குறிப்பு

என் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.

Monday, November 15, 2010

திருப்பூர் பனியனும் ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டும்

            தீபாவளிக்கு ஊருக்கு செல்வதற்காக அந்த புதன் கிழமையன்று அவசர அவசரமாய் அலுவலகத்தில் இருந்து கிளம்பிக்  கொண்டிருந்தேன். அப்போது எதிரே வந்தான் என்னோடு பணியாற்றும் நண்பன்.

             "மச்சி ஒரு வாரம் லீவ் போட்டுட்டு ஊருக்கு போறே, எனக்காக ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?" என்றான். "கண்டிப்பா பன்றேன் மச்சி" என்றேன் அவனிடம் வில்லங்கத்தை வாங்குது தெரியாமல். "உங்க ஊருல இருந்து திருப்பூர் பக்கம் தானே, அப்படியே எனக்கு ஒரு நாலு செட் T - ஷர்ட்  எடுத்துட்டு வந்துடு" என்றான். அவன் கிருஷ்ணகிரி பக்கம் அதனால் திருப்பூர் என்றாலே T - ஷர்ட் என நினைத்து விட்டான் போலும்.

                    மச்சி திருப்பூர்ல நல்ல T - ஷர்ட் எல்லாம் கிடைக்காதுடா, நல்ல T - ஷர்ட் எல்லாம் எக்ஸ்போர்ட் பண்ணிடுவாங்க, எப்படி ஊட்டில வெள்ளை உருளைக் கிழங்குகளை எக்ஸ்போர்ட் பண்ணிட்டு நமக்கு மோசமானதை கொடுக்கிறார்களோ அதுபோல என்று  கம்யூனிசம் பேசினேன் அவனிடம். "வாங்கி வர காசில்லனு சொல்லு" என்று முறைத்தபடி சென்றான். "திருப்பூர் போனா கண்டிப்பா வாங்கிட்டு வரேன்" என்று அவனிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.

                  எதிரே இன்னொரு நண்பன் வந்தான். இவன் சென்னையில் செட்டில் ஆனவன். "மச்சி  தீபாவளிய நல்லா என்ஜாய் பண்ணிட்டு வரும் போது வீட்டுலே இருந்து ரெண்டு கிலோ மஞ்சள் கொண்டு வாடா" என்றான். T - ஷர்ட் வாங்குவதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை என நினைத்துக் கொண்டேன் மஞ்சளின் மகிமை தெரியாமல். அடித்து பிடித்து சென்ட்ரல் சென்று கோச் தேடி ஏறி உட்காரவும் ட்ரைன் கிளம்பவும் சரியாக இருந்தது.

                 அது திருவனந்தபுரம் மெயில். இந்த ட்ரைன் தமிழர்களுக்காக இயக்கப் படுவதாக தெரியவில்லை. ஏனென்றால் சேலம், ஈரோடுக்கு அடுத்து பாலக்காட்டில் தான் நிற்குமாம். திருப்பூர், கோயம்புத்தூர் ஸ்டேஷன்களில் நிற்காதாம். நள்ளிரவு 1 .30 மணிக்கு ஈரோட்டில் இறங்கி 2 .30 க்கு வீடு வந்தோம் நானும் எனது தம்பியும்.

               மறுநாள் காலையில் நானும் தம்பியும் அப்பா, அம்மாவுடன்  கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். திருப்பூர் பனியன் கம்பனிகளின் வரவால் தோட்ட வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை என சொன்னார்கள். மேலும் அரசின் நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தால் இருந்த மிச்ச ஆட்களும் அங்கு சென்று விடுவதால் விவசாயமே செய்ய முடியவில்லை என்றார்கள். "தோட்டத்துக்கு வந்தால் வேலை செய்யணும் ஆனா நூறு  நாள் வேலைக்கு  போனால் வேலை செய்யத் தேவை இல்லை கமிசன் போக தொண்ணூறு ரூபாய் கிடைக்கும் அதனால யாரும் வர்றதில்லை" என்றார் அப்பா.

