குறிப்பு

என் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.

Thursday, September 29, 2011

என் சொந்த காப்பி பேஸ்ட் பதிவு...

முன்னாடி எல்லாம் பிரபல பதிவர்கள்தான் பெரிய பெரிய பத்திரிக்கைல இருந்து காப்பி பேஸ்ட் பண்ணுவாங்க. இப்போத்தான் எல்லாம் மாறிப்போச்சே. நேற்று வந்த பதிவரில் இருந்து பழம் தின்று கொட்டை போட்ட பதிவர்கள் வரை காப்பி பேஸ்ட் போடுகிறார்கள். பெரிய பத்திரிக்கைல இருந்து காப்பி பண்ணதெல்லாம் போயி எங்கே என்ன கிடைக்குதோ சத்தமில்லாம அள்ளிட்டு வந்து போட்டுடுறாங்க. அதுக்கு வர்ர கமெண்ட்டுகள பார்க்கனுமே, அதுக்கே தனிக்கட்டுரை எழுதனும். ஆஹா அருமையான பகிர்வு, நல்ல பகிர்வு, உபயோகமான பகிர்வு நண்பா, சூப்பர் பகிர்வு பாஸ்... கேட்கவே அருமையா இருக்கில்ல? (அடிக்க வராதீங்கண்ணே, நானும் கூட அந்த மாதிரி அப்பாவியா கமெண்ட் போட்டிருக்கேன்....)

சரி அபடியே இந்த ட்ரெண்டை பிக்கப் பண்ணி நாமலும் எதையாவது காப்பி பேஸ்ட் பண்ணலாம்னா எதுவுமே சிக்க மாட்டேங்கிது. ஏது ஏது இப்படியே போனா அப்புறம் காப்பி பேஸ்ட் பண்ணலைன்னு திரட்டிகள்ல இருந்து கூட ஒதுக்கி வெச்சிடுவாங்களோன்னு எல்லாரும் பயமுறுத்துறாங்க. அதுனால விடிய விடிய நின்னுக்கிட்டே யோசிச்சு யோசிச்சு ஒருவழியா முடிவு பண்ணிட்டேன். மனசை திடப்படுத்திக்குங்க. இனி நானும் காப்பி பேஸ்ட் பதிவு போடப்போறேன். எப்படியும் ஒரு காப்பி பேஸ்ட் பதிவு போட்டே ஆகறதுன்னு களத்துல இறங்கி உங்களுக்காக ஒரு அருமையான காப்பி பேஸ்ட்டை இங்கே போட்டிருக்கேன்.

பாருங்க, புடிக்கலேன்னா சொல்லுங்க, நாளைக்கு வேற காப்பி பேஸ்ட் போடுறேன்.....
.
.
.

.
.
..காப்பி

பேஸ்ட்என்ன சார் இந்த காப்பி, பேஸ்ட் ஓகேதானே? இத வெச்சிக்கிட்டு எப்படியாவது எனக்கும் ஒரு ரேங் வாங்கிக் கொடுத்துடுங்க சார். அத வெச்சி அண்ணா நகர்ல இல்லேன்னாலும் அமிஞ்சிக்கரைலயாவது ஒரு ஃப்ளாட் வாங்கிடனும்.

நன்றி:  காப்பி பேஸ்ட் பதிவர்கள், கூகிள் இமேஜஸ்...

Thursday, September 8, 2011

மங்காத்தா (இது விமர்சனம் அல்ல)

வருடத்திற்கு இரு முறை மட்டும் நிரம்பும் குளம் ஊருக்கு கிழக்கால் அமைந்திருந்தது. குளக்கரையில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து சமூக விரோதிகளுக்கு இயற்கையான காவல்காரர்களாய் இருந்தன. குளத்தின் வடக்கு ஓரத்தில் சுண்ணாம்புக் காரையால் ஒரு திண்டு அமைக்கப்பட்டிருக்கும். அதில் எப்போதும் நாலைந்து பேர் வட்டமாய் அமர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பர். தாத்தாவுடன் வயலுக்கு அவ்வழியே போகும்போது அவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களில் பாதிப் பேர் கூலித் தொழிலாளர்கள். மீதிப் பேர் எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றுபவர்கள், பொதுக் காரியங்களில் வம்பிழுப்பவர்கள்.

"அங்கே அவங்க எல்லாம் என்ன செஞ்சிட்டு இருக்காங்க தாத்தா?" என்றேன்.

"அவங்க எல்லாம் மூணு சீட்டு விளையாடறாங்க."

"வாங்க, நாமளும் போய் அவங்களோட விளையாடலாம்."

"அது எல்லாம் கெட்டவங்க செய்யிறது. நாம விளையாடக் கூடாது." என்றார்.

பாதியிலேயே மறைக்கப்பட்ட அந்த விளையாட்டு ஐந்தாம் வகுப்புப் படிக்கும் எனக்கு விளையாடிப் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியது. உடனே நான் என் நண்பன் கணேஷிடம் ஆலோசனை கேட்டேன். கணேஷ், குளக்கரையில் அவ்வப்போது சீட்டு விளையாடும் மணியின் மகன். கணேஷ் சில நேரம் அவன் அப்பாவுடன் சீட்டு விளையாடும் இடத்தில் இருந்திருக்கிறானாம். மதிய நேரம் யாருமே இருக்க  மாட்டாங்க, அப்போ போனா நாம ரெண்டுபேரும் விளையாடிப் பார்க்கலாம் என்றான். அவன் திட்டப்படியே இருவரும் அடுத்த நாள் மதியம் குளக்கரைக்கு போவதாய் முடிவெடுத்தோம்.
அடுத்த நாள் சனிக்கிழமை. இருவரும் மதியம் ஒரு மணிக்கு கிளம்பி குறுக்கு வழியில் குளக்கரைக்கு சென்று கொண்டிருந்தோம். போகும் வழியில் எங்கள் வகுப்புத் தோழன் ரமேஷ் பார்த்துவிட்டான். அவனையும் இழுத்துக் கொண்டு குளக்கரைக்குச் சென்றோம். திண்டுக்கு அருகில் ஒளித்து வைக்கப் பட்டிருந்த சீட்டுக் கட்டை வெளியில் எடுத்தான் கணேஷ். பூவைத் தடவுவது போல சீட்டுக்களை மென்மையாய்த் தடவிக் கொடுத்தான். எங்க அப்பா இப்படித்தான் ஒவ்வொரு சீட்டா எடுத்துப் போடுவார் டா என்றான். ரமேஷுக்கு சீட்டும் புதுசு, குளக்கரையும் புதுசு. அதனால் கொஞ்சம் படபடப்பாய் இருந்தான்.

இந்த சீட்டை வச்சு எப்படிடா விளையாடறது, இந்த விளையாட்டுக்குப் பேர் என்னடா என்றான் ரமேஷ்.

"மங்காத்தா டா" என்றான் கணேஷ்.

தோட்டத்திலிருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த என் ஆத்தா கையில் சாட்டையுடன் எங்களை நோக்கி வருவதைப் பார்த்ததும் பயத்தில் நான்,

"எங்காத்தா டா" என்றேன்.

சாட்டையுடன் ஆத்தா வருவதைப் பார்த்த ரமேஷ் பயத்தில்,

"உங்காத்தா டா" என்றான்.

டிஸ்கி: இங்கே மங்காத்தா விமர்சனம் தேடி வந்தவர்களுக்கு, ஏற்கனவே தலைப்பில் சொல்லியபடி, இது விமர்சனம் அல்ல.