குறிப்பு

என் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.

Saturday, November 27, 2010

எனது டைரி குறிப்புகள்

நாள்  : 31st July 2005

                நான்  தனியாகத்தான் உள்ளேன் உருவத்தால். ஆனால் உள்ளத்தால் எந்நேரமும் உன்னுடனே தான் உள்ளேன். என்ன செய்ய? பார்த்துப் பல நாட்கள் ஆகிவிட்டது. நாட்கள் வாரங்களாய், வாரங்கள் மாதங்களாய் ஆகி இப்போது வருடங்களாய் உருண்டோடிவிட்டது.


                     பார்க்கவே நேரமில்லை உனக்கு. பின் எப்படி என்னை நினைத்துக் கொண்டிருப்பாய்?  உனக்காய் யுகம்யுகமாய்க் காத்திருப்பேன், உன்காலடி நிழலையும் தாங்குவேன் என பொய் வார்த்தைகள் நான் சொல்லவில்லை. நான் உன் நினைவிலேயே இருந்து அழிந்து போகிறேன் என்றுதான் சொல்கிறேன்.

                    மாதத்தில் ஒரு நாளாவது நீ என்னைப் பற்றி நினைப்பாய் என எண்ணுகிறேன். அன்றாடம் வேறு பெண்களைப் பார்க்கும் போது  எனக்கு அவர்கள் முகம் மறந்து உன் முகமே அதில் தெரிகிறது.
 
                      " னக்கே பயமாய் உள்ளது. எங்கே நான் அவர்களை நீ என நினைத்துப் பேசிவிடுவேனோ என்று ?" 

                         ன்னை நினைப்பாய் தானே??

நாள் : 19th September 2007

                      ந்த இரண்டு வருடங்களில் அனைத்தும் மாறிவிட்டது. அன்று பார்த்துப் பேசி பல வருடங்களாகி விட்டது என்று எழுதியிருந்தேன். ஆனால் இன்று தினமும் பேசுகிறேன் - காதலாய் அல்ல வெறும் நட்பு மட்டும் தான்.

                    

                              ன் காதல் நட்பாய் மாறியதா இல்லை அவள் நட்பு 'நட்பாய்' தொடர்கிறதா என என்னால் அறியமுடியவில்லை.  அவளிடமும் காதல் இருந்தது என்று  நினைத்திருந்தேன்.  நான் ஏன் இப்படி மாறினேன் என்று எனக்கே தெரியவில்லை. என் கையெழுத்திலிருந்து செயல்கள் வரை அனைத்தும் மாறிவிட்டது. 

                          தினமும் பேசியதால் தான் அவளைப் பற்றி புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் தான் நான் நண்பனாய் மட்டும் இருக்க விரும்பினேன், விரும்புகிறேன். 
 
                          னால் அவளுடைய மனது என்ன நினைக்கிறது என்று மட்டும் என்னால் அறியமுடியவில்லை. இருந்தும் இனி நான் நண்பனாய் மட்டும் தொடர்வேன் என்று உறுதியாய் நம்புகிறேன்.

டிஸ்கி: இது என்னோட சொந்த டைரிக் குறிப்பு
         

Wednesday, November 17, 2010

நான் ரசித்த ரஜினி படங்கள் - தொடர் பதிவு

              என்னை இந்த தொடர் பதிவு எழுத அழைத்த பன்னிகுட்டி ராம்சாமி அவர்களுக்கு நன்றிகள் பல. சிறிய வயதில் சட்டையில் ரஜினி படம் குத்திக்கொண்டு பள்ளி செல்லும் அளவுக்கு நான் அவரின் தீவிர ரசிகன். என்னுடைய பள்ளி காலங்களில் ரஜினி படத்திற்காக அப்போது இருந்த பஞ்சாயத்து டிவி முன்னால் மாலையில் போடும் படத்திற்காக மதியத்திலிருந்தே தவம் கிடப்போம். ஆனாலும் முதல் நாள் முதல் ஷோ பார்த்தது இல்லை இதுவரையிலும்.

               ரஜினி நூற்றைம்பது படத்திற்கு மேல் நடித்திருந்தாலும் நான் பார்த்தது என்னவோ ஐம்பது படங்கள் கூட இருக்காது. நான் ரஜினியை ஒரு கடவுளாகவோ மாஸ் ஹீரோவாகவோ  பார்க்க மாட்டேன். என்னைப் பொறுத்தவரை ரஜினி என்பவர் ஒரு திறமையான நடிகர். உண்மையாகவே இயக்குனர்கள் அவரை சரியாகப் பயன்படுத்தவில்லை.


