குறிப்பு

என் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.

Tuesday, August 9, 2011

மூன்று!

பதிவுலகில் அனைவரும் மூன்று என்று மூன்றைப் பற்றி எழுதிவிட்டார்கள். என்னையும் எழுத அன்போட அழைத்த வெறும்பய ஜெயந்த் அவர்களுக்கு நன்றி சொல்லி என்னைப் பாதித்த/எனக்குப் பிடித்த மூன்றுகள் பற்றி இங்கே சிறப்புரை மன்னிக்கவும், எழுதப் போகிறேன்.


1. விரும்பும் 3 விஷயங்கள்
அ.  தமிழ் இலக்கியங்கள் படிக்க
ஆ. என்னுடைய தண்டர்பேர்டில் நாள்கணக்காய் ஊர் சுற்ற
இ.  இரயில் பயணத்தில் நிலா


2. விரும்பாத 3 விஷயங்கள்
அ. தூங்கும்போது எழுப்புவது
ஆ.பொய் பேசுபவர்கள்
இ. லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்


3. பயப்படும் 3 விஷயங்கள்
அ. இயற்கை
ஆ. டாகுடர்/பெரிய டாகுடர் படங்கள் பார்க்க
இ. அறிவாளி போல் நடிப்பவர்கள்


4. புரியாத 3 விஷயங்கள்
அ. தோழி
ஆ. திரும்பவும் அதே இயற்கை
இ.  பிரபஞ்சம்


5. உங்கள் மேஜையில் இருக்கும் 3 பொருட்கள்
அ. மடிக்கணினி
ஆ. அலைபேசி
இ. என்னுடைய பழைய ஹீரோ பேனா


6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்
அ.  செய்திகள் எந்த டிவி சேனலிலும்
ஆ. என் டேமேஜர்கள்
இ. கடவுள் இல்லை என சொல்லுபவர்கள் செய்யும் கூத்து


7. இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்
அ. விட்டத்தைப் பார்க்கிறேன்
ஆ. யோசிக்கிறேன்
இ. யோ...........சிக்கிறேன்


8. வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்கள்
அ. எம் எல் ஏ ஆகுவது
ஆ. ஒரு முறையாவது இமயமலை போய் வரணும்
இ. துறவறம்


9. உங்களால் செய்து முடிக்க கூடிய 3 விஷயங்கள்
அ. தூங்குதல்
ஆ. சாப்பிடுதல்
இ.  பிளாக்/பஸ்/ட்வீட் படித்தல்


10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்
அ. எல்லா மொழிகளையும் (தமிழும்)
ஆ. ஏரோப் பிளான் ஓட்ட
இ. கப்பலில் பயணம் செய்ய


11. பிடித்த 3 உணவு விஷயங்கள்
அ. சாம்பார்
ஆ. தோசை
இ. பலா


12. கேட்க விரும்பாத 3 விஷயங்கள்
அ. டாகுடர் முதலமைச்சர் ஆவதாக சொல்வது
ஆ. தண்ணியடித்து விட்டு புலம்பும் மக்களின் வார்த்தைகள்
இ. என்னை அறிவாளி என்று சொல்வதை


13. அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்
அ. அன்பே அன்பே கொல்லாதே
ஆ. காதலின் தீபம் ஒன்று
இ. ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்


14. பிடித்த 3 படங்கள்
அ. சுறா
ஆ. ஆதி
இ. நரசிம்மா


15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்
அ. என்னோட இதயம்
ஆ. இயற்கை
இ.  காற்று


16. இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேர்
அ. தமிழில் பதிவு எழுதுபவர்கள்
ஆ. தமிழில் பஸ் விடுபவர்கள்
இ. தமிழில் ட்வீட்டுபவர்கள்