குறிப்பு

என் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.

Monday, July 18, 2011

காதல் வாகனம்

 பள்ளி முடித்து கல்லூரியில் செல்ல தொடங்கியிருந்த நேரம். நானும் நண்பன் சாமியும் சரக்கு அடிக்கும்போது கூட சண்டை போடாத அளவுக்கு இணைபிரியா நண்பர்கள். நான் என்ஜினீரிங் காலேஜில் சேர்ந்திருந்தேன். நண்பன் ஈரோட்டுக்குப் பக்கத்தில் உள்ள பாரதிதாசன் ஆர்ட்ஸ் காலேஜுக்கு போய் வந்தான். அப்போது அவனுக்கு காலேஜ் ஆரம்பிச்சு ஒரு மாதம் இருக்கும். எனக்கு அப்போது காலேஜ் ஆரம்பிக்கவில்லை. தினமும் காலையில் எட்டு மணிக்கு கோபிக்கு போகும் ஒரு பிரைவேட் டவுன் பஸ்சில் தான் காலேஜ் போவான். அப்படி போகும் போது ஒரு நாள் அந்த பஸ்சில் இருக்கும் ஒரு பொண்ணு அவனைப் பார்த்து சிரித்திருக்கிறாள். அன்றிரவே ட்ரீட் கொடுத்தான் நண்பன். நானும் மற்ற இரண்டு நண்பர்களும் மாப்ளே நீ அழகாத் தானே இருக்கே, டிரை பன்றா என ஏத்தி விட்டோம். பங்காளி நாளைக்கு நீ நாகாவோட பைக்கை எடுத்திட்டு போய் கொஞ்சமா சீன் போடுறா என்றார் மணி. மணி, இவர் நம்ம சாமிக்கு பங்காளி. எங்களுக்கு அண்ணன் மாதிரி.எனக்கு அப்போது தான் என் அப்பாவுடைய யமஹா RX100 அவரிடமிருந்து கிடைத்திருந்தது. அது 1987 வருஷத்த பழைய யமஹா. ஆனால் அப்பாவே ஓட்டியதால் பார்க்கிறதுக்கு கொஞ்சம் நல்லா இருந்தது. அடுத்த நாள் காலையில் சாமி என்னோட பைக்கை எடுத்திட்டு போனான். பஸ் ஸ்டாப்ல பஸ் நின்னா அவனும் நிப்பான். பஸ் போனா அவனும் பஸ் பின்னாடி இல்லனா முன்னாடி போவான். இப்படியே கோபி வரைக்கும் போனான். கச்சேரிமேடு பஸ் ஸ்டாப்ல அந்த பொண்ணு இறங்கி பழனியம்மாள் ஸ்கூலுக்கு போனாள். இவனும் அந்த ஸ்கூல் கேட் வரைக்கும் அவ பின்னாலேயே போயிட்டு, பைக்கை பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கிற எங்க நண்பனோட பிரவ்சிங் சென்டர்ல நிறுத்திட்டு காலேஜ் பஸ்ல காலேஜ் போயிட்டான். அப்புறம் ஈவ்னிங் பஸ் ஸ்டாண்டுல அந்த பொண்ணு பஸ் ஏறுகிற வரை சைட்டடிப்பான். அதற்கு அப்புறம் அந்த பஸ்ஸை ஃபாலோ பண்ணுவான்.


இப்படியே ஒரு வாரம் ஓடிடுச்சு. அந்தப் பொண்ணும் இவனைப் பார்த்து சிரிச்சு பேசுற அளவுக்கு முன்னேறிட்டான். அந்த வார சனிக்கிழமை நான் அவனிடம் மாப்ளே அடுத்த வாரத்துல இருந்து எனக்கு காலேஜ் ஸ்டார்ட் ஆகிடும்டான்னு சொன்னேன். அதற்கு சாமி அப்போ நானும் ஒரு யமஹா RX வாங்கிடுறேண்டான்னு சொன்னான். அன்னைக்கே பைக் வாங்கிறதுன்னு முடிவு பண்ணிட்டு களத்துல இறங்கினோம். 86 இல்லனா 87 வருஷத்த வண்டி வாங்கலாம் (அதில் தான் ஜப்பான் இன்ஜின், ஜப்பான் கார்பரேட்டர் இருக்கும்) என முடிவு செய்தோம். நம்ம மணி அண்ணன் அவரோட நண்பர்களுக்கெல்லாம் போன் போட்டு கேட்டார். நானும் சாமியும் சத்தியமங்கலத்தில் ஆரம்பித்து மேட்டுப் பாளையம், புளியம்பட்டி, நம்பியூர் இப்படி ஒரு ரவுண்டு வந்தோம். ஒண்ணும் தேறல. மச்சி நான் திங்கள் லீவு போடுறேன். நாம ரெண்டு பேரும் கோபி, ஈரோடு போய் பார்க்கலாண்டா என்றான் சாமி.