10. பில்லா
              இது அவருக்கு ஆக்சன், நடிப்பு மற்றும் காமெடி என பல்முகங்களைக்  காட்ட கிடைத்த படம். அடிபட்டு காரில் இருக்கும் பொழுதும் டி எஸ் பியை மிரட்டுவதும் வெத்தலைய போட்டேண்டி என அப்பாவியாய் ஆடும் காட்சியும் எனக்குப் பிடித்தவை.
 

9. தர்மத்தின் தலைவன் 
           இது நான் பலமுறை பார்த்த படம். வேட்டி இல்லாமல் ரோட்டில் நடப்பதும் அது தெரிந்து ஓடி ஒளிவதும் சுஹாசினியிடம் வெட்கப்பட்டுக் கொண்டே பேசுவதும் பின் பாதியில் ஆக்சனில் கலக்குவதும் இப்படத்தில் சிறப்பான காட்சிகள்.

8. தில்லு முல்லு
          ரஜினியின் காமெடிக்கென்றே பலமுறை நான் பார்த்த படம். இன்டர்வியூ காட்சியும், கமல் வரும் காட்சியும் மீசையை வைத்து ஒருத்தன் என்னை ஏமாத்திட்டான் என தேங்காய் சீனிவாசன் மீசையை எடுப்பதும் என படம் முழுக்க காமெடிதான்.

7. ராஜாதி ராஜா 
          நான் பார்த்த முதல் ரஜினி படம். சின்னராசு வாக வரும் ரஜினி எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனந்தராஜிடம் பழத்தாரை கொடுத்து அப்பாவியாய் நிற்பதும் தாயத்து கட்டியவுடன் அதே ஆனந்தராஜை கூப்பிட்டு அடிப்பதும் என வெளுத்துக் கட்டியிருப்பார்.

6. நான் அடிமை இல்லை 
           இதுவும் நான் மிகவும் ரசித்துப் பார்த்த படம். ரஜினி - ஸ்ரீதேவி  காதல் காட்சிகளும், ரஜினி குழந்தையுடன் இருக்கும் காட்சிகளும் என இந்த படத்தில் செண்டிமெண்ட் காட்சிகளே அதிகம். ரு ஜீவன் தான் பாடலில் வரும் "கீழ்வர்க்கம் மேல்வர்க்கம் இணையாத இருகோடுகள்" நான் மிகவும் ரசித்த வரிகள். 5. புவனா ஒரு கேள்விக்குறி  
            ரஜினி  ஒரு திறமையான நடிகர் என நிருபித்த படம். இதில் ஒரு நடிகனாக ரஜினி எனக்குப் பிடிக்கும்.

4. ஆறிலிருந்து அறுபது வரை
            இதுவும்  ரஜினியின் சிறப்பான நடிப்புக்கு ஒரு சான்று. படம்முழுவதும் ஒரு சோகம் இழையோடும் அவரது நடிப்பில். "கண்மணியே காதல்" என்பது இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

3. தளபதி
            எனது  பள்ளி நாட்களில் வந்த படம். ரஜினி ரசிகர்களின் ஆராவாரத்துக் கிடையே நான் பார்த்தபடம். ரஜினி-மணிரத்னம் கூட்டணியில் பயங்கர ஹிட்டான படம். இதில் ரஜினி ஆக்சன், செண்டிமெண்ட் என கலந்துகட்டியிருப்பார்.

2. எஜமான்
           ரஜினியின்  திறமையை நிரூபித்த மாற்றுமொரு படம். பட்டாம்பூச்சி பிடிப்பது, ஆல விழுதுகளை அனுப்புவது, தூக்குச்சட்டிகளை  காலி செய்வது என நகைச்சுவை, செண்டிமெண்ட் என்று கலக்கியிருப்பார்.

1. பாட்ஷா
          ரஜினியே  சொன்னது போல அவரது ஆல் டைம் ஹிட்சில் முதலில் உள்ள படம். நான் ஒரு தடவ சொன்னா, உண்மையை சொன்னேன் இந்த இரண்டு டயலாக்குகளும் மறக்க முடியாதவை. இதிலும் ஆக்சன், காமெடி, செண்டிமெண்ட் என கலக்கியிருப்பார்.           இவை தவிர எனக்கு பிடித்த படங்கள்  மனிதன், மிஸ்டர் பாரத், மன்னன், சிவாஜி, அண்ணாமலை, முள்ளும் மலரும் (இந்த படம் நான் பார்க்காததால் லிஸ்டில் சேர்க்கவில்லை), ராஜா சின்ன ரோஜா, குரு சிஷ்யன், மாப்பிள்ளை, படிக்காதவன், சந்திரமுகி, முத்து, மாவீரன், படையப்பா  என ஒரு பெரிய லிஸ்டே உண்டு.

