குறிப்பு

என் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.

Saturday, November 27, 2010

எனது டைரி குறிப்புகள்

நாள்  : 31st July 2005

                நான்  தனியாகத்தான் உள்ளேன் உருவத்தால். ஆனால் உள்ளத்தால் எந்நேரமும் உன்னுடனே தான் உள்ளேன். என்ன செய்ய? பார்த்துப் பல நாட்கள் ஆகிவிட்டது. நாட்கள் வாரங்களாய், வாரங்கள் மாதங்களாய் ஆகி இப்போது வருடங்களாய் உருண்டோடிவிட்டது.

                     பார்க்கவே நேரமில்லை உனக்கு. பின் எப்படி என்னை நினைத்துக் கொண்டிருப்பாய்?  உனக்காய் யுகம்யுகமாய்க் காத்திருப்பேன், உன்காலடி நிழலையும் தாங்குவேன் என பொய் வார்த்தைகள் நான் சொல்லவில்லை. நான் உன் நினைவிலேயே இருந்து அழிந்து போகிறேன் என்றுதான் சொல்கிறேன்.

                    மாதத்தில் ஒரு நாளாவது நீ என்னைப் பற்றி நினைப்பாய் என எண்ணுகிறேன். அன்றாடம் வேறு பெண்களைப் பார்க்கும் போது  எனக்கு அவர்கள் முகம் மறந்து உன் முகமே அதில் தெரிகிறது.
 
                      " னக்கே பயமாய் உள்ளது. எங்கே நான் அவர்களை நீ என நினைத்துப் பேசிவிடுவேனோ என்று ?" 

                         ன்னை நினைப்பாய் தானே??

நாள் : 19th September 2007

                      ந்த இரண்டு வருடங்களில் அனைத்தும் மாறிவிட்டது. அன்று பார்த்துப் பேசி பல வருடங்களாகி விட்டது என்று எழுதியிருந்தேன். ஆனால் இன்று தினமும் பேசுகிறேன் - காதலாய் அல்ல வெறும் நட்பு மட்டும் தான்.

                              ன் காதல் நட்பாய் மாறியதா இல்லை அவள் நட்பு 'நட்பாய்' தொடர்கிறதா என என்னால் அறியமுடியவில்லை.  அவளிடமும் காதல் இருந்தது என்று  நினைத்திருந்தேன்.  நான் ஏன் இப்படி மாறினேன் என்று எனக்கே தெரியவில்லை. என் கையெழுத்திலிருந்து செயல்கள் வரை அனைத்தும் மாறிவிட்டது. 

                          தினமும் பேசியதால் தான் அவளைப் பற்றி புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் தான் நான் நண்பனாய் மட்டும் இருக்க விரும்பினேன், விரும்புகிறேன். 
 
                          னால் அவளுடைய மனது என்ன நினைக்கிறது என்று மட்டும் என்னால் அறியமுடியவில்லை. இருந்தும் இனி நான் நண்பனாய் மட்டும் தொடர்வேன் என்று உறுதியாய் நம்புகிறேன்.

டிஸ்கி: இது என்னோட சொந்த டைரிக் குறிப்பு
         
104 comments:

LK said...

அதெல்லாம் சரி. இதை உங்க வீட்டு தங்கமணிக்கு காமிச்சீங்களா (கல்யாணம் ஆய்டுச்சு இல்லை ??)

வெறும்பய said...

டிஸ்கி: இது என்னோட சொந்த டைரிக் குறிப்பு

//

நம்புற மாதிரி இல்லையே... மவனே வீட்டில பாத்தா சாவடியில்ல விழுந்திருக்கும்...

வெறும்பய said...

நான் தனியாகத்தான் உள்ளேன் உருவத்தால். ஆனால் உள்ளத்தால் எந்நேரமும் உன்னுடனே தான் உள்ளேன். என்ன செய்ய?

//

ஒண்ணும் பண்ண வேணாம்... ஒரு குவாட்டர் வாங்கி அடிச்சிட்டு படுத்து தூங்கு.. போதை தெளியும் பொது எல்லாம் சரியாகும்...

வெறும்பய said...

பார்க்கவே நேரமில்லை உனக்கு.

//

கொஞ்சமாவது பாக்குற மாதிரி இருந்தா வந்து பாப்பாங்க..

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

டிஸ்கி: இது என்னோட சொந்த டைரிக் குறிப்பு

//

நம்புற மாதிரி இல்லையே... மவனே வீட்டில பாத்தா சாவடியில்ல விழுந்திருக்கும்...
//

நெஜமாலுமே சொந்த கதை தான் மச்சி. சொன்னா நம்புங்கள்..

