்டால் ஒட்டும் தீட்டும் இல்லாத இன, நிற வேறுபாடு காணாத இந்தியர்கள் ரெங்கநாதன் தெருவிலும் உஸ்மான் ரோட்டிலும்.//
இந்த விளம்பரங்களால் நான் டிவி பார்ப்பதையே நிறுத்தி விட்டேன். நாம் வியாபாரிகளை குற்றம் சொல்லமுடியாது. சாதி பேதமற்ற, தொட்டால் ஒட்டும் தீட்டும் இல்லாத இன, நிற வேறுபாடு காணாத இந்தியர்கள் இவர்கள்தான் முதலில் திருந்த வேண்டும்.
//முசமில் இத்ரூஸ் said...
Boss. Ungalukku kadhar vettithaan best.//
கரெக்ட்ங்க. நமக்கு அரசியல் தான் எல்லாமுமே.
// சௌந்தர் said...
நானும் அப்படி தான் இருந்தேன் ..!//
நன்றி சௌந்தர்.
//பதிவுலகில் பாபு said...
உங்களுடைய கருத்துக்கள் முற்றிலும் உண்மைதான்.. தீபாவளி டிரஸை விடுங்க.. சின்ன வயசுல பட்டாசே வெடிக்காமகூட நிறைய குழந்தைங்க ஏங்கிப்போயிருக்காங்க..
நல்ல பதிவு..//
ஆமாங்க. அவர்களுக்கு தீபாவளி என்பது மற்றும் ஒரு நாள் அவ்வளவுதான்.
என்ன தல எதாச்சும் காமெடியா சொல்வீங்கனு பாத்தேன். ஆனா உண்மைலயே டச் பண்ணிடீங்க.....
"பணம்" - மட்டும்தான் உலகம்.
மனிதனின் ஆசைகள் பூர்த்தியாக பணத்திர்கு அடிமை ஆக வேன்டியதுதான்.
என்னோட முதல் பதிவே இந்த பாலா போன "பணம்" - பற்றியதுதான்
http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/07/blog-post.html
எனக்கும் அந்த அனுபவம் இருக்கு பங்காளி
நீங்க ஆட்சிக்கு வந்தா தீபாவளிக்கு என்ன கொடுப்பீங்க?
//இளம் வயதில் நிராகரிக்கப்பட்ட ஏக்கம் இவருக்கு சுயமாகச் சம்பாதிக்கும் போது கிடைத்தது. ஆனால் இது அனைவருக்கும் வாய்ப்பதில்லை. //
உங்கள் நண்பர் அப்படி அளவுக்கு அதிகமான ஆடைகளை வாங்கியதை விட, அதை சில ஏழை குழந்தைகளுக்கு எடுத்து கொடுத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்
அருமையான பதிவு ..
ஒரு MLA ஆகபோரவரு இப்படியெல்லாம் டச்சிங் கா பதிவுபோடகூடாது
மக்களுக்கு இலவசம் குடுத்து ஒட்டு எப்படி வாங்கலாம்
மணல் குவாரி contract ,கல் குவாரி contract நம்ம மாமன் ,மச்சினன் எப்படி கொடுக்கலாம் இப்படி எத்தனையோ இருக்கு அதை எல்லாம் விட்டுபுட்டு
என்ன பங்காளி இப்படி கெளம்பீடீங்க .....................................
/// அப்படி இருந்தும் ஒரு முறை புத்தாடை கேட்டதற்கு விழுந்த அடியில் தீபாவளிக்கு பட்டாசே வெடிக்க முடியாமல் போய்விட்டது. அப்போது கிடைக்காத ஆடைகளுக்காக இப்போது நான் ஒவ்வொரு பண்டிகைக்கும் குறைந்தபட்சம் 10 ஆடைகளாவது எடுக்கிறேன்." ///
உண்மைலேயே ரொம்ப உணர்வுப்பூர்வமா இருக்கு அண்ணா ., கலக்கல் ..!!
இந்த விளம்பரங்கள் உண்மைலேயே அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.!
புத்தாடை எடுக்கவில்லை என்றாள் தெய்வகுத்தம் ஆகிவிடும் என்று சொல்லு அளவிற்கு உள்ளது என்பது மிகையல்ல ..!!
நல்லாத்தான்யா எழுதியிருக்க மாப்பி, இடை இடையே இந்த மாதிரியும் எழுது இல்லேன்னா ஒரே மாதிரி சீக்கிரமே போரடிச்சிடும்!
