குறிப்பு

என் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.

Friday, December 31, 2010

வருக.. புத்தாண்டே வருக..!

               ஒவ்வொரு புது வருடத்திலும் நமக்கு ஒரு வயது கூடுகிறது. சில பல நல்ல மற்றும் கெட்ட சம்பவங்கள் நமக்கு நடக்கிறது. பல மரங்கள் உயிரிழக்கின்றன. பஞ்ச பூதங்களும் மேலும் மாசுறுகின்றன. மக்கள் தொகையும், வாகனங்களும், குற்றங்களும், பொறாமைகளும், ஆசைகளும், ஊழல்களும் அதிகரிக்கின்றன.


             கனவு நிறைவேறியதென சிலர் மகிழ்ச்சியுறும் அதே வருடத்தில் கட்டிய கனவுக்கோட்டை தகர்ந்து போனதே என சிலர் வேதனைப் படுகின்றனர். படிப்பு முடிந்து விட்டது என சிலர் சந்தோசப் படுவதும் பொதுத்தேர்வு என சிலர் கஷ்டப்படுவதும் ஒரே வருடத்தில் தான். கொள்ளையடித்த பணத்தை காப்பாற்ற முடியாமல் ஒருவர் தடுமாறுவதும் சமையலுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வாங்கக் கூட காசில்லாமல் பலர் தடுமாறுவதும் ஒரே வருடத்தில் தான்.
        
            புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் இன்ன பிற கோலாகல விழாக்களும் நடந்த ஆண்டில் தான் பலபேர் முன்னிலையில் பிரசவித்த பெண் இறந்தாள். குடிநீருக்கே கஷ்டப்படும் அதே வருடத்தில் தான் மழை வெள்ளத்தால் பலர் இறந்தனர்.

                
              ஒவ்வொரு புது வருடமும் நமக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது. மேலும் மேலும் தேட வேண்டும், எதையாவது சாதிக்க வேண்டும், கனவை அடையவேண்டும், இன்ன பிற வேண்டும் என நம் எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்கும்  பணி புத்தாண்டுக்கே!!

 கடந்த வருடத்தைப் போலில்லாமல் இனிவரும் வருடம் துன்பங்கள் குறைவாகவும் நன்மைகள் அதிகமாகவும் தரும் என்ற எதிர்பார்ப்புடன்  புத்தாண்டை வரவேற்போம். தை ஒன்றா இல்லை சித்திரை ஒன்றா இல்லை ஜனவரி ஒன்றா, புத்தாண்டு எதுவாகினும் நம் வாழ்க்கையை சந்தோசமாய் மாற்ற வரும் புத்தாண்டை வரவேற்போம்.

அனைவருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

Tuesday, December 7, 2010

டாகுடர் விஜய்க்கு சில தேர்தல் டிப்ஸ்கள்

 நமது இளைய தலவலி தளபதி டாகுடர் விஜய் கூடிய விரைவில் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடிக்கும் எண்ணத்தில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. அதற்காக அவர் நடிக்க இருந்த 3 இடியட்ஸ் படத்தைக் கூட கைவிட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. எனவே அவர் கட்சி தொடங்குவதற்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கும் நம்மாலான சில டிப்ஸ்கள்:

தமிழ் நாட்டில் பெரும்பாலான கட்சிகளின் பெயர்கள் ”கழகம்” என முடிகின்றன. நமது டாகுடர் தான் எதையும் வித்தியாசமாய் செய்பவராச்சே, அதனால் அவருடைய கட்சியின் பெயர் "கலகம்" என முடியுமாறு வைத்துக் கொள்ளலாம். SAC முன்னேற்றக் கலகம், ஷோபா முன்னேற்றக் கலகம், டாகுடர் இளைய தலைவலி திராவிட முற்போக்குக் கலகம், சங்கீதா முற்போக்கு கலகம், இன்னும் இதுபோன்ற பெயர்கள் நிறைய நம்ம கிட்டே இருக்கு.

கட்சியின்  சின்னமாக கரப்பான்பூச்சி ஸ்ப்ரே, குருவி, வில்லு, சுறா போன்றவற்றில் ஏதாவது ஒன்றை வைத்துக்கொள்ளலாம்.