திங்கள் வழக்கம் போல பஸ்ஸை ஃபாலோ பண்ணி கோபி போனோம். அங்கே சாமியின் கல்லூரி நண்பன் ஒருவன் அந்தியூரில் ஒரு 87 வருஷத்த வண்டி இருப்பதாய் சொன்னான். அப்படியே அந்தியூர் போனோம். அந்த வண்டி ஒரு பெரியவரிடம் இருந்தது. அவர் உங்களை மாதிரி இளவட்ட பசங்களுக்கு நான் இந்த வண்டியை தரமுடியாதுன்னு சொல்லிட்டார். அப்புறம்  ஒரு வழியா பேசி முடிச்சு வண்டியை வாங்கிட்டு கோபி சாயந்திரம் வந்து சேர்ந்தோம். நம்ம சாமி பஸ் ஸ்டாண்டுல அவனோட வண்டில ஒரு அரை மணி நேரம் சீன் போட்டான். அப்புறம் வழக்கம் போல பஸ்ஸை ஃபாலோ பண்ணி எங்க ஊருக்கு வந்தோம். வந்த உடனே நம்ம மெக்கானிக்கிட்டே சொல்லி சைலன்சர் ஆல்டர் பண்ணினான்.


அடுத்த நாள் வழக்கம் போல பஸ்ஸை ஃபாலோ பண்ணிப் போய் கச்சேரிமேட்டுல அந்தப் பொண்ணுகிட்டே பேசி இருக்கான். நான் இந்த வண்டியை வாங்கிட்டேன், வா உன்னை ஸ்கூல்ல டிராப் பண்றேன்னு சொல்லிருக்கான். அதற்கு அந்தப் பொண்ணு இது நாகாவோட வண்டி தானே? அவரு வரலையா? அவங்கள கேட்டதா சொல்லுங்க அண்ணேன்னு சொல்லிட்டு ஓடிடுச்சு. அன்னைக்கு நைட்டுத் தான் பீரையும் பிராந்தியையும் மிக்ஸ் பண்ணி அடிச்சா போதை தலைக்கேறும்னு தெரிஞ்சுகிட்டோம்.

--தொடரும்

61 comments:

மாணவன் said...

வணக்கம் மாம்ஸ்... #

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பதிவு எங்கடா ராஸ்கல்?

நாகராஜசோழன் MA said...

மேலே இருக்கிறது என்ன மச்சி?

நாகராஜசோழன் MA said...

@மாணவன், வணக்கம் மாப்ளே!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அந்தப் பொண்ணு இது நாகாவோட வண்டி தானே?///

அந்தப் பொண்ணு இது அண்ணன் நாகாவோட வண்டி தானே? - இப்படித்தான சொல்லுச்சு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

5 Comments
Close this window Jump to comment form //

இதுதான் மேல இருக்கு

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பதிவு எங்கடா ராஸ்கல்?//

சிரிப்பு போலீசாலாயே பதிவ கண்டுபிடிக்க முடியல்லன்னா நாங்க எங்க போயி தேடுறது? யோவ் மாம்ஸ் பதிவு எங்கய்யா? #####

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Monday, July 18, 2011//

படித்ததில் பிடித்தது

மாணவன் said...

//காதல் வாகனம்//

இது என்னா மாம்ஸ் இப்ப புதுசா வந்துருக்கா இந்த வண்டி, யோவ் மாமு அப்படியே எனக்கு ஒன்னு வாங்கி கொடுய்யா.... :))

வைகை said...

யோவ்..மச்சி? ப்ளாக்க தூசு தட்டும்போது உள்ள பாம்பு இருந்துச்சா?

வைகை said...

இது என்ன கருமம்னு இதுக்கு தொடரும் வேற?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said...

//காதல் வாகனம்//

இது என்னா மாம்ஸ் இப்ப புதுசா வந்துருக்கா இந்த வண்டி, யோவ் மாமு அப்படியே எனக்கு ஒன்னு வாங்கி கொடுய்யா.... :))//

மச்சி இத ஓட்ட எங்க லைசென்ஸ் வாங்கணும்?