எனக்கு பிடித்த ரஜினி பாடல்கள்:
 • கண்மணியே காதல் என்பது - ஆறிலிருந்து அறுபது வரை
 • எங்கேயும் எப்போதும் - நினைத்தாலே இனிக்கும்
 • ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு - தர்ம யுத்தம்
 • அம்மா என்றழைக்காத - மன்னன்
 • வெற்றி நிச்சயம் - அண்ணாமலை
 • ஒரு ஜீவன் தான் - நான் அடிமை இல்லை
 • வெள்ளைப்புறா ஒன்று - புதுக் கவிதை
 • காதலின் தீபம் ஒன்று - தம்பிக்கு எந்த ஊரு
 • தாழம் பூவே வாசம் - கை கொடுக்கும் கை*
 • விடுகதையா இந்த- முத்து
   (கை கொடுக்கும் கை* - இந்த படத்தின் பெயர் சரியா எனத் தெரியவில்லை)

      
  இந்த தொடர் பதிவை தொடர நான் அழைப்பது:
      
  பிலாசபி பிரபாகரன் (ஏற்கனவே வாக்குக் கொடுத்தபடி நான் அழைக்கிறேன். இம்சை அரசன் பாபுவும் அழைத்திருக்கிறார்),
  வம்ப வெலைக்கு வாங்குவோம்ல மணிவண்ணன், 
  ரஹீம் கஸாலி

  பிகு: எனக்கு படங்கள் தந்து உதவிய கூகிள் இமேசஸ்க்கு நன்றி.

         
         

  Monday, November 15, 2010

  திருப்பூர் பனியனும் ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டும்

              தீபாவளிக்கு ஊருக்கு செல்வதற்காக அந்த புதன் கிழமையன்று அவசர அவசரமாய் அலுவலகத்தில் இருந்து கிளம்பிக்  கொண்டிருந்தேன். அப்போது எதிரே வந்தான் என்னோடு பணியாற்றும் நண்பன்.

               "மச்சி ஒரு வாரம் லீவ் போட்டுட்டு ஊருக்கு போறே, எனக்காக ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?" என்றான். "கண்டிப்பா பன்றேன் மச்சி" என்றேன் அவனிடம் வில்லங்கத்தை வாங்குது தெரியாமல். "உங்க ஊருல இருந்து திருப்பூர் பக்கம் தானே, அப்படியே எனக்கு ஒரு நாலு செட் T - ஷர்ட்  எடுத்துட்டு வந்துடு" என்றான். அவன் கிருஷ்ணகிரி பக்கம் அதனால் திருப்பூர் என்றாலே T - ஷர்ட் என நினைத்து விட்டான் போலும்.                      மச்சி திருப்பூர்ல நல்ல T - ஷர்ட் எல்லாம் கிடைக்காதுடா, நல்ல T - ஷர்ட் எல்லாம் எக்ஸ்போர்ட் பண்ணிடுவாங்க, எப்படி ஊட்டில வெள்ளை உருளைக் கிழங்குகளை எக்ஸ்போர்ட் பண்ணிட்டு நமக்கு மோசமானதை கொடுக்கிறார்களோ அதுபோல என்று  கம்யூனிசம் பேசினேன் அவனிடம். "வாங்கி வர காசில்லனு சொல்லு" என்று முறைத்தபடி சென்றான். "திருப்பூர் போனா கண்டிப்பா வாங்கிட்டு வரேன்" என்று அவனிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.

                    எதிரே இன்னொரு நண்பன் வந்தான். இவன் சென்னையில் செட்டில் ஆனவன். "மச்சி  தீபாவளிய நல்லா என்ஜாய் பண்ணிட்டு வரும் போது வீட்டுலே இருந்து ரெண்டு கிலோ மஞ்சள் கொண்டு வாடா" என்றான். T - ஷர்ட் வாங்குவதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை என நினைத்துக் கொண்டேன் மஞ்சளின் மகிமை தெரியாமல். அடித்து பிடித்து சென்ட்ரல் சென்று கோச் தேடி ஏறி உட்காரவும் ட்ரைன் கிளம்பவும் சரியாக இருந்தது.