Gopi Ramamoorthy said...

நல்லா இருக்கு பாஸ்.

நானும் இந்த மாதிரி கொஞ்சம் கிறுக்கியிருக்கேன். http://ramamoorthygopi.blogspot.com/2010/11/blog-post_08.html

நான் உன் இதயத்தில் எப்போதும் குடி இருக்கிறேன் என்று நீ சொல்ல வேண்டாம். ஆனால் எப்போதாவது என் நினைவு உனக்கு வருகிறது என்று சொல். அது போதும் எனக்கு.

நீ என்னை எப்போதும் நினைக்க வேண்டாம். ஆனால் நான் உன்னிடம் பேசும் சமயங்களில் என் நினைவு வருவதாக சொல். பொய்யாக இருந்தாலும் பரவாயில்லை. அது போதும் எனக்கு.

கலாநேசன் said...

2007 ல் காதல், 2009 ல் நட்பு. இப்போ?

வெறும்பய said...
This comment has been removed by the author.
ஜீ... said...

நல்லா இருக்கு தலைவா!
நீங்களா தலைவா!? நம்பவே முடியல!

தேர்தல் நெருங்கினாலே கூட்டணிக் குழப்பத்தில தலைவர் இப்பிடித்தான் !!

:-))

நா.மணிவண்ணன் said...

நண்பா உங்க டைரி குறிப்ப இப்படி பப்ளிசிட்டி பண்ணீட்டீங்க

வார்த்தை said...

இது வேற யாராவது எழுதி கொடுத்து, பொழுதோட டைரில ஏத்துனதா?

நாகராஜசோழன் MA said...

//LK said...

அதெல்லாம் சரி. இதை உங்க வீட்டு தங்கமணிக்கு காமிச்சீங்களா (கல்யாணம் ஆய்டுச்சு இல்லை ??)
//

@LK பப்ளிக், பப்ளிக்.

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

நான் தனியாகத்தான் உள்ளேன் உருவத்தால். ஆனால் உள்ளத்தால் எந்நேரமும் உன்னுடனே தான் உள்ளேன். என்ன செய்ய?

//

ஒண்ணும் பண்ண வேணாம்... ஒரு குவாட்டர் வாங்கி அடிச்சிட்டு படுத்து தூங்கு.. போதை தெளியும் பொது எல்லாம் சரியாகும்...
//

மச்சி குவாட்டர் வாங்கி அடிச்சதனால் தான் இப்படியெல்லாம் தெரியுது.

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

பார்க்கவே நேரமில்லை உனக்கு.

//

கொஞ்சமாவது பாக்குற மாதிரி இருந்தா வந்து பாப்பாங்க..
//

மச்சி நான் எங்க காலேஜ் ஆணழகன் போட்டியில் ஜெயிச்சவன் தெரியுமா?

ஹரிஸ் said...

MLA..super..

ஹரிஸ் said...

மச்சி நான் எங்க காலேஜ் ஆணழகன் போட்டியில் ஜெயிச்சவன் தெரியுமா?//

முடியல...

நாகராஜசோழன் MA said...

//Gopi Ramamoorthy said...

நல்லா இருக்கு பாஸ்.

நானும் இந்த மாதிரி கொஞ்சம் கிறுக்கியிருக்கேன். http://ramamoorthygopi.blogspot.com/2010/11/blog-post_08.html

நான் உன் இதயத்தில் எப்போதும் குடி இருக்கிறேன் என்று நீ சொல்ல வேண்டாம். ஆனால் எப்போதாவது என் நினைவு உனக்கு வருகிறது என்று சொல். அது போதும் எனக்கு.

நீ என்னை எப்போதும் நினைக்க வேண்டாம். ஆனால் நான் உன்னிடம் பேசும் சமயங்களில் என் நினைவு வருவதாக சொல். பொய்யாக இருந்தாலும் பரவாயில்லை. அது போதும் எனக்கு.
//

பாஸ் நீங்க கிறுக்கல. ரொம்ப நல்லா சொல்லிருக்கீங்க. வருகைக்கு நன்றி பாஸ்.

நாகராஜசோழன் MA said...

//ஹரிஸ் said...

மச்சி நான் எங்க காலேஜ் ஆணழகன் போட்டியில் ஜெயிச்சவன் தெரியுமா?//

முடியல...
//

ஏன் என்னாச்சு?

நாகராஜசோழன் MA said...

//ஹரிஸ் said...