வைகை said...

சரக்கடிச்சதுக்கு ஒரு பதிவா? பாருக்கு வெளில வாந்திஎடுதுட்டு போவியா...சும்மா கெடந்த ப்ளாக்ல வந்து எடுத்துக்கிட்டு?

நாகராஜசோழன் MA said...

//Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அந்தப் பொண்ணு இது நாகாவோட வண்டி தானே?///

அந்தப் பொண்ணு இது அண்ணன் நாகாவோட வண்டி தானே? - இப்படித்தான சொல்லுச்சு?//

பொறாமை!

நாகராஜசோழன் MA said...

// மாணவன் said...

//காதல் வாகனம்//

இது என்னா மாம்ஸ் இப்ப புதுசா வந்துருக்கா இந்த வண்டி, யோவ் மாமு அப்படியே எனக்கு ஒன்னு வாங்கி கொடுய்யா.... :))//

இது ரொம்ப பழைய வண்டி மச்சி.

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மாணவன் said...

//காதல் வாகனம்//

இது என்னா மாம்ஸ் இப்ப புதுசா வந்துருக்கா இந்த வண்டி, யோவ் மாமு அப்படியே எனக்கு ஒன்னு வாங்கி கொடுய்யா.... :))//

மச்சி இத ஓட்ட எங்க லைசென்ஸ் வாங்கணும்?//

அவ புருசன்கிட்ட :)

நாகராஜசோழன் MA said...

//வைகை said...

யோவ்..மச்சி? ப்ளாக்க தூசு தட்டும்போது உள்ள பாம்பு இருந்துச்சா?//

பாம்பு மட்டும் இல்லை, பூரான், தேள் இதெல்லாம் இருந்திச்சு.

நாகராஜசோழன் MA said...

//வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மாணவன் said...

//காதல் வாகனம்//

இது என்னா மாம்ஸ் இப்ப புதுசா வந்துருக்கா இந்த வண்டி, யோவ் மாமு அப்படியே எனக்கு ஒன்னு வாங்கி கொடுய்யா.... :))//

மச்சி இத ஓட்ட எங்க லைசென்ஸ் வாங்கணும்?//

அவ புருசன்கிட்ட :)//

வைகை ROTFL மச்சி!!

வைகை said...

நாகராஜசோழன் MA said...
//Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அந்தப் பொண்ணு இது நாகாவோட வண்டி தானே?///

அந்தப் பொண்ணு இது அண்ணன் நாகாவோட வண்டி தானே? - இப்படித்தான சொல்லுச்சு?//

பொறாமை!//

ஆங்..இவரு அப்பிடியே ஐஸ்வர்யாவ கரெக்ட் பண்ணிட்டாரு? நாங்க பொறாம படறதுக்கு? படுவா..இசுகூல் புள்ளைய டாவடிசுட்டு பேச்ச பாரு?

மாணவன் said...

//
மச்சி இத ஓட்ட எங்க லைசென்ஸ் வாங்கணும்?//

அவ புருசன்கிட்ட :)////

ரமேஷ் நல்லா கேட்டுக்க... :))

நாகராஜசோழன் MA said...

//வைகை said...

பொறாமை!//

ஆங்..இவரு அப்பிடியே ஐஸ்வர்யாவ கரெக்ட் பண்ணிட்டாரு? நாங்க பொறாம படறதுக்கு? படுவா..இசுகூல் புள்ளைய டாவடிசுட்டு பேச்ச பாரு?//

ஸ்கூல் படிக்கும் போது ஸ்கூல் புள்ளையைத் தானே கரெக்ட் பண்ணனும்? இல்லை ரமேஷ் மாதிரி ........???

நாகராஜசோழன் MA said...

//மாணவன் said...

//
மச்சி இத ஓட்ட எங்க லைசென்ஸ் வாங்கணும்?//

அவ புருசன்கிட்ட :)////

ரமேஷ் நல்லா கேட்டுக்க... :))//

அந்த அளவுக்கு அறிவு இருக்கா என்ன?

வைகை said...

நான் என்ஜினீரிங் காலேஜில் சேர்ந்திருந்தேன்.//

அட..கெடச்ச கேப்ல படிச்சேன்னு சொல்லிட்டியே?

மாணவன் said...