               திருப்பூர் என்றதும் நண்பன் சொன்ன T - ஷர்ட் ஞாபகம் வந்தது. நண்பன் கேட்டதை அம்மாவிடம் சொன்னேன். "தீபாவளி சமயம் என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும், தீபாவளி முடிஞ்சு போய் எடுத்துக்கோ" என்றார் அம்மா. "இன்னொரு நண்பனுக்கு மஞ்சள் ரெண்டு கிலோ வேணும் அதையும் எடுத்து வைங்க" என்றேன். "மஞ்சள் ஒரு கிலோ 150 - 200 ரூபாய்க்கு போகுது, ஒரு சட்டை (குவிண்டால்) மஞ்சள் பதினஞ்சாயிரம் தெரியுமா?" என்றார் அப்பா. "பதினஞ்சாயிரமா??" என கோரஸாக கேட்டோம் நானும் தம்பியும். எனக்கு தெரிந்து எட்டாயிரம் வரை விற்றது ஞாபகம் இருக்கிறது. ஒரு ஆறு ஏழு மாசமாகவே மஞ்சள் பத்தாயிரத்திற்கு மேல விற்கிறது  என்று சொன்னார்கள்.

               "ஆளும் கெடைக்கிறது இல்ல, நீங்க ரெண்டு பேரும் இதுவரைக்கும் வீட்டுக்கு  கொடுத்த பணத்துல ஒரு ஜோடி காளை கூட வாங்க முடியல. அதனால அடுத்த வருஷம் இன்னும் ரெண்டு ஏக்கர் சேர்த்து மஞ்சள் போடுறேன். ரெண்டு பேரும் அதைய பார்த்துக்கங்க, அதுவே போதும்" என்றார் அப்பா.
                
67 comments:

எஸ்.கே said...

மஞ்சளுக்கு இவ்வளவு விலையா? ஆச்சரியமாக உள்ளது!

Ramesh said...

//ரெண்டு பேரும் அதைய பார்த்துக்கங்க, அதுவே போதும்" என்றார் அப்பா.

இவனுங்ககிட்ட சம்பளத்துக்கு மாறடிக்கறதுக்கு.. அது நம்ம வேலை.. சந்தோசமா செய்யலாம்.. என்னயும் உங்க ஆட்டத்துல சேத்துக்குங்க..

Unknown said...

ரொம்ப கழிச்சு ஒரு பதிவு போட்டச்சுபோல

எல் கே said...

மஞ்சள் மட்டும் அல்ல , பல உணவுப் பொருட்களின் விலை இந்த காரணங்களால் ஏறியுள்ளது

Arun Prasath said...

விவசாயம் செஞ்சா தான் இனி வாழ்க்கை போல

இம்சைஅரசன் பாபு.. said...

உங்கப்பா வும் அம்மாவும் கரெக்ட் அ தானே சொல்லி இருக்காங்க மக்கா ....இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி விவசாயம் தன முக்கிய தொழிலாக இதுக்கும் பாருங்க மக்கா

Unknown said...

மஞ்சள் வெலைய பார்த்தால் யாரும் யாரையும் மஞ்ச மாக்கான் கூறமாட்டார்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அடுத்த வருஷம் இன்னும் ரெண்டு ஏக்கர் சேர்த்து மஞ்சள் போடுறேன். ரெண்டு பேரும் அதைய பார்த்துக்கங்க, அதுவே போதும்" என்றார் அப்பா.//

அப்ப அடுத்த வருஷம் நீங்க மஞ்ச மாய்க்கான் ஆகிடுவீங்க.

Madhavan Srinivasagopalan said...

இன்ட்லில.. ஒட்டு போட்டாச்சு..
அட.. நெகடிவ் ஒட்டு இலிங்க.. பாசிடிவ் தான்..

ஒங்க பிரண்டு பொன் நம்பர் தாங்க.. ரெண்டு பேத்தையும் நல்லா ஒரு கேள்வியாவது கேக்கணும்..

(மஞ்சள் கெடைச்சுதா?
பனியன் கெடைச்சுதா? )

ஹரிஸ் Harish said...

அதனால அடுத்த வருஷம் இன்னும் ரெண்டு ஏக்கர் சேர்த்து மஞ்சள் போடுறேன். ரெண்டு பேரும் அதைய பார்த்துக்கங்க,//

அப்படியே ரெண்டு மாடும் ...
(நீ மேய்க்க வர்றியானு கேக்க கூடாது)

அருண் பிரசாத் said...

எதார்த்தமாக சொன்னாலும்... நாட்டின் நிலவரத்தை சொல்லி உள்ளீர்கள்

ஜெயந்த் கிருஷ்ணா said...

அம்மாடி இம்புட்டு விலையா மஞ்சளுக்கு...!!!!

NaSo said...

//எஸ்.கே said...