MLA..super..
//

நன்றிங்க..

நாகராஜசோழன் MA said...
This comment has been removed by the author.
நாகராஜசோழன் MA said...

//கலாநேசன் said...

2007 ல் காதல், 2009 ல் நட்பு. இப்போ?
//

அப்படியே தொடருதுங்க நண்பா! வருகைக்கு நன்றிங்க.

நாகராஜசோழன் MA said...

//ஜீ... said...

நல்லா இருக்கு தலைவா!
நீங்களா தலைவா!? நம்பவே முடியல!

தேர்தல் நெருங்கினாலே கூட்டணிக் குழப்பத்தில தலைவர் இப்பிடித்தான் !!

:-))
//

சரியா கண்டுபிடிசிட்டீங்க. தேர்தல் வருவதால் கொஞ்சம் கொழம்பி போய்தான் இருக்கேன்.

நாகராஜசோழன் MA said...

//நா.மணிவண்ணன் said...

நண்பா உங்க டைரி குறிப்ப இப்படி பப்ளிசிட்டி பண்ணீட்டீங்க
//

அப்படியாவது மகளிர் ஓட்டு கிடைக்கும்னு ஒரு நம்பிக்கை தான்.

Madhavan Srinivasagopalan said...

ஒரு கழுதையின் டயரி ?

'கைதியின்' டைப்பு அடிச்சத கூகிள் 'கழுதையின்' ஆக்கிடிச்சு..

பட்டாபட்டி.. said...

நம்ம எம்.எல்.ஏ வை , யாரோ கடத்தீட்டாங்கபா...!!!

மங்குனி அமைச்சர் said...

அதோட கொஞ்சம் இப்ப லேட்டஸ்ட் குறிப்பு இருந்தா போடேன் ......... சேத்துல ஏதோ எடிட் பண்ணின மாதிரி தெரியுதே ?

karthikkumar said...

ஒரு எம் எல் ஏ டைரி குறிப்பு மாதிரி இல்லையே

அன்பரசன் said...

//பார்க்கவே நேரமில்லை உனக்கு//

எப்படி பாப்பா?
இந்த மாதிரி வெள்ளையும் சொல்லையுமா இருந்தா?
கலர்ஃபுல்ல இருக்கணும் மச்சி.

அன்பரசன் said...

//Madhavan Srinivasagopalan said...

ஒரு கழுதையின் டயரி ?

'கைதியின்' டைப்பு அடிச்சத கூகிள் 'கழுதையின்' ஆக்கிடிச்சு..//

:)

அன்பரசன் said...

//karthikkumar said...

ஒரு எம் எல் ஏ டைரி குறிப்பு மாதிரி இல்லையே//

எனக்கும் அதேதான் தோணுது...

வெறும்பய said...

பின் எப்படி என்னை நினைத்துக் கொண்டிருப்பாய்?

//

உன்ன நினச்சாலே குமட்டிகிட்டு வந்திருக்கும் அப்புறம் எங்கே நினைக்கிறது ..

வெறும்பய said...

நான் உன் நினைவிலேயே இருந்து அழிந்து போகிறேன் என்றுதான் சொல்கிறேன்.

//

ஒரு அழி ரப்பர் வாங்கி வச்சுக்கோ.. ஈசியா அளிக்கலாம்... நம்ம கேப்டன் கூட தீவிரவாதிகளை இப்படி தான் அழிச்சாரு

Chitra said...

டிஸ்கி: இது என்னோட சொந்த டைரிக் குறிப்பு

.... நேர்மை - நேர்மை - ரைட்டு!

வைகை said...

கொஞ்சமாவது பாக்குற மாதிரி இருந்தா வந்து பாப்பாங்க..//

மச்சி நான் எங்க காலேஜ் ஆணழகன் போட்டியில் ஜெயிச்சவன் தெரியுமா?///

பாஸ்!! நீங்க படிச்சது லேடீஸ் காலேஜா?!!!

சௌந்தர் said...

என்ன வருங்கால MLA டைரியில் இது எல்லாம் இருக்கா....ம்

Balaji saravana said...

//karthikkumar said...
ஒரு எம் எல் ஏ டைரி குறிப்பு மாதிரி இல்லையே //

ரிபீட்டிக்கிறேன் பாஸ் :)

எஸ்.கே said...

அழகான டைரிக் குறிப்புகள்!

ரஹீம் கஸாலி said...

நல்லாருக்கு அடிக்கடி இப்படி வெளியிடுங்கள் நண்பரே...அடுத்தவங்களோட டைரி படிப்பதென்றால் ஒரு குஷிதான்

ஜீவன்பென்னி said...