////கிராமத்தில் அணிந்திருக்கும் ஆடையால் ஒருவன் மதிப்பிடப் படுவதில்லை. ஆனால் நகரத்தில் ஆடைகள் தான் ஒரு மனிதனின் அந்தஸ்தை நிர்ணயிக்கின்றன. ஒருவன் எவ்வளவு தான் பணம் படைத்தவனாக இருந்தாலும் கிழிந்த ஆடை அணிந்திருந்தால் அவனுடைய வீட்டிற்குள் கூட போக முடியாது.////
உண்மை!
///அப்போது கிடைக்காத ஆடைகளுக்காக இப்போது நான் ஒவ்வொரு பண்டிகைக்கும் குறைந்தபட்சம் 10 ஆடைகளாவது எடுக்கிறேன்." என்றார்.///
இந்த மாதிரி கிறுக்குத்தனம் நான்கூட பண்ணியிருக்கேன், தவறுதான்!
////அந்த துணிக்கடைகளில் ஆடைகள் வாங்காவிட்டால் நீங்கள் ஏதோ ஒரு குற்றம் செய்தது போல் மாயை உருவாக்கிவிட்டார்கள். அதுவும் குழந்தைகளை ஆடவிட்டு இளம் நெஞ்சுக்குள் அவர்களின் வியாபாரத்தை நஞ்சாய் விதைக்கிறார்கள்.//////
இப்பல்லாம் டீவி விளம்பரங்களே நான் எந்தக் அக்டைக்குச் சென்று என்ன வாங்குவது என்று தீர்மானிக்கின்றன, நமது தேவைகள் அல்ல.
////அப்போது அவன் கண்ணில் தெரிந்தது ஆர்வமா, ஏக்கமா, நம்பிக்கையா என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.////
எதுவாக இருந்தாலும், அந் ஏழைச்சிறுவனையும் 500 ரூபாய் செலவு செய்யத்தூண்டிய விளம்பரத்தை என்ன சொல்வது? இப்படி ஆடம்பரத்தை காட்டும் விளம்பரங்கள் தேவையா?
//arunmaddy said...
என்ன தல எதாச்சும் காமெடியா சொல்வீங்கனு பாத்தேன். ஆனா உண்மைலயே டச் பண்ணிடீங்க.....
//
அந்த பையன் என்கிட்டே சொன்னதுல இருந்து தீபாவளி கொண்டாட்டம் என்னை விட்டு போயிடுச்சு.
// ராஜகோபால் said...
"பணம்" - மட்டும்தான் உலகம்.
மனிதனின் ஆசைகள் பூர்த்தியாக பணத்திர்கு அடிமை ஆக வேன்டியதுதான்.
என்னோட முதல் பதிவே இந்த பாலா போன "பணம்" - பற்றியதுதான்
http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/07/blog-post.html//
ஆமாங்க பணம் மட்டும் உலகமா மாறியதால அன்பு, பாசம் இவற்றையெல்லாம் நாம் தொலைத்து விட்டோம்.
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நீங்க ஆட்சிக்கு வந்தா தீபாவளிக்கு என்ன கொடுப்பீங்க?//
கண்டிப்பா போலிசுக்கு அல்வா மட்டும் தான் கொடுப்போம். (இப்ப என்ன பண்ணுவீங்க??)
//அருண் பிரசாத் said...
உங்கள் நண்பர் அப்படி அளவுக்கு அதிகமான ஆடைகளை வாங்கியதை விட, அதை சில ஏழை குழந்தைகளுக்கு எடுத்து கொடுத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்//
அருண் அவனுடைய கனவு வேறு மாதிரியானது. அவன் சின்ன வயதில் ஒரே டிரஸ் மட்டும் போட்டு 2 வருஷம் ஸ்கூல்க்கு போயிருக்கிறான். அந்த சிறுவயது ஏக்கம் இப்போது இந்த மாதிரி மாறியிருக்கிறது. நாம் என்னதான் நம்மால் முடிந்தவரை உதவி செய்தாலும் அனைவருக்கும் செய்ய முடியாது. இதை சரி செய்யவேண்டிய அரசோ, அதிகாரிகளோ ஏதும் செய்ய மாட்டார்கள்.