மஞ்சளுக்கு இவ்வளவு விலையா? ஆச்சரியமாக உள்ளது!
//

ஆமாங்க கடந்த வருடத்திலிருந்து Rs. 10000க்கு மேல் விற்கிறது.

செல்வா said...

/
மறுநாள் காலையில் நானும் தம்பியும் அப்பா, அம்மாவுடன் கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். திருப்பூர் பனியன் கம்பனிகளின் வரவால் தோட்ட வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை என சொன்னார்கள். மேலும் அரசின் நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தால் இருந்த மிச்ச ஆட்களும் அங்கு சென்று விடுவதால் விவசாயமே செய்ய முடியவில்லை என்றார்கள். ///

இது உண்மைதான் அண்ணா ., நம்ம ஊர்ப்பக்கம் விவசாயம் ரொம்ப மோசமா போயிட்டு இருக்கு ., அதிலும் பனியன் கம்பனி வண்டிகள் வீட்டுக்கே வந்து ஆட்களைக் கூட்டிட்டுப்போயடரதால தோட்ட வேலை ரொம்ப நலிவடைந்து போயிருக்கு. அதே மாதிரி மஞ்சள் விலை ஏறி எவ்ளோ நாள் ஆச்சு.. ஆறு மாசத்துகேல்லாம் முன்னாடியே மஞ்சள் விலை ஏறிடுச்சு .. பொகயிலை போட்டவங்க நிறைய பேர் மஞ்சளுக்குத் திரும்பியிருக்காங்க.. அதே மாதிரி இப்ப மழை பெஞ்சிருக்கறது கொஞ்சம் நல்ல விசயம்தான். அப்பா சொன்னது மாதிரி விவசாயியா மாறிடுங்க . நல்லா இருக்கும் ..!!

NaSo said...

// பிரியமுடன் ரமேஷ் said...

//ரெண்டு பேரும் அதைய பார்த்துக்கங்க, அதுவே போதும்" என்றார் அப்பா.

இவனுங்ககிட்ட சம்பளத்துக்கு மாறடிக்கறதுக்கு.. அது நம்ம வேலை.. சந்தோசமா செய்யலாம்.. என்னயும் உங்க ஆட்டத்துல சேத்துக்குங்க..
//

ஆமாங்க. அப்படியே ஆற்றோரத்தில் ஒரு பாத்து ஏக்கர் பாருங்க.

செல்வா said...

// வெறும்பய said...
அம்மாடி இம்புட்டு விலையா மஞ்சளுக்கு...!!!!//

எங்க ஊரோட சிறப்பு மஞ்சள்தான்..

NaSo said...

// நா.மணிவண்ணன் said...

ரொம்ப கழிச்சு ஒரு பதிவு போட்டச்சுபோல
//

என்ன செய்ய? கொஞ்சம் ஆணி அதிகம் அதான்.

NaSo said...

//LK said...

மஞ்சள் மட்டும் அல்ல , பல உணவுப் பொருட்களின் விலை இந்த காரணங்களால் ஏறியுள்ளது
//

ஆமாங்க ஆனால் மஞ்சள் விலை தங்கத்தின் விலைக்கு ஈடாக உயர்ந்துள்ளது.

NaSo said...

//Arun Prasath said...

விவசாயம் செஞ்சா தான் இனி வாழ்க்கை போல
//

விவசாயத்த சரியாகச் செய்தால் போதும். நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.

NaSo said...

//இம்சைஅரசன் பாபு.. said...

உங்கப்பா வும் அம்மாவும் கரெக்ட் அ தானே சொல்லி இருக்காங்க மக்கா ....இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி விவசாயம் தன முக்கிய தொழிலாக இதுக்கும் பாருங்க மக்கா
//

ஆனா விவசாயம் செய்ய நிலம் கெடைக்காது போலிருக்குங்க பாபு.

NaSo said...

//நா.மணிவண்ணன் said...

மஞ்சள் வெலைய பார்த்தால் யாரும் யாரையும் மஞ்ச மாக்கான் கூறமாட்டார்கள்
//

கரெக்ட்ங்க.

NaSo said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அடுத்த வருஷம் இன்னும் ரெண்டு ஏக்கர் சேர்த்து மஞ்சள் போடுறேன். ரெண்டு பேரும் அதைய பார்த்துக்கங்க, அதுவே போதும்" என்றார் அப்பா.//

அப்ப அடுத்த வருஷம் நீங்க மஞ்ச மாய்க்கான் ஆகிடுவீங்க.
//

ஆனா நீங்க ஏற்கனவே அப்படித்தான்னு எல்லோரும் சொல்லுறாங்களே உண்மையா போலீஸ் கார்?