அழகான நினைவுக்குறிப்புகள்..

நாகராஜசோழன் MA said...

//வார்த்தை said...

இது வேற யாராவது எழுதி கொடுத்து, பொழுதோட டைரில ஏத்துனதா?
//

கரெக்டா கண்டுபிடிசிட்டீங்க. நம்ம கட்சியில செர்ந்திடரீங்களா?

நாகராஜசோழன் MA said...

//Madhavan Srinivasagopalan said...

ஒரு கழுதையின் டயரி ?

'கைதியின்' டைப்பு அடிச்சத கூகிள் 'கழுதையின்' ஆக்கிடிச்சு..
//

ஆமாங்க காதல் கைதியின் டைரி..

ப.செல்வக்குமார் said...

//உன்காலடி நிழலையும் தாங்குவேன் என பொய் வார்த்தைகள் நான் சொல்லவில்லை. நான் உன் நினைவிலேயே இருந்து அழிந்து போகிறேன் என்றுதான் சொல்கிறேன்.//

அப்படின்னா நீங்க பொய்யே சொல்ல மாட்டேன் அப்படின்னு சொல்லுறீங்க ..?

ப.செல்வக்குமார் said...

//
" எனக்கே பயமாய் உள்ளது. எங்கே நான் அவர்களை நீ என நினைத்துப் பேசிவிடுவேனோ என்று ?"
//

எதுக்கும் கண்ண டெஸ்ட் பண்ணிக்கறது நல்லது ..!!

ப.செல்வக்குமார் said...

// தினமும் பேசியதால் தான் அவளைப் பற்றி புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் தான் நான் நண்பனாய் மட்டும் இருக்க விரும்பினேன், விரும்புகிறேன்.
//

உண்மைலேயே கலக்கிட்டீங்க அண்ணா ., நான் கூட கடைசில இந்த மாதிரி முடிவ நினைக்கல .. நல்லா இருக்கு ..!!

நாகராஜசோழன் MA said...

//பட்டாபட்டி.. said...

நம்ம எம்.எல்.ஏ வை , யாரோ கடத்தீட்டாங்கபா...!!!
//

"ஐயோ!! கொல்றாங்களே, யாரவாது காப்பாத்துங்க"

நாகராஜசோழன் MA said...

//மங்குனி அமைச்சர் said...

அதோட கொஞ்சம் இப்ப லேட்டஸ்ட் குறிப்பு இருந்தா போடேன் ......... சேத்துல ஏதோ எடிட் பண்ணின மாதிரி தெரியுதே ?
//

லேட்டஸ்ட் குறிப்புகள் இனிமேல் வரப்போகுது அமைச்சரே!

நாகராஜசோழன் MA said...

//ப.செல்வக்குமார் said...

//உன்காலடி நிழலையும் தாங்குவேன் என பொய் வார்த்தைகள் நான் சொல்லவில்லை. நான் உன் நினைவிலேயே இருந்து அழிந்து போகிறேன் என்றுதான் சொல்கிறேன்.//

அப்படின்னா நீங்க பொய்யே சொல்ல மாட்டேன் அப்படின்னு சொல்லுறீங்க ..?
//

நான் நேர்மையான அரசியல்வாதி செல்வா?!

நாகராஜசோழன் MA said...

//ப.செல்வக்குமார் said...

//
" எனக்கே பயமாய் உள்ளது. எங்கே நான் அவர்களை நீ என நினைத்துப் பேசிவிடுவேனோ என்று ?"
//

எதுக்கும் கண்ண டெஸ்ட் பண்ணிக்கறது நல்லது ..!!
//

கண்ண டெஸ்ட் பண்ணுனா லவ்ல ஜெயிசிடலாமா?

நாகராஜசோழன் MA said...

//ப.செல்வக்குமார் said...

// தினமும் பேசியதால் தான் அவளைப் பற்றி புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் தான் நான் நண்பனாய் மட்டும் இருக்க விரும்பினேன், விரும்புகிறேன்.
//

உண்மைலேயே கலக்கிட்டீங்க அண்ணா ., நான் கூட கடைசில இந்த மாதிரி முடிவ நினைக்கல .. நல்லா இருக்கு ..!!
//

நன்றி செல்வா...

நாகராஜசோழன் MA said...

//karthikkumar said...

ஒரு எம் எல் ஏ டைரி குறிப்பு மாதிரி இல்லையே
//

ஏன் பங்காளி எம்எல்ஏக்கு காதல் வராதா?

இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா அல்வா நீக அவளுக்கு கொடுத்தீங்களா ?அல்லது அவா உங்களுக்கு கொடுத்தாளா? .......உண்மையை சொல்லணும்

நாகராஜசோழன் MA said...

//அன்பரசன் said...

//பார்க்கவே நேரமில்லை உனக்கு//

எப்படி பாப்பா?
இந்த மாதிரி வெள்ளையும் சொல்லையுமா இருந்தா?
கலர்ஃபுல்ல இருக்கணும் மச்சி.
//

இல்லை மச்சி அப்போ நான் நம்ம முன்னாள் எம் பி ராமராஜன் மாதிரி கலர் புல்லா இருந்தேன்.

Madhavan Srinivasagopalan said...

//நாகராஜசோழன் MA said..."//Madhavan Srinivasagopalan said... ஒரு கழுதையின் டயரி ?
'கைதியின்' டைப்பு அடிச்சத கூகிள் 'கழுதையின்' ஆக்கிடிச்சு..//
ஆமாங்க காதல் கைதியின் டைரி.. "
//

இதத்தான் நா அப்பாவே சொன்னேன் (வி.கே. ராமசாமி ஸ்டைலுல .. 'அருணாசலம்')

நாகராஜசோழன் MA said...

//இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா அல்வா நீக அவளுக்கு கொடுத்தீங்களா ?அல்லது அவா உங்களுக்கு கொடுத்தாளா? .......உண்மையை சொல்லணும்
//

அவ எனக்கு அல்வா கொடுத்துட்டா. அதனால தான் நான் மத்தவங்களுக்கு அல்வா கொடுக்க ஆரம்பிச்சேன்.

நாகராஜசோழன் MA said...

//Madhavan Srinivasagopalan said...

//நாகராஜசோழன் MA said..."//Madhavan Srinivasagopalan said... ஒரு கழுதையின் டயரி ?
'கைதியின்' டைப்பு அடிச்சத கூகிள் 'கழுதையின்' ஆக்கிடிச்சு..//
ஆமாங்க காதல் கைதியின் டைரி.. "
//

இதத்தான் நா அப்பாவே சொன்னேன் (வி.கே. ராமசாமி ஸ்டைலுல .. 'அருணாசலம்')
//

ஓ அப்படிங்களா! நான் தப்பாவே புரிஞ்சுகிட்டேன்.

நாகராஜசோழன் MA said...

//அன்பரசன் said...

//karthikkumar said...

ஒரு எம் எல் ஏ டைரி குறிப்பு மாதிரி இல்லையே//

எனக்கும் அதேதான் தோணுது...
//

சொன்னா நம்புங்க. நான் ரொம்ப நல்லவன்!??

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

பின் எப்படி என்னை நினைத்துக் கொண்டிருப்பாய்?

//

உன்ன நினச்சாலே குமட்டிகிட்டு வந்திருக்கும் அப்புறம் எங்கே நினைக்கிறது ..
//

அப்படி இருக்காது மச்சி. ஏன்னா நான் அப்போ ஜான் எக்ஸ்ஷா தானே குடிப்பேன். அது நல்ல சரக்கு தானே?

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

நான் உன் நினைவிலேயே இருந்து அழிந்து போகிறேன் என்றுதான் சொல்கிறேன்.

//

ஒரு அழி ரப்பர் வாங்கி வச்சுக்கோ.. ஈசியா அளிக்கலாம்... நம்ம கேப்டன் கூட தீவிரவாதிகளை இப்படி தான் அழிச்சாரு
//

அந்த ரப்பர் எங்கே கெடைக்கும் மச்சி?

நாகராஜசோழன் MA said...

//Chitra said...

டிஸ்கி: இது என்னோட சொந்த டைரிக் குறிப்பு

.... நேர்மை - நேர்மை - ரைட்டு!
//

ஆமாங்க இப்ப இருக்கிற அரசியல்வாதிகளிலேயே நான்தான் நேர்மையானவன்.

நாகராஜசோழன் MA said...

//வைகை said...

கொஞ்சமாவது பாக்குற மாதிரி இருந்தா வந்து பாப்பாங்க..//

மச்சி நான் எங்க காலேஜ் ஆணழகன் போட்டியில் ஜெயிச்சவன் தெரியுமா?///

பாஸ்!! நீங்க படிச்சது லேடீஸ் காலேஜா?!!!
//

இல்லை பாஸ். நான் படிச்சது இருபாலரும் சேர்ந்து படிக்கும் ஒரு இன்ஜினியரிங் காலேஜ்.