அதுபோல மக்களும் விளம்பரங்களை கண்டு மயங்காமல் இருந்தாலே போதும் பள்ளி செல்லும் பிள்ளைகளாவது நிம்மதியாகச் செல்லும்.
// அருமையான பதிவு ..
October 28, 2010 12:08 AM
Delete
Blogger நா.மணிவண்ணன் said...
ஒரு MLA ஆகபோரவரு இப்படியெல்லாம் டச்சிங் கா பதிவுபோடகூடாது
மக்களுக்கு இலவசம் குடுத்து ஒட்டு எப்படி வாங்கலாம்
மணல் குவாரி contract ,கல் குவாரி contract நம்ம மாமன் ,மச்சினன் எப்படி கொடுக்கலாம் இப்படி எத்தனையோ இருக்கு அதை எல்லாம் விட்டுபுட்டு
என்ன பங்காளி இப்படி கெளம்பீடீங்க .....................................//
என்ன பங்காளி பன்றது? இந்த விளம்பரதாரர் தொல்லை தாங்க முடியலே!!
//ப.செல்வக்குமார் said...
உண்மைலேயே ரொம்ப உணர்வுப்பூர்வமா இருக்கு அண்ணா ., கலக்கல் ..!!
இந்த விளம்பரங்கள் உண்மைலேயே அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.!
புத்தாடை எடுக்கவில்லை என்றாள் தெய்வகுத்தம் ஆகிவிடும் என்று சொல்லு அளவிற்கு உள்ளது என்பது மிகையல்ல ..!!//
ஆமாம் செல்வா, இப்ப வர்ற விளம்பர வாசகங்களை கவனி. ஏதோ இவர்கள் பொருளை வாங்காவிட்டால் நாம் வாழவே தகுதி இல்லாதவர் போல சித்தரிக்கிறார்கள்.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்லாத்தான்யா எழுதியிருக்க மாப்பி, இடை இடையே இந்த மாதிரியும் எழுது இல்லேன்னா ஒரே மாதிரி சீக்கிரமே போரடிச்சிடும்!//
நன்றி மாம்ஸ். (தேங்க்ஸ் சொன்னா உங்களுக்கு பிடிக்காதே மாம்ஸ்??)
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
இப்பல்லாம் டீவி விளம்பரங்களே நான் எந்தக் அக்டைக்குச் சென்று என்ன வாங்குவது என்று தீர்மானிக்கின்றன, நமது தேவைகள் அல்ல.//
அதுவும் அந்த வாசகங்கள் யப்பா சாமி சகிக்க முடியல. இதில் துணிக்கடைகளை மட்டும் சொல்லல மாம்ஸ். எல்லா விளம்பரங்களையும் பாருங்க, அதில ஏதாவது ஒரு பொருள நீங்க வாங்காவிட்டாலும் நீங்க இங்க இருக்க தகுதி இல்லாதவனா மாறிடுவீங்க.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
எதுவாக இருந்தாலும், அந் ஏழைச்சிறுவனையும் 500 ரூபாய் செலவு செய்யத்தூண்டிய விளம்பரத்தை என்ன சொல்வது? இப்படி ஆடம்பரத்தை காட்டும் விளம்பரங்கள் தேவையா?//
நிஜமாலுமே விளம்பரம் தான் அந்த பையனை யோசிக்க தூண்டியது. விளம்பரங்களுக்கு ஏதாவது சென்சார் வந்தால் தேவலை!!
பண்டிகைகள் இந்திய போன்ற தேசத்தில் தேவையற்றவை என்பதே எனது கருத்து ...
//கே.ஆர்.பி.செந்தில் said...
பண்டிகைகள் இந்திய போன்ற தேசத்தில் தேவையற்றவை என்பதே எனது கருத்து ...//
சில பண்டிகைகள் (பொங்கல்) காலம் காலமாக வந்தாலும் பல பண்டிகைகள் வியாபர நோக்கத்துடனும் (மத) வலிமையை பறைசாற்றவும் தான் உருவாக்கப்பட்டுள்ளன. இம்மாதிரி பண்டிகைகளே தேவையற்றவை என்பது எனது எண்ணம்.
ரொம்ப சீரியஸா பேசிக்கிட்டு இருக்கீங்க... நல்ல பதிவு.. அத மட்டும் சொல்லிட்டு ஓடிர்றேன். ;-);-)
// RVS said...
ரொம்ப சீரியஸா பேசிக்கிட்டு இருக்கீங்க... நல்ல பதிவு.. அத மட்டும் சொல்லிட்டு ஓடிர்றேன். ;-);-)//
நன்றிங்க RVS.