NaSo said...

//Madhavan said...

இன்ட்லில.. ஒட்டு போட்டாச்சு..
அட.. நெகடிவ் ஒட்டு இலிங்க.. பாசிடிவ் தான்..

ஒங்க பிரண்டு பொன் நம்பர் தாங்க.. ரெண்டு பேத்தையும் நல்லா ஒரு கேள்வியாவது கேக்கணும்..

(மஞ்சள் கெடைச்சுதா?
பனியன் கெடைச்சுதா? )
//

பனியன் கெடச்சது ஆனா மஞ்சள் கெடைக்கலே. (என்னா ஒரு வில்லத்தனம்??)

NaSo said...

// ஹரிஸ் said...

அதனால அடுத்த வருஷம் இன்னும் ரெண்டு ஏக்கர் சேர்த்து மஞ்சள் போடுறேன். ரெண்டு பேரும் அதைய பார்த்துக்கங்க,//

அப்படியே ரெண்டு மாடும் ...
(நீ மேய்க்க வர்றியானு கேக்க கூடாது)
//

பரவால்லீங்க, உங்களுக்கு மேய்க்க தெரியாதுன்னு யாருக்கும் சொல்ல மாட்டேன்.

NaSo said...

//அருண் பிரசாத் said...

எதார்த்தமாக சொன்னாலும்... நாட்டின் நிலவரத்தை சொல்லி உள்ளீர்கள்
//

போகிற போக்கை பார்த்தால் உணவுப் பொருள் வாங்குவது கூட கஷ்டமாகிடும் போலிருக்குங்க அருண்.

NaSo said...

//வெறும்பய said...

அம்மாடி இம்புட்டு விலையா மஞ்சளுக்கு...!!!!
//

ஆமா மச்சி, ஒரு குவிண்டால் மஞ்சள் இருந்தால் ஒரு சவரன் தங்கம் வாங்கிடலாம்.

ஹரிஸ் Harish said...

பரவால்லீங்க, உங்களுக்கு மேய்க்க தெரியாதுன்னு யாருக்கும் சொல்ல மாட்டேன்.//
அப்படினா ரெண்டுக்கு நாலா வாங்குங்க சேந்து மேய்ப்போம்..

NaSo said...

// ப.செல்வக்குமார் said...

இது உண்மைதான் அண்ணா ., நம்ம ஊர்ப்பக்கம் விவசாயம் ரொம்ப மோசமா போயிட்டு இருக்கு ., அதிலும் பனியன் கம்பனி வண்டிகள் வீட்டுக்கே வந்து ஆட்களைக் கூட்டிட்டுப்போயடரதால தோட்ட வேலை ரொம்ப நலிவடைந்து போயிருக்கு. அதே மாதிரி மஞ்சள் விலை ஏறி எவ்ளோ நாள் ஆச்சு.. ஆறு மாசத்துகேல்லாம் முன்னாடியே மஞ்சள் விலை ஏறிடுச்சு .. பொகயிலை போட்டவங்க நிறைய பேர் மஞ்சளுக்குத் திரும்பியிருக்காங்க.. அதே மாதிரி இப்ப மழை பெஞ்சிருக்கறது கொஞ்சம் நல்ல விசயம்தான். அப்பா சொன்னது மாதிரி விவசாயியா மாறிடுங்க . நல்லா இருக்கும் ..!!
//

ஆமா செல்வா, எங்க ஊருல மொத்தம் நூறு வீடுகள் தான் இருக்கு. ஆனா திருப்பூர்லிருந்து பத்து வண்டிகள் வருது. இப்படியே போனால் நம்ம ஊரில் விவசாயம் செய்யவே முடியாது. சென்னையை சுற்றியுள்ள கிராமங்கள் போல நம்ம ஊரும் ஆகிடும்.

karthikkumar said...

மஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்குது மக்கா. என்ன விளைச்சல்தான் முன்பு இருந்ததைவிட குறைவாகிவிட்டது.

karthikkumar said...

நீங்க எந்த ஊரு பங்காளி

ரஹீம் கஸ்ஸாலி said...

ஏன்பா, சோழ பரம்பரை எம்.எல்.ஏ, உங்க நண்பர்களுக்கு டி.ஷர்ட்டும், மஞ்சளும் வாங்கிக்கொடுத்தீங்களா? இல்லை ...வாங்கிக்கட்டிகிட்டீங்களான்னு சொல்லவே இல்லை.