நாகராஜசோழன் MA said...

//சௌந்தர் said...

என்ன வருங்கால MLA டைரியில் இது எல்லாம் இருக்கா....ம்
//

ஆமாங்க சௌந்தர். காதல் இல்லாத மனிதன் ஏது?

நாகராஜசோழன் MA said...

//Balaji saravana said...

//karthikkumar said...
ஒரு எம் எல் ஏ டைரி குறிப்பு மாதிரி இல்லையே //

ரிபீட்டிக்கிறேன் பாஸ் :)
//

எப்படியோ உண்மைய கண்டுபிடிசிட்டாங்களே?!

நாகராஜசோழன் MA said...

//எஸ்.கே said...

அழகான டைரிக் குறிப்புகள்!
//

நன்றிங்க எஸ்கே!!

நாகராஜசோழன் MA said...

//ரஹீம் கஸாலி said...

நல்லாருக்கு அடிக்கடி இப்படி வெளியிடுங்கள் நண்பரே...அடுத்தவங்களோட டைரி படிப்பதென்றால் ஒரு குஷிதான்
//

ஆமாங்க.அதுவும் அவங்களுக்கு தெரியாம படிக்கிறது அதவிட குஷி.

அன்பரசன் said...

//நாகராஜசோழன் MA said...

//அன்பரசன் said...

//பார்க்கவே நேரமில்லை உனக்கு//

எப்படி பாப்பா?
இந்த மாதிரி வெள்ளையும் சொல்லையுமா இருந்தா?
கலர்ஃபுல்ல இருக்கணும் மச்சி.//

இல்லை மச்சி அப்போ நான் நம்ம முன்னாள் எம் பி ராமராஜன் மாதிரி கலர் புல்லா இருந்தேன்.//

சான்சே இல்ல

நாகராஜசோழன் MA said...

//ஜீவன்பென்னி said...

அழகான நினைவுக்குறிப்புகள்..
//

நன்றிங்க ஜீவன்பென்னி!!

நாகராஜசோழன் MA said...

//அன்பரசன் said...

//நாகராஜசோழன் MA said...

//அன்பரசன் said...

//பார்க்கவே நேரமில்லை உனக்கு//

எப்படி பாப்பா?
இந்த மாதிரி வெள்ளையும் சொல்லையுமா இருந்தா?
கலர்ஃபுல்ல இருக்கணும் மச்சி.//

இல்லை மச்சி அப்போ நான் நம்ம முன்னாள் எம் பி ராமராஜன் மாதிரி கலர் புல்லா இருந்தேன்.//

சான்சே இல்ல//
//

விடுங்க அரசியல்ல இதெல்லாம் சாதாரணம். (அப்புறம் நமக்கு கட்-அவுட் வைப்பாங்க.)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//டிஸ்கி: இது என்னோட சொந்த டைரிக் குறிப்பு ///

osila vantha dairy thaana?

பார்வையாளன் said...

நல்ல பகிர்தல்...

அடுத்த ஆட்சி நம்மளுடையதுதான்

சி.பி.செந்தில்குமார் said...

சூப்பர் நாகா

சி.பி.செந்தில்குமார் said...

கவித கவித

சி.பி.செந்தில்குமார் said...

நாகா உங்களுக்குள் ஒரு கவிஞன் ஒளிந்திருக்கிறான்

எப்பூடி.. said...

உங்க ப்ரோபைல் படத்த பாக்கிரச்சே நீங்க 50 தாண்டின ஓல்டு கேசின்னு நினைச்சா நீங்க யூத்துதானா? :-)

நாகராஜசோழன் MA said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//டிஸ்கி: இது என்னோட சொந்த டைரிக் குறிப்பு ///

osila vantha dairy thaana?
//

கரெக்ட் கண்டுபிடிச்சிட்டீங்க? நீங்க ஒரு போலீஸ்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க.

நாகராஜசோழன் MA said...

//பார்வையாளன் said...

நல்ல பகிர்தல்...

அடுத்த ஆட்சி நம்மளுடையதுதான்
//

ஆமாங்க. அடுத்தது நம்ம ஆட்சிதான். (இந்த நம்பிக்கையை அப்படியே தேர்தல் வரைக்கும் விட்டுறாதீங்க!)

நாகராஜசோழன் MA said...

//சி.பி.செந்தில்குமார் said...

