குறிப்பு

என் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.

Thursday, September 8, 2011

மங்காத்தா (இது விமர்சனம் அல்ல)

வருடத்திற்கு இரு முறை மட்டும் நிரம்பும் குளம் ஊருக்கு கிழக்கால் அமைந்திருந்தது. குளக்கரையில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து சமூக விரோதிகளுக்கு இயற்கையான காவல்காரர்களாய் இருந்தன. குளத்தின் வடக்கு ஓரத்தில் சுண்ணாம்புக் காரையால் ஒரு திண்டு அமைக்கப்பட்டிருக்கும். அதில் எப்போதும் நாலைந்து பேர் வட்டமாய் அமர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பர். தாத்தாவுடன் வயலுக்கு அவ்வழியே போகும்போது அவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களில் பாதிப் பேர் கூலித் தொழிலாளர்கள். மீதிப் பேர் எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றுபவர்கள், பொதுக் காரியங்களில் வம்பிழுப்பவர்கள்.

"அங்கே அவங்க எல்லாம் என்ன செஞ்சிட்டு இருக்காங்க தாத்தா?" என்றேன்.

"அவங்க எல்லாம் மூணு சீட்டு விளையாடறாங்க."

"வாங்க, நாமளும் போய் அவங்களோட விளையாடலாம்."

"அது எல்லாம் கெட்டவங்க செய்யிறது. நாம விளையாடக் கூடாது." என்றார்.

பாதியிலேயே மறைக்கப்பட்ட அந்த விளையாட்டு ஐந்தாம் வகுப்புப் படிக்கும் எனக்கு விளையாடிப் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியது. உடனே நான் என் நண்பன் கணேஷிடம் ஆலோசனை கேட்டேன். கணேஷ், குளக்கரையில் அவ்வப்போது சீட்டு விளையாடும் மணியின் மகன். கணேஷ் சில நேரம் அவன் அப்பாவுடன் சீட்டு விளையாடும் இடத்தில் இருந்திருக்கிறானாம். மதிய நேரம் யாருமே இருக்க  மாட்டாங்க, அப்போ போனா நாம ரெண்டுபேரும் விளையாடிப் பார்க்கலாம் என்றான். அவன் திட்டப்படியே இருவரும் அடுத்த நாள் மதியம் குளக்கரைக்கு போவதாய் முடிவெடுத்தோம்.




அடுத்த நாள் சனிக்கிழமை. இருவரும் மதியம் ஒரு மணிக்கு கிளம்பி குறுக்கு வழியில் குளக்கரைக்கு சென்று கொண்டிருந்தோம். போகும் வழியில் எங்கள் வகுப்புத் தோழன் ரமேஷ் பார்த்துவிட்டான். அவனையும் இழுத்துக் கொண்டு குளக்கரைக்குச் சென்றோம். திண்டுக்கு அருகில் ஒளித்து வைக்கப் பட்டிருந்த சீட்டுக் கட்டை வெளியில் எடுத்தான் கணேஷ். பூவைத் தடவுவது போல சீட்டுக்களை மென்மையாய்த் தடவிக் கொடுத்தான். எங்க அப்பா இப்படித்தான் ஒவ்வொரு சீட்டா எடுத்துப் போடுவார் டா என்றான். ரமேஷுக்கு சீட்டும் புதுசு, குளக்கரையும் புதுசு. அதனால் கொஞ்சம் படபடப்பாய் இருந்தான்.

இந்த சீட்டை வச்சு எப்படிடா விளையாடறது, இந்த விளையாட்டுக்குப் பேர் என்னடா என்றான் ரமேஷ்.

"மங்காத்தா டா" என்றான் கணேஷ்.

தோட்டத்திலிருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த என் ஆத்தா கையில் சாட்டையுடன் எங்களை நோக்கி வருவதைப் பார்த்ததும் பயத்தில் நான்,

"எங்காத்தா டா" என்றேன்.

சாட்டையுடன் ஆத்தா வருவதைப் பார்த்த ரமேஷ் பயத்தில்,

"உங்காத்தா டா" என்றான்.

டிஸ்கி: இங்கே மங்காத்தா விமர்சனம் தேடி வந்தவர்களுக்கு, ஏற்கனவே தலைப்பில் சொல்லியபடி, இது விமர்சனம் அல்ல.

16 comments:

vinu said...

yow poyaaaaaaaangoooo

vinu said...

kaalangaaththaala bulb kuduththittuuu

NaSo said...

மச்சி, அதான் சொல்லி இருக்கேன்ல, இது விமர்சனம் இல்லைனு. :)

வெளங்காதவன்™ said...

:)

Madhavan Srinivasagopalan said...

அங்கவை.. சங்கவை..
-- இவன் சம்பந்தமில்லாமல் கமெண்டு போடுவோர் சங்கம்.

Unknown said...

வணக்கம் தலைவரே! ரொம்ப நாளைக்கப்புறம்! :-)

நாய் நக்ஸ் said...

^&%*&^^&$^$^&*())_@)()*$(^*(&@+)+_)+_@($a@*$*()@$()*$(+@$(*^$*&@+_)+_@(#()_a*$%@%*(&)*(&)^)!^#*(&*($#*()$()_$)_@($()@$@^*&^!*(&(*$)_(+)#%*#*&^@$%*&@^$*(@a*$%a)_(%)_%**^$*&!^$@*@()$a)(&&^@$%@*)_*()&@^$#^&!$^%*&!#7!()84


இதுவும் கமெண்ட்தான் !!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாழ்க பாரதம்

செல்வா said...

அண்ணன் தொபுக்கடீர்னு இலக்கியத்துக்குள்ள குதிச்சிட்டாரு :)))))

அருண் பிரசாத் said...

யாரையோ திட்டுற மாதிரியே இருக்கு!

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் டுபுக்கு அரசியல்வாதி, எத்தனை பேர்லெய் இப்பிடி கிளம்பி இருக்கீங்க பிச்சிபுடுவேன் பிச்சி....

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் ஏழாவது குத்தியாச்சு..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பெருனர்,
மேதகு நாகராஜசோழன் எம்.எல்.ஏ. அவர்கள்,
கிணத்துக்கடவு தொகுதி


பொருள்: விரும்பிய சேனல் கிடைக்க வேண்டி விண்ணப்பம்

மதிப்பிற்குரிய ஐய்யா,
தாங்கள் வாங்கிக் கொடுத்த கேபிள் டீவியில் நான் விரும்பி பார்க்கும் டெலிஷாப்பிங் சேனல் வரவில்லை. எனவே விரைவில் அதற்கான ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
தங்கள் 72/3-வது பினாமி
பன்னிக்குட்டி ராம்சாமி

NaSo said...

கதையைப் புரிந்து கமெண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி!!

TERROR-PANDIYAN(VAS) said...

present

-/விஓஇசட்(VOZ) said...

:)