ராஜகோபால் said...

அடுத்தவன் முன்னாடி கைகட்டி நிக்கற பொழப்புக்கு இது சுவர்க்கம் நண்பா
என்ன பண்ண
வேல்லகாரனக்கு சலாம் போட்டாதான் காந்தித்தாத்தா நம்மள பாது சிரிகிராறு
இல்லன்னா அவர நாம கண்ணால கூட பாக்க முடியல

ஆர்வா said...

மஞ்ச மாக்கான்'ங்கிற பேரு இதனால மாறினா சரிதானுங்கோ.....

சி.பி.செந்தில்குமார் said...

நாகா,ரொம்ப நாள் கழிச்சு பதிவு போட்டாலும் நச்சுனு இருக்கு.விவசாயம் பற்றிய விழிப்புணர்வும் ,ஏக்கங்களும் உள்ளடங்கி இருக்கு.

சி.பி.செந்தில்குமார் said...

நா.மணிவண்ணன் said...

மஞ்சள் வெலைய பார்த்தால் யாரும் யாரையும் மஞ்ச மாக்கான் கூறமாட்டார்கள்

மணீ என்னை நக்கல் அடிச்சா கோபிச்சுக்குவேன்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அடுத்த வருஷம் இன்னும் ரெண்டு ஏக்கர் சேர்த்து மஞ்சள் போடுறேன். ரெண்டு பேரும் அதைய பார்த்துக்கங்க, அதுவே போதும்" என்றார் அப்பா.//

அப்ப அடுத்த வருஷம் நீங்க மஞ்ச மாய்க்கான் ஆகிடுவீங்க.

அண்ணன் சிவப்பு மாக்கான்யா பார்த்தீங்களா.சிவப்பு கலர் டிரஸ் போட்டிருக்கார்

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை காதலன் said...

மஞ்ச மாக்கான்'ங்கிற பேரு இதனால மாறினா சரிதானுங்கோ.....

மணிகண்டா,என் பதிவை கிண்டல் பண்ணுனா என்க்கு கெட்ட கோபம் வந்துடும்...

Unknown said...

மஞ்சள் மட்டுமல்ல இனி விவசாயப் பொருள் அனைத்துக்குமே மவுசுதான் ...

கருடன் said...

மஞ்சள் இவ்வளோ விலையா?? சரி ட்-சர்ட் வாங்கினிங்களா இல்லையா?

Unknown said...

மஞ்சள் இவ்ளோ விலை விக்குதா?? அதிர்ச்சியா இருக்குங்க..

அருமையான நடையில் எழுதியிருக்கீங்க நண்பா.. வாழ்த்துக்கள்..

RVS said...

//"தோட்டத்துக்கு வந்தால் வேலை செய்யணும் ஆனா நூறு நாள் வேலைக்கு போனால் வேலை செய்யத் தேவை இல்லை கமிசன் போக தொண்ணூறு ரூபாய் கிடைக்கும் அதனால யாரும் வர்றதில்லை" என்றார் அப்பா.//
எம்.எல். ஏ .. இதுபோல நிறைய அநியாயம் நடக்குது.. வேலையே செய்யாமல் கணக்குல ருபாய். யார் என்னத்த கேக்கறது.. உண்மையா உழைக்கிறவனுக்கு ஆழாக்கு அரிசி கூட மிஞ்சாது போலருக்கு..
மஞ்சள் விலை கேக்கவே சிகப்பா இருக்கு..

ராஜ நடராஜன் said...

விலை ஒரு பக்கமிருக்கட்டும்.இதில் உற்பத்தியாளருக்கு எவ்வளவு லாபம்ன்னு சொல்லுங்க.

அன்பரசன் said...

//அடுத்த வருஷம் இன்னும் ரெண்டு ஏக்கர் சேர்த்து மஞ்சள் போடுறேன். ரெண்டு பேரும் அதைய பார்த்துக்கங்க, அதுவே போதும்"//

அது எவ்வளவோ மேல்.

ப்ரியமுடன் வசந்த் said...

ரெண்டு ஏக்கர்ல அரை ஏக்கர் எனக்கு கொடுத்துடுங்க எம் எல் ஏ வாழ்க்கைய மஞ்சளாவே ஓட்டிடுவேன் எத்தனை நாளைக்கு பாலைவனத்துல இருந்துகிட்டு மஞ்சளாவே யூரின் போறது :(

Philosophy Prabhakaran said...