நாகா உங்களுக்குள் ஒரு கவிஞன் ஒளிந்திருக்கிறான்
//

நன்றி அண்ணா! இனிமேல் அவ்வப்போது கவிஞன் வருவான்.

நாகராஜசோழன் MA said...

//எப்பூடி.. said...

உங்க ப்ரோபைல் படத்த பாக்கிரச்சே நீங்க 50 தாண்டின ஓல்டு கேசின்னு நினைச்சா நீங்க யூத்துதானா? :-)
//

அட நீங்கவேற. எனக்கு தேர்தல்ல நிற்கிற வயசே ஆகலை!

சாமக்கோடங்கி said...

எம் எல் ஏ சார்.. எப்படி சார்.. இந்த மாறி எல்லாம் கவிதைத்தனமா..

முடியல..

ஆமா இப்ப நிலைமை எப்படி...? உங்களது போன வார டைரிக் குறிப்புகளையும் வெளியிட்டால் நலமாயிருக்கும்..

ஒரு வேலை தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டு இருப்பதால் டைரி எழுத நேரம் இல்லையோ..???

பிரபு . எம் said...

ஜாலியா ஒரு பதிவை எதிர்பார்த்துவந்தா ஃபீலிங்ஸ போட்டுட்டு இருக்கீங்களே தல...
ஹ்ம்ம்ம்... ஓகே அப்ப நானும்... முதல்ல கண்மணி சொன்னேன்ல இப்போ பொன்மணி போட்டுக்கோ..

//ஆனால் அவளுடைய மனது என்ன நினைக்கிறது என்று மட்டும் என்னால் அறியமுடியவில்லை. இருந்தும் இனி நான் நண்பனாய் மட்டும் தொடர்வேன் என்று உறுதியாய் நம்புகிறேன்.
//

இந்த டச் ரொம்ப டீஸண்ட் நண்பா... நண்பனாய் மட்டும் தொடர்வேன் என்ற உறுதி தளரும்வரை!! :)

Arun Prasath said...

கவிதையா கொட்டுது போல
கவிதையா கொட்டுது போல

நாகராஜசோழன் MA said...

// Arun Prasath said...

கவிதையா கொட்டுது போல
கவிதையா கொட்டுது போல
//

அண்ணனுக்கு லவ் மூடு ஸ்டார்ட் ஆகிடிச்சு. அதான்!!

நாகராஜசோழன் MA said...

//பிரபு . எம் said...

ஜாலியா ஒரு பதிவை எதிர்பார்த்துவந்தா ஃபீலிங்ஸ போட்டுட்டு இருக்கீங்களே தல...
ஹ்ம்ம்ம்... ஓகே அப்ப நானும்... முதல்ல கண்மணி சொன்னேன்ல இப்போ பொன்மணி போட்டுக்கோ..

//ஆனால் அவளுடைய மனது என்ன நினைக்கிறது என்று மட்டும் என்னால் அறியமுடியவில்லை. இருந்தும் இனி நான் நண்பனாய் மட்டும் தொடர்வேன் என்று உறுதியாய் நம்புகிறேன்.
//

இந்த டச் ரொம்ப டீஸண்ட் நண்பா... நண்பனாய் மட்டும் தொடர்வேன் என்ற உறுதி தளரும்வரை!! :)
//

அது இப்போதைக்கு தளராதுன்னு நினைக்கிறேன்.

Arun Prasath said...

கொட்டட்டும் கொட்டட்டும்

நாகராஜசோழன் MA said...

//சாமக்கோடங்கி said...

எம் எல் ஏ சார்.. எப்படி சார்.. இந்த மாறி எல்லாம் கவிதைத்தனமா..

முடியல..

ஆமா இப்ப நிலைமை எப்படி...? உங்களது போன வார டைரிக் குறிப்புகளையும் வெளியிட்டால் நலமாயிருக்கும்..
//

போன வார டைரி குறிப்பு வெளியிட அதில் ஒண்ணுமே இல்ல நண்பா!!

//ஒரு வேலை தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டு இருப்பதால் டைரி எழுத நேரம் இல்லையோ..???//

ஆம் நண்பா!. இப்போ தேர்தல்க்கு தயாராவதால் காதலுக்கு இடம் இல்லை.

நாகராஜசோழன் MA said...

//Arun Prasath said...

கொட்டட்டும் கொட்டட்டும்
//

என்ன இருந்தாலும் நாங்க யூத்து தானே?

Anonymous said...