//அந்தப் பொண்ணு இது அண்ணன் நாகாவோட வண்டி தானே? - இப்படித்தான சொல்லுச்சு?//

பொறாமை!//

ஆங்..இவரு அப்பிடியே ஐஸ்வர்யாவ கரெக்ட் பண்ணிட்டாரு? நாங்க பொறாம படறதுக்கு? படுவா..இசுகூல் புள்ளைய டாவடிசுட்டு பேச்ச பாரு?//

வைகைண்ணே, தாங்களின் இந்த கருத்துரை அப்படியே அச்சு அசலாக நம்ம டெரர் கும்மியின் மணிமகுடம் பன்னிக்குட்டியை கண்முன்னே கொண்டு வருகிறது.... :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

வைகை said...

நானும் மற்ற இரண்டு நண்பர்களும் மாப்ளே நீ அழகாத் தானே இருக்கே, டிரை பன்றா என ஏத்தி விட்டோம்//

சரக்கடிச்ட்டு வாந்திஎடுக்க எதுக்கு அழகெல்லாம்? அப்ப..நீயெல்லாம் மோந்துகூட பார்க்கமுடியாதே மச்சி?

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
25
//

அடப்பாவி இதுக்குன்னே ஒளிஞ்சிருந்தியா?? :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கூடவே இருந்துகிட்டு வைகையும் பன்னியும் ஒரே ஆளுன்னு தெரியாம இருந்திருக்கானே!!!

நாகராஜசோழன் MA said...

//மாணவன் said...

வைகைண்ணே, தாங்களின் இந்த கருத்துரை அப்படியே அச்சு அசலாக நம்ம டெரர் கும்மியின் மணிமகுடம் பன்னிக்குட்டியை கண்முன்னே கொண்டு வருகிறது.... :))//

இவரு பத்மினி அம்மா, அவரு சிவாஜி கணேசன். இதை சொல்லிட்டாரு இவரு. நாம வாங்குற அஞ்சுக்கும் பத்துக்கும் இது தேவையா?

நாகராஜசோழன் MA said...

//வைகை said...

நான் என்ஜினீரிங் காலேஜில் சேர்ந்திருந்தேன்.//

அட..கெடச்ச கேப்ல படிச்சேன்னு சொல்லிட்டியே?//

யோவ் நான் அஞ்சாப்பு வரைக்கும் படிச்சிருக்கேன் தெரியுமோ?

வைகை said...

நாகாவோட பைக்கை எடுத்திட்டு போய் கொஞ்சமா சீன் போடுறா என்றார் மணி. மணி, இவர் நம்ம சாமிக்கு பங்காளி. எங்களுக்கு அண்ணன் மாதிரி//

.
யோவ்..அண்ணன்மாதிரின்னு சொல்ற? ஆனா பாக்குற வேலைய பார்த்தா வேற மாதிரி தெரியுது?

நாகராஜசோழன் MA said...

//வைகை said...

நானும் மற்ற இரண்டு நண்பர்களும் மாப்ளே நீ அழகாத் தானே இருக்கே, டிரை பன்றா என ஏத்தி விட்டோம்//

சரக்கடிச்ட்டு வாந்திஎடுக்க எதுக்கு அழகெல்லாம்? அப்ப..நீயெல்லாம் மோந்துகூட பார்க்கமுடியாதே மச்சி?//

நாங்க அப்போ அடிச்ச சரக்கு JE ன்னு செல்லமா சொல்லற John Exshaw. இதுக்கு தனியா ஒரு பதிவு இருக்கு.

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கூடவே இருந்துகிட்டு வைகையும் பன்னியும் ஒரே ஆளுன்னு தெரியாம இருந்திருக்கானே!!!//


நீயும் கூடவே இருந்துந்தியே செவ்வாழ? நீயாவது எடுத்து சொல்லக்கூடாது?

TERROR-PANDIYAN(VAS) said...

அருமையான காவியம். இதை படித்த எனக்கும் ஒரு காதல் காவிய தொடர் எழுத தோன்றுகிறது. விரைவில் உங்கள் டெரர் பாண்டியனின் ப்ளாக்கில் நெஞ்சை தொடும் காதல் காவியம்... :)))

TERROR-PANDIYAN(VAS) said...

//உங்களுடைய மனுக்களை இங்கே அளிக்கவும். நான் வெற்றி பெற்றவுடனே அவை நிறைவேற்றப்படும். //

க்க்க்க்ர்ர்ர்ர் தூ

இம்சைஅரசன் பாபு.. said...

//அருமையான காவியம். இதை படித்த எனக்கும் ஒரு காதல் காவிய தொடர் எழுத தோன்றுகிறது. விரைவில் உங்கள் டெரர் பாண்டியனின் ப்ளாக்கில் நெஞ்சை தொடும் காதல் காவியம்... :)//
கர்ர்ர்ர்ர்ர்ர் தூ ....தூ....

