குறிப்பு

என் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.

Friday, December 31, 2010

வருக.. புத்தாண்டே வருக..!

               ஒவ்வொரு புது வருடத்திலும் நமக்கு ஒரு வயது கூடுகிறது. சில பல நல்ல மற்றும் கெட்ட சம்பவங்கள் நமக்கு நடக்கிறது. பல மரங்கள் உயிரிழக்கின்றன. பஞ்ச பூதங்களும் மேலும் மாசுறுகின்றன. மக்கள் தொகையும், வாகனங்களும், குற்றங்களும், பொறாமைகளும், ஆசைகளும், ஊழல்களும் அதிகரிக்கின்றன.


             கனவு நிறைவேறியதென சிலர் மகிழ்ச்சியுறும் அதே வருடத்தில் கட்டிய கனவுக்கோட்டை தகர்ந்து போனதே என சிலர் வேதனைப் படுகின்றனர். படிப்பு முடிந்து விட்டது என சிலர் சந்தோசப் படுவதும் பொதுத்தேர்வு என சிலர் கஷ்டப்படுவதும் ஒரே வருடத்தில் தான். கொள்ளையடித்த பணத்தை காப்பாற்ற முடியாமல் ஒருவர் தடுமாறுவதும் சமையலுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வாங்கக் கூட காசில்லாமல் பலர் தடுமாறுவதும் ஒரே வருடத்தில் தான்.
        
            புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் இன்ன பிற கோலாகல விழாக்களும் நடந்த ஆண்டில் தான் பலபேர் முன்னிலையில் பிரசவித்த பெண் இறந்தாள். குடிநீருக்கே கஷ்டப்படும் அதே வருடத்தில் தான் மழை வெள்ளத்தால் பலர் இறந்தனர்.

                
              ஒவ்வொரு புது வருடமும் நமக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது. மேலும் மேலும் தேட வேண்டும், எதையாவது சாதிக்க வேண்டும், கனவை அடையவேண்டும், இன்ன பிற வேண்டும் என நம் எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்கும்  பணி புத்தாண்டுக்கே!!

 கடந்த வருடத்தைப் போலில்லாமல் இனிவரும் வருடம் துன்பங்கள் குறைவாகவும் நன்மைகள் அதிகமாகவும் தரும் என்ற எதிர்பார்ப்புடன்  புத்தாண்டை வரவேற்போம். தை ஒன்றா இல்லை சித்திரை ஒன்றா இல்லை ஜனவரி ஒன்றா, புத்தாண்டு எதுவாகினும் நம் வாழ்க்கையை சந்தோசமாய் மாற்ற வரும் புத்தாண்டை வரவேற்போம்.

அனைவருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

40 comments:

சண்முககுமார் said...

வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

இதையும் படிச்சி பாருங்க
சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?

dineshkumar said...

மச்சி இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

வைகை said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மாம்ஸ்!

எஸ்.கே said...

// ஒவ்வொரு புது வருடமும் நமக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது. மேலும் மேலும் தேட வேண்டும், எதையாவது சாதிக்க வேண்டும், கனவை அடையவேண்டும், இன்ன பிற வேண்டும் என நம் எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்கும் பணி புத்தாண்டுக்கே!!
//

உண்மை. நானும் அந்த நம்பிக்கையுடன் புத்தாண்டை எதிர்நோக்குகிறேன். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

அருண் பிரசாத் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் எம் எல் ஏ சார்....


இந்த ஆண்டு நீங்கள் சட்டமன்றத்தில் அமர இறைவன் துணை இருக்கட்டும்...

sakthistudycentre.blogspot.com said...

நம்பிக்கை தான் வாழ்க்கை அந்த நம்பிக்கையுடன் புத்தாண்டை எதிர்நோக்குகிறேன். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

பதிவுலக நண்பர்களே..
பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
Wish You Happy New Year
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா...

மாணவன் said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்........

வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ இன்னும் மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்..

ரஹீம் கஸாலி said...

வாங்க எம்.எல்.ஏ, நீண்ட இடைவெளிக்கு பிறகு பதிவு போட்டுருக்கீங்க போல.....உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சங்கவி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

karthikkumar said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்....2011 நம்ம கையில்லா சந்திப்போம் தோழா நம்ம சட்டசபையில.... மக்கா இந்த தேர்தல்ல எப்படியும் எம் எல் ஏவா ஆகிடனும் சொல்லிட்டேன்....

நா.மணிவண்ணன் said...

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் .

Speed Master said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

இம்சைஅரசன் பாபு.. said...

ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

சௌந்தர் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

*VELMAHESH* said...

ஓட்டு போட்டுட்டேன்.

அரசன் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

raittu..... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

இரவு வானம் said...

Wish You happy NEw Year Sir

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

சிவகுமார் said...

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்...நண்பரே!!

அஞ்சா சிங்கம் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ஜீ... said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

வெறும்பய said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

எப்பூடி.. said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

தேசாந்திரி-பழமை விரும்பி said...

புது வருட வாழ்த்துக்கள்....
2011 நம்ம கையில தான் !

சி.பி.செந்தில்குமார் said...

ஒவ்வொரு புது வருடமும் நமக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது. மேலும் மேலும் தேட வேண்டும், எதையாவது சாதிக்க வேண்டும், கனவை அடையவேண்டும், இன்ன பிற வேண்டும் என நம் எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்கும் பணி புத்தாண்டுக்கே!!


sarithaan சரிதான் உங்களுக்கு வாழ்த்துக்கள்

மனசாட்சி said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

THOPPITHOPPI said...

பதிவுலகில் நீங்கள் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கும்.

பிரபு எம் said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க எம் எல் ஏ சார்...
மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் மாப்பு, கொஞ்சம் லேட்டு ஹி..ஹி.... ஓப்பன் பண்ணிட்டு மறந்துட்டேன்..... !

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

கோமாளி செல்வா said...

//கொள்ளையடித்த பணத்தை காப்பாற்ற முடியாமல் ஒருவர் தடுமாறுவதும் சமையலுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வாங்கக் கூட காசில்லாமல் பலர் தடுமாறுவதும் ஒரே வருடத்தில் தான்.///

உண்மைதான் அண்ணா ..!

கோமாளி செல்வா said...

// தை ஒன்றா இல்லை சித்திரை ஒன்றா இல்லை ஜனவரி ஒன்றா, புத்தாண்டு எதுவாகினும் நம் வாழ்க்கையை சந்தோசமாய் மாற்ற வரும் புத்தாண்டை வரவேற்போம்./

தை ஒண்ணு , சித்திரை ஒண்ணுல தான் ரொம்ப குழப்பமா இருக்கு .. எது எப்படியோ புத்தாண்டு ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியைக்கொடுகட்டும் .!

அன்னு said...

meyyalume electionukku poyitteengala? aalaiye kaanam?

:)

பாரத்... பாரதி... said...

//எந்நேரமும் என்னை தொடர்புகொள்ள
1800 - நாகராஜசோழன் - MLA//
ha..ha..ha...

பாரத்... பாரதி... said...

//எந்நேரமும் என்னை தொடர்புகொள்ள
1800 - நாகராஜசோழன் - MLA//
ha..ha..ha...

Anonymous said...

நம்ம ஆளு... மீட்டிங்க போட்டதைப்பற்றி எழுதியிருப்பீங்கன்னு நெனெச்சு வந்தேன்.பொக்குன்னு பண்ணீட்டீங்களே...

நர்மதன் said...

see this ஹீரோயிசத்திற்கு வித்திட்ட எம்.ஜி.ஆர்

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.முழு விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

Softy said...

மேலும் வாசிக்க....

Do Visit

http://www.verysadhu.blogspot.com/