யாருடன் கூட்டணி வைப்பது என முடிவு செய்துவிட்டார் நம்ம டாகுடர் விஜய். அவர் ஒருமுறை முடிவு செஞ்சுட்டா அவர் பேச்சை அவரே கேட்க மாட்டாராம். இருந்தாலும், ல.தி.மு.க விஜய டிஆர், சுப்பிரமணியன் சாமி, கார்த்திக், சரத்குமார் போன்ற பெரிய(?) தலைவர்களுடன் கூட்டணி வைத்தால் எப்படியும் இருநூறு இடங்களில் போட்டியிடலாம்.

இப்போது அரசியலுக்கு வருபவர்கள் எல்லோரும் முதலமைச்சர் ஆசையுடன்தான் வருகின்றனர் என நமது தலைவர்(?) முதலமைச்சர் வேதனைப்படுகிறார். எனவே நமது டாகுடர் வருங்கால பிரதமர் அல்லது ஜனாதிபதி அல்லது அமெரிக்கா அதிபர் போன்ற ஆசையுடன் அரசியலுக்கு வருவதாக அறிவிக்கலாம். இதனால் தலைவரும் சந்தோசப்படுவார். (அவரது வாரிசுகளும் டாகுடர் படங்களை வாங்கி வெளியிட்டு தமிழ்நாட்டு மக்களை கொல்வார்கள்.)

இளைஞர் காங்கிரசில் சேர தகுதியில்லை என்று நம்ம டாகுடரை சொன்ன இத்தாலியின் விடிவெள்ளி ராகுலை நமது டாகுடர் கட்சியில் முதியோர் அணியில் கூட சேர அவருக்கு தகுதியில்லை என கலாய்க்கலாம். (அப்படியாவது டாகுடர் இளைஞரா காட்டலாம்)

சென்னையில் இருக்கும் ரவுடிகளை அழிக்கும் பணியில் அதிக நாள் இருக்கும் நமது டாகுடர் விஜய், ஆட்சிக்கு வந்தால் சென்னையில் இருக்கும்
ரவுடிகளை மட்டுமல்ல இந்தியாவில் இருக்கும் அனைத்து ரவுடிகளையும் அழிப்பேன் என கேப்டனுக்கு சவால் விடலாம். (கேப்டன் தீவிரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் வரைக்கும் போறாரு. நம்ம டாகுடர் ரவுடிகளைப் பிடிக்க பீகார் வரைக்கும் கூட போகமாட்டாரா என்ன?)


"சைலன்ஸ்" இந்த சொல்லை வருங்காலத்தில் பாடத்திட்டத்தில் வைப்பேன் என அறிக்கை விடலாம். இதனால் குழந்தைகள் ஓட்டு கிடைக்கும். (ஆனா, அவங்க ஓட்டுப் போட முடியாதே?)

பனிரெண்டாம் வகுப்புத் தேர்வை பலமுறை எழுதி பெயிலாகிவிட்டு பிள்ளையாரிடம் சண்டை போடும் மாணவர்களுக்கு போலிஸ் வேலை தருவதாக சொல்லலாம். (டாகுடர் படத்தைப் பார்த்தவன் எப்படி பாசாவான்?)

சிங்கு போல வேஷமிட்டு கடத்தல் செய்யும் ரசிகர்களுக்கு கடற்படையில் வேலை வாங்கி தருவதாக சொல்லலாம். (அப்பவாவது வடக்கே நம்ம டாகுடரை மதிப்பாங்களா?)

ரேசன் கடைகளில் அரிசி, பருப்புடன் டாகுடரு பட DVDகளை இலவசமாத் தருவதாக உறுதியளிக்கலாம். (அப்புறம் எவனும் ரேஷன் கடைக்கே வரமாட்டான்ல)

தேர்தல் சமயத்தில் சன் டிவி, கே டிவி போன்ற டிவிகளில் நமது டாகுடர் படங்களை போடக்கூடாது என கோர்ட்டில் மனு செய்யலாம். (அப்படி போட்டா அப்புறம் எவனும் ஓட்டுப் போட மாட்டான்)

ஓட்டுப் போடவில்லை என்றால் இந்த மாதிரி (காவலன்) ட்ரைலர் வெளியிட்டு அனைவரையும் தமிழ்நாட்டை விட்டே துரத்துவேன் என சவால் விடலாம். (அவர் படத்தைப் பார்த்தவர்களுக்கு வாய்க்கரிசி அவரே இலவசமாக கொடுக்கிறார்)


கடைசியாய்

இனிமேல் "என் வாழ்க்கை முழுவதும் படங்களில் நடிக்க மாட்டேன்" என டாகுடர் இளைய தலைவலி தளபதி விஜய் அறிவிக்கலாம்.