யோவ் என்னாச்சு?இப்படி எல்லாம் பதிவு போட்டா அழுதுடுவேன்.நிஜமாவே அருமை.மனித மன ஏக்கங்கள் வெளிப்பட்டது
Athu ekkam kalanatha arvam..
ulagin suthattathin oru settu... :(
Arumai anbare...
//கிராமத்தில் அணிந்திருக்கும் ஆடையால் ஒருவன் மதிப்பிடப் படுவதில்லை. ஆனால் நகரத்தில் ஆடைகள் தான் ஒரு மனிதனின் அந்தஸ்தை நிர்ணயிக்கின்றன.//
மிகசரியா சொன்னீங்க.
Good Post! Keep it up!
சொன்ன விஷயம் அருமை தலைவா. பட் இந்த தீபாவளிக்கு உங்க தொகுதிமக்களாகிய எங்களுக்கு என்ன செய்வதாய் உத்தேசம்? (ஓட்டுபோட்ட உரிமைல கேக்கறேன்)
அந்த பையனை பற்றி சொன்னது சிந்திக்க வைத்து விட்டது
அருமை விரிவான அலசல்
”சமீபத்தில் ஒரு டீ கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தேன். அங்கு வேலை செய்யும் சிறுவன் சுவரில் தென்பட்ட ஒரு துணிக்கடையின் விளம்பரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். நான் அவனிடம், "ஏன் அதையே பார்க்கிறாய்?" என்று கேட்டேன். அதற்கு அவன் "அண்ணா அந்த பான்ட் என்ன விலை இருக்கும்?" என்று ஒரு கார்கோ பான்ட்டைக் காட்டினான். நான் "ஒரு 500 ரூபாய் இருக்கும், எதற்கு கேட்கிறாய்?" என்றேன். "எனக்கு தீபாவளி போனஸ் கிடைக்கும். போனஸ் வந்தவுடனே அந்த கடைக்கு போய் நான் அதே பான்ட்டை வாங்கப் போறேன்" என்றான். அப்போது அவன் கண்ணில் தெரிந்தது ஆர்வமா, ஏக்கமா, நம்பிக்கையா என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.”
மனது வலிக்கிறது
இன்னும் குழந்தைத்தொழிலாளர் நிலை
தனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வந்தே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நடு நிலையாக வெளியிடும் வரை ....ஆதரவு தாரீர் …அந்நியன்
தொழில்நுட்ப பதிவில் முன்னிலை வகிக்கும் சசியின் வலைப்பக்கம் புறக்கணிக்கப்படுகிறது ,,சுதந்திர இலவச தளம் அவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் தானா ,,, நடுநிலையாளர் என்றால் ஏன் சசியின் வலைப்பக்கம் அதில் வரவில்லை ..நண்பர்களே சிந்தியுங்கள் கண்மூடிதனாமாக இருக்காமல் விழித்துக்கொள்ளுங்கள் ..நண்பர் சசிக்கு ஆதரவு கொடுங்கள்
நண்பர் சசி எப்படிநம்மிடம் கூறமுடியும் அவரின் தொழில்நுட்ப சேவையை பாராட்டி நாம் அவருக்கு இந்த கைம்மாறு செய்வோம் . அவரை மேலும் உற்சாகப்படுத்தி ஆதாரவு கொடுப்போம் ...வாருங்கள் நண்பர்களே .....
//சி.பி.செந்தில்குமார் said...
யோவ் என்னாச்சு?இப்படி எல்லாம் பதிவு போட்டா அழுதுடுவேன்.நிஜமாவே அருமை.மனித மன ஏக்கங்கள் வெளிப்பட்டது//
ஒன்னும் ஆகலே அண்ணே. ஏதோ மனதில் தோன்றியதை எழுதினேன்.
// sweatha said...
நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!//
எனக்கு பரிசெல்லாம் ஒன்னும் வேண்டாங்க!
//Thanglish Payan said...
Athu ekkam kalanatha arvam..
ulagin suthattathin oru settu... :(
Arumai anbare...//
நன்றி நண்பா. அப்படியே தமிழ்ல சொன்னா நல்லாருக்கும்.
// அன்பரசன் said...