இதுவரை வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்த நான் இப்போது பதிவராகவும் இந்த பதிவுலகில் காலடி எடுத்து வைத்துள்ளேன். நடைபயில இல்லை இல்லை தவழ ஆரம்பித்திருக்கும் இந்த குழந்தையையும் வாக்களித்து பின்னூட்டமிட்டு கை தூக்கிவிடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்....

பதிவுலகில் பாபு said...

டிஸ்கி: இது என்னோட சொந்த டைரிக் குறிப்பு ////

ரைட்டு..

நல்ல கவிதை நடையில எழுதியிருக்கீங்க நண்பா.. நல்லாயிருக்கு..

பாரத்... பாரதி... said...

//இருந்தும் இனி நான் நண்பனாய் மட்டும் தொடர்வேன் என்று உறுதியாய் நம்புகிறேன்.//
நம்புகிறோம்..

பாரத்... பாரதி... said...

//நீங்களா தலைவா!? நம்பவே முடியல!

தேர்தல் நெருங்கினாலே கூட்டணிக் குழப்பத்தில தலைவர் இப்பிடித்தான் !!//

பாரத்... பாரதி... said...

அடுத்த பதிவு எப்பங்க...

THOPPITHOPPI said...

நாகராஜசோழன் MA ஏதோ சிரிப்பு போலிஸ் போல காமடி பதிவர் என்று நினைத்தேன் கலக்கிட்டிங்க

dineshkumar said...

நாகராஜசோழன் MA said...
//வெறும்பய said...

டிஸ்கி: இது என்னோட சொந்த டைரிக் குறிப்பு

//

நம்புற மாதிரி இல்லையே... மவனே வீட்டில பாத்தா சாவடியில்ல விழுந்திருக்கும்...
//

நெஜமாலுமே சொந்த கதை தான் மச்சி. சொன்னா நம்புங்கள்..

மச்சி நான் நம்புறேன் கலக்கல் மச்சி

dineshkumar said...

ஆனால் அவளுடைய மனது என்ன நினைக்கிறது என்று மட்டும் என்னால் அறியமுடியவில்லை. இருந்தும் இனி நான் நண்பனாய் மட்டும் தொடர்வேன் என்று உறுதியாய் நம்புகிறேன்.

நெசமாவே நெஞ்ச தொட்டுட்ட மச்சி

சிவகுமார் said...

நாகராஜசோழன் என்ற பெயரை பார்த்ததும் நகைச்சுவை மட்டும் இருக்கும் பதிவகமாக இருக்கும் என எண்ணி உள்ளே நுழைந்தேன்..அதையும் மீறி பல சுவாரஸ்யங்கள்! வாழ்த்துகள்! (madrasbhavan.blogspot.com, nanbendaa.blogspot.com)

சிவகுமார் said...

தங்கள் தளத்தை இன்று முதல் பின்தொடர்வதில் மகிழ்ச்சி!

பாரத்... பாரதி... said...

" எனக்கே பயமாய் உள்ளது. எங்கே நான் அவர்களை நீ என நினைத்துப் பேசிவிடுவேனோ என்று ?"

ரைட்டு...

பாரத்... பாரதி... said...

அடுத்த பதிவு எப்பங்க...

பாரத்... பாரதி... said...

படங்கள் அருமை..

Anonymous said...

என்னாது இது? உங்க வீட்டம்மா உங்க பிளாக்க படிக்க மாட்டங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

லவ்வுன்னா லவ்வு....இதுதான்டா லவ்வு.... மாம்சு எப்பிடி அல்வா கொடுத்திருக்கே? (ஒண்ணுமில்ல கடைசி வட போடலாம்னு..ஹி..ஹி..!)

RVS said...

நீங்க ஒரு திறந்த புத்தகம்.. இல்லையில்லை டைரி..

அரசன் said...

நல்லா இருக்குங்க தலைவரே உங்கள் டைரி குறிப்பு...
நீங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்..

THOPPITHOPPI said...

அருமை

மாணவன் said...

// பார்க்கவே நேரமில்லை உனக்கு. பின் எப்படி என்னை நினைத்துக் கொண்டிருப்பாய்? உனக்காய் யுகம்யுகமாய்க் காத்திருப்பேன், உன்காலடி நிழலையும் தாங்குவேன் என பொய் வார்த்தைகள் நான் சொல்லவில்லை. நான் உன் நினைவிலேயே இருந்து அழிந்து போகிறேன் என்றுதான் சொல்கிறேன்.//

அருமை தலைவரே,
யதார்த்தமாகவும் சுவாரசியமாகவும் உள்ளது
டைரி குறிப்புகள் தொடரட்டும்...

வாழ்க வளமுடன்