                   அது திருவனந்தபுரம் மெயில். இந்த ட்ரைன் தமிழர்களுக்காக இயக்கப் படுவதாக தெரியவில்லை. ஏனென்றால் சேலம், ஈரோடுக்கு அடுத்து பாலக்காட்டில் தான் நிற்குமாம். திருப்பூர், கோயம்புத்தூர் ஸ்டேஷன்களில் நிற்காதாம். நள்ளிரவு 1 .30 மணிக்கு ஈரோட்டில் இறங்கி 2 .30 க்கு வீடு வந்தோம் நானும் எனது தம்பியும்.

                 மறுநாள் காலையில் நானும் தம்பியும் அப்பா, அம்மாவுடன்  கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். திருப்பூர் பனியன் கம்பனிகளின் வரவால் தோட்ட வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை என சொன்னார்கள். மேலும் அரசின் நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தால் இருந்த மிச்ச ஆட்களும் அங்கு சென்று விடுவதால் விவசாயமே செய்ய முடியவில்லை என்றார்கள். "தோட்டத்துக்கு வந்தால் வேலை செய்யணும் ஆனா நூறு  நாள் வேலைக்கு  போனால் வேலை செய்யத் தேவை இல்லை கமிசன் போக தொண்ணூறு ரூபாய் கிடைக்கும் அதனால யாரும் வர்றதில்லை" என்றார் அப்பா.


                 திருப்பூர் என்றதும் நண்பன் சொன்ன T - ஷர்ட் ஞாபகம் வந்தது. நண்பன் கேட்டதை அம்மாவிடம் சொன்னேன். "தீபாவளி சமயம் என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும், தீபாவளி முடிஞ்சு போய் எடுத்துக்கோ" என்றார் அம்மா. "இன்னொரு நண்பனுக்கு மஞ்சள் ரெண்டு கிலோ வேணும் அதையும் எடுத்து வைங்க" என்றேன். "மஞ்சள் ஒரு கிலோ 150 - 200 ரூபாய்க்கு போகுது, ஒரு சட்டை (குவிண்டால்) மஞ்சள் பதினஞ்சாயிரம் தெரியுமா?" என்றார் அப்பா. "பதினஞ்சாயிரமா??" என கோரஸாக கேட்டோம் நானும் தம்பியும். எனக்கு தெரிந்து எட்டாயிரம் வரை விற்றது ஞாபகம் இருக்கிறது. ஒரு ஆறு ஏழு மாசமாகவே மஞ்சள் பத்தாயிரத்திற்கு மேல விற்கிறது  என்று சொன்னார்கள்.

                 "ஆளும் கெடைக்கிறது இல்ல, நீங்க ரெண்டு பேரும் இதுவரைக்கும் வீட்டுக்கு  கொடுத்த பணத்துல ஒரு ஜோடி காளை கூட வாங்க முடியல. அதனால அடுத்த வருஷம் இன்னும் ரெண்டு ஏக்கர் சேர்த்து மஞ்சள் போடுறேன். ரெண்டு பேரும் அதைய பார்த்துக்கங்க, அதுவே போதும்" என்றார் அப்பா.
                  

  Tuesday, November 2, 2010

  தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்!!

  'தங்கத் தாய்',

  'இத்தாலி கண்ட இதய தெய்வம்',


  அன்னை சோனியா காந்தியின்
   
  நல்லாட்சியில்

  மன்னிக்கவும் நல்லாசியுடனும் 

  தானைத் தலைவர்,

  எங்கள் சிங்கம்  கொலம்பியாவின் விடிவெள்ளி

   இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் 

  வருங்கால பிரதம மந்திரி ராகுல் காந்தியின் உதவியுடனும்

  நடக்கும் முன்னாள் பொருளாதார மேதை 

  மன்மோகன் சிங்கின் ஆட்சியில், 
   
  பசியும் பிணியும் நீங்கி அனைவரும்

   
  கோடீஸ்வரர்களாகவும் லட்சாதிபதிகளாகவும் உள்ள இந்தியாவில், 

   
  செம்மொழிகண்ட எங்கள் தலைவன் 

   
  எங்கள் வாழும் தமிழ் அவரின் நல்லாட்சியாலும்


   
   
  நாளைய உதய சூரியன் எங்கள் தளபதியின் சீரிய முயற்சியாலும்
   
   அண்ணனின் அயராத உழைப்பாலும்

   
  சிறப்புடன் வாழும் அனைத்து தமிழர்களுக்கும்(??)

   
   எனது இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்!!!