//கிராமத்தில் அணிந்திருக்கும் ஆடையால் ஒருவன் மதிப்பிடப் படுவதில்லை. ஆனால் நகரத்தில் ஆடைகள் தான் ஒரு மனிதனின் அந்தஸ்தை நிர்ணயிக்கின்றன.//
மிகசரியா சொன்னீங்க.//
நன்றிங்க!
// பெயர் சொல்ல விருப்பமில்லை said...
Good Post! Keep it up!//
Thanks பெயர் சொல்ல விருப்பமில்லை !!
//தேவா said...
சொன்ன விஷயம் அருமை தலைவா. பட் இந்த தீபாவளிக்கு உங்க தொகுதிமக்களாகிய எங்களுக்கு என்ன செய்வதாய் உத்தேசம்? (ஓட்டுபோட்ட உரிமைல கேக்கறேன்)//
நிதிப் பற்றாக்குறை காரணமாக வீட்டுக்கொரு சோப்பு டப்பா கொடுக்கலாமுன்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்லுறீங்க??
// Gopi Ramamoorthy said...
நல்ல பதிவு//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோபி!
//பார்வையாளன் said...
அந்த பையனை பற்றி சொன்னது சிந்திக்க வைத்து விட்டது//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பார்வையாளன்!
//மாணவன் said...
அருமை விரிவான அலசல்
மனது வலிக்கிறது
இன்னும் குழந்தைத்தொழிலாளர் நிலை//
ஆமாங்க, என்னதான் சட்டம் கொண்டு வந்தாலும் குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க முடியவில்லை.
// அந்நியன் said...
தனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வந்தே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நடு நிலையாக வெளியிடும் வரை ....ஆதரவு தாரீர் …அந்நியன்
தொழில்நுட்ப பதிவில் முன்னிலை வகிக்கும் சசியின் வலைப்பக்கம் புறக்கணிக்கப்படுகிறது ,,சுதந்திர இலவச தளம் அவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் தானா ,,, நடுநிலையாளர் என்றால் ஏன் சசியின் வலைப்பக்கம் அதில் வரவில்லை ..நண்பர்களே சிந்தியுங்கள் கண்மூடிதனாமாக இருக்காமல் விழித்துக்கொள்ளுங்கள் ..நண்பர் சசிக்கு ஆதரவு கொடுங்கள்
நண்பர் சசி எப்படிநம்மிடம் கூறமுடியும் அவரின் தொழில்நுட்ப சேவையை பாராட்டி நாம் அவருக்கு இந்த கைம்மாறு செய்வோம் . அவரை மேலும் உற்சாகப்படுத்தி ஆதாரவு கொடுப்போம் ...வாருங்கள் நண்பர்களே .....//
நீங்கள் சொல்லவரும் கருத்துக்கள் எனக்கு புரியவில்லை தயவுசெய்து இணைப்புடன்(link) கொடுக்கவும்.
பதிவுலகை பற்றிய பரபரப்பு தொடர் அந்நியனின் முதல் அத்யாயம்..
//நாகராஜசோழன் ma said...
இதே போல் LAVALYS ல் Everest என்ற ஒரு மென்பொருள் உள்ளது சசி. (அதனுடைய இணைப்பு கிடைக்கவில்லை//
http://www.filehippo.com/download_everest_home/
// நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். நான் சிறுவனாக இருக்கும் போது எனது நண்பர்களெல்லாம் தீபாவளிக்காக விதவிதமாக ஆடை உடுத்துவார்கள். எனக்கு தீபாவளிக்கு பலகாரமே கிடைக்காது. அப்படி இருந்தும் ஒரு முறை புத்தாடை கேட்டதற்கு விழுந்த அடியில் தீபாவளிக்கு பட்டாசே வெடிக்க முடியாமல் போய்விட்டது. அப்போது கிடைக்காத ஆடைகளுக்காக இப்போது நான் ஒவ்வொரு பண்டிகைக்கும் குறைந்தபட்சம் 10 ஆடைகளாவது எடுக்கிறேன் //
இதற்கு பதிலாக அவர் குறைந்தபட்சம் ஆடை வாங்க பணம் இல்லாத ஏழைகள் இரண்டு பேருக்கு டிரஸ் எடுத்து கொடுத்திருக்கலாம்...
//அப்போது அவன் கண்ணில் தெரிந்தது ஆர்வமா, ஏக்கமா, நம்பிக்கையா என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.//
தாக்கத்தை ஏற்படுத்தியது..
Post a Comment