இம்சைஅரசன் பாபு.. said...

யோவ நாகா இது தேயையா பாரு டெர்ரர் கதை எழுத போறானாம் ..உன்னால தான் ...உன்னை யாரு தூசி தட்ட சொன்னது ..?

மாலுமி said...

/// அன்னைக்கு நைட்டுத் தான் பீரையும் பிராந்தியையும் மிக்ஸ் பண்ணி அடிச்சா போதை தலைக்கேறும்னு தெரிஞ்சுகிட்டோம். ///

மச்சி போதை தலைக்கு ஏறாது..........வாய் வழியா வெளிய வரும்........
பாத்து மச்சி நீ இப்போ தான் ப்ளாக் தூசி தட்டி புதுசா பெயிண்ட் அடிச்சு ரெடி பண்ணிருக்கே.......ஓவரா சரக்கு அடிச்சு வாந்தி எடுக்காத

மாலுமி said...

/// TERROR-PANDIYAN(VAS) said...
அருமையான காவியம். இதை படித்த எனக்கும் ஒரு காதல் காவிய தொடர் எழுத தோன்றுகிறது. விரைவில் உங்கள் டெரர் பாண்டியனின் ப்ளாக்கில் நெஞ்சை தொடும் காதல் காவியம்... :))) ///

அப்போ நானும் ஒரு சரக்குடன் இணணந்த ஒரு காதல் காவியம் எழுதுறேன்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆனந்தம்.. பேரானந்தம்..... நித்தியானந்தம்......!

karthikkumar said...

TERROR-PANDIYAN(VAS) said...
அருமையான காவியம். இதை படித்த எனக்கும் ஒரு காதல் காவிய தொடர் எழுத தோன்றுகிறது. விரைவில் உங்கள் டெரர் பாண்டியனின் ப்ளாக்கில் நெஞ்சை தொடும் காதல் காவியம்... :))///யோவ் நாகா மாம்ஸ் சும்மா இருந்த டெரர்ர சொரிஞ்சு விட்டுட்டீங்களே... இப்போ பாருங்க அவரும் காவியம் எழுதுறாராம்... இனி அந்த கொடுமையையும் பாக்கணும் ..:))

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அந்தப் பொண்ணு இது நாகாவோட வண்டி தானே?///

அந்தப் பொண்ணு இது அண்ணன் நாகாவோட வண்டி தானே? - இப்படித்தான சொல்லுச்சு//அண்ணன்னா சொல்லுச்சு?.. எனக்கு தாத்தான்னு சொன்னமாதிரி இருக்குது..:)

எஸ்.கே said...

கடைசியா அந்த வண்டியை எந்த காயலாங்கடையில போட்டீங்க?

Madhavan Srinivasagopalan said...

// அப்படி போகும் போது ஒரு நாள் அந்த பஸ்சில் இருக்கும் ஒரு பொண்ணு அவனைப் பார்த்து சிரித்திருக்கிறாள். //
ஒரு பொண்ணு சிரிக்கப்டாதே..
வந்துடும் நம்மாளுங்களுக்கு..

தெரிஞ்சிக்க.. ஒரு பொண்ணு சிரிச்சா..
மெதுவா குனிஞ்சு.. யாருக்கும் தெரியாம.. பேன்ட் ஜிப்ப சரியா மூடி இருக்கோமானு பாக்கணும்..

இது பற்றி பன்னியார், மற்றும் ரமேஷின் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன..

கோமாளி செல்வா said...

//அதற்கு அந்தப் பொண்ணு இது நாகாவோட வண்டி தானே? அவரு வரலையா?//

அப்பவே அண்ணனுக்கு எவ்ளோ பேன்ஸ் இருந்திருக்காங்க :-)

கோமாளி செல்வா said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
5 Comments
Close this window Jump to comment form //

இதுதான் மேல இருக்கு
//

நீங்க இன்னும் இப்படியேதான் இருக்கீங்களா?

கோமாளி செல்வா said...

// எஸ்.கே said...
கடைசியா அந்த வண்டியை எந்த காயலாங்கடையில போட்டீங்க?
//

அதுக்கு வண்டி ஓனர் ஒத்துக்கனும்ல ?!

♔ℜockzs ℜajesℌ♔™ said...

இது யாரு புது பதிவரா? வாழ்த்துக்கள் , புதுசா பதிவு எழுத ஆரம்பிச்சு இருக்கீங்க , மேலும் தொடர்ந்தது எழுதவும்

நாகராஜசோழன் MA said...

//TERROR-PANDIYAN(VAS) said...

அருமையான காவியம். இதை படித்த எனக்கும் ஒரு காதல் காவிய தொடர் எழுத தோன்றுகிறது. விரைவில் உங்கள் டெரர் பாண்டியனின் ப்ளாக்கில் நெஞ்சை தொடும் காதல் காவியம்... :)))//

நெஞ்சை தொடும் காதல் காவியம்னா என்ன பனியனின் காதல் காவியமா?

நாகராஜசோழன் MA said...

//இம்சைஅரசன் பாபு.. said...

யோவ நாகா இது தேயையா பாரு டெர்ரர் கதை எழுத போறானாம் ..உன்னால தான் ...உன்னை யாரு தூசி தட்ட சொன்னது ..?//

என்ன அண்ணே பன்றது, இல்லைனா மக்கள் நம்மை மறந்திருவாங்களே?

நாகராஜசோழன் MA said...

//மாலுமி said...

/// TERROR-PANDIYAN(VAS) said...
அருமையான காவியம். இதை படித்த எனக்கும் ஒரு காதல் காவிய தொடர் எழுத தோன்றுகிறது. விரைவில் உங்கள் டெரர் பாண்டியனின் ப்ளாக்கில் நெஞ்சை தொடும் காதல் காவியம்... :))) ///

அப்போ நானும் ஒரு சரக்குடன் இணணந்த ஒரு காதல் காவியம் எழுதுறேன்......//

எழுது மச்சி எழுது!

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆனந்தம்.. பேரானந்தம்..... நித்தியானந்தம்......!//

எதுக்கு இந்த கமெண்ட் இங்கே?

நாகராஜசோழன் MA said...

//karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அந்தப் பொண்ணு இது நாகாவோட வண்டி தானே?///

அந்தப் பொண்ணு இது அண்ணன் நாகாவோட வண்டி தானே? - இப்படித்தான சொல்லுச்சு//அண்ணன்னா சொல்லுச்சு?.. எனக்கு தாத்தான்னு சொன்னமாதிரி இருக்குது..:)//

எதுக்கும் காதை கொண்டுபோய் டாகுடர் கிட்டே காட்டு!

நாகராஜசோழன் MA said...

//எஸ்.கே said...

கடைசியா அந்த வண்டியை எந்த காயலாங்கடையில போட்டீங்க?//

எஸ்கே, இன்னும் அந்த வண்டி என்கிட்டே இருக்கு. இதுபோல் இன்னும் நிறைய காதல் காவியம் அந்த வண்டிக்கு இருக்கு.

நாகராஜசோழன் MA said...

//Madhavan Srinivasagopalan said...

// அப்படி போகும் போது ஒரு நாள் அந்த பஸ்சில் இருக்கும் ஒரு பொண்ணு அவனைப் பார்த்து சிரித்திருக்கிறாள். //
ஒரு பொண்ணு சிரிக்கப்டாதே..
வந்துடும் நம்மாளுங்களுக்கு..

தெரிஞ்சிக்க.. ஒரு பொண்ணு சிரிச்சா..
மெதுவா குனிஞ்சு.. யாருக்கும் தெரியாம.. பேன்ட் ஜிப்ப சரியா மூடி இருக்கோமானு பாக்கணும்..

இது பற்றி பன்னியார், மற்றும் ரமேஷின் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன..//

இது தெரியாம போச்சே!

நாகராஜசோழன் MA said...

//கோமாளி செல்வா said...

// எஸ்.கே said...
கடைசியா அந்த வண்டியை எந்த காயலாங்கடையில போட்டீங்க?
//

அதுக்கு வண்டி ஓனர் ஒத்துக்கனும்ல ?!//

அதானே? எங்கப்பா எப்பவும் ஒத்துக்க மாட்டார்.

அரசன் said...

காதல் வாகனம் கலக்கல் ..

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நீங்க கலக்குங்க பாஸ்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நல்ல நகைசுவை பதிவு

வெறும்பய said...

தங்களை தொடர் பதிவு எழுத அளித்துள்ளேன்.. (ஒழுங்கு மரியாதையா எழுது)

வடக்குபட்டி ராம்சாமி said...

சோழரே எனக்கு ஒரு ஆர் எக்ஸ் 100 வேணும் கிடைக்குமா?