கொஞ்ச நாளா ஆளைக் காணோம்... ஊருக்கு போயிட்டு இப்போதான் வந்தீர்களா... உங்களை யாரோ ஒரு தொடர்பதிவிற்கு அழைத்ததாக ஞாபகம்... அதை எப்போ எழுதுவீங்க...

NaSo said...

//karthikkumar said...

மஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்குது மக்கா. என்ன விளைச்சல்தான் முன்பு இருந்ததைவிட குறைவாகிவிட்டது.
//

ஆமாம் பங்காளி.

NaSo said...

// karthikkumar said...

நீங்க எந்த ஊரு பங்காளி
//

கோபி - குன்னத்தூர் சாலையில் உள்ள செவியூர்க்கு பக்கம்.

NaSo said...

//ரஹீம் கஸாலி said...

ஏன்பா, சோழ பரம்பரை எம்.எல்.ஏ, உங்க நண்பர்களுக்கு டி.ஷர்ட்டும், மஞ்சளும் வாங்கிக்கொடுத்தீங்களா? இல்லை ...வாங்கிக்கட்டிகிட்டீங்களான்னு சொல்லவே இல்லை
//

ஹி ஹி T-ஷர்ட் மட்டும் வாங்கிக் கொடுத்தேன்.

NaSo said...

// ராஜகோபால் said...

அடுத்தவன் முன்னாடி கைகட்டி நிக்கற பொழப்புக்கு இது சுவர்க்கம் நண்பா
என்ன பண்ண
வேல்லகாரனக்கு சலாம் போட்டாதான் காந்தித்தாத்தா நம்மள பாது சிரிகிராறு
இல்லன்னா அவர நாம கண்ணால கூட பாக்க முடியல
//

ஆமாம் நண்பா சொந்த கால்ல நிற்கலாம்.

NaSo said...

// கவிதை காதலன் said...

மஞ்ச மாக்கான்'ங்கிற பேரு இதனால மாறினா சரிதானுங்கோ.....
//

மஞ்ச மாக்கானுக்கும் மஞ்சளுக்கும் சம்பந்தம் இல்லையென்று நினைக்கிறேன் நண்பா.

NaSo said...

//சி.பி.செந்தில்குமார் said...

நாகா,ரொம்ப நாள் கழிச்சு பதிவு போட்டாலும் நச்சுனு இருக்கு.விவசாயம் பற்றிய விழிப்புணர்வும் ,ஏக்கங்களும் உள்ளடங்கி இருக்கு.
//

நிஜம் தான் அண்ணே. நம்ம ஊர் பக்கம் விவசாயி என்று சொன்னால் இப்போது யாருமே மதிப்பது இல்லை.

NaSo said...

// சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அடுத்த வருஷம் இன்னும் ரெண்டு ஏக்கர் சேர்த்து மஞ்சள் போடுறேன். ரெண்டு பேரும் அதைய பார்த்துக்கங்க, அதுவே போதும்" என்றார் அப்பா.//

அப்ப அடுத்த வருஷம் நீங்க மஞ்ச மாய்க்கான் ஆகிடுவீங்க.

அண்ணன் சிவப்பு மாக்கான்யா பார்த்தீங்களா.சிவப்பு கலர் டிரஸ் போட்டிருக்கார்
//

அசிங்கப்பட்டார் போலீஸ் கார்.

NaSo said...

//கே.ஆர்.பி.செந்தில் said...

மஞ்சள் மட்டுமல்ல இனி விவசாயப் பொருள் அனைத்துக்குமே மவுசுதான் ...
//

ஆமாம் அண்ணா. இனிமேல் அனைத்து விவசாயப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே தான் செல்லும்.

NaSo said...

//TERROR-PANDIYAN(VAS) said...

மஞ்சள் இவ்வளோ விலையா?? சரி ட்-சர்ட் வாங்கினிங்களா இல்லையா?
//

T-ஷர்ட் வாங்கினேன் மச்சி. ஆனால் மஞ்சள் வாங்க முடியலே.

NaSo said...

//பதிவுலகில் பாபு said... மஞ்சள் இவ்ளோ விலை விக்குதா?? அதிர்ச்சியா இருக்குங்க.. அருமையான நடையில் எழுதியிருக்கீங்க நண்பா.. வாழ்த்துக்கள்..//

ஆமாம் பாபு. ஆனால் இதுவே இறுதியான விலை அல்ல. இன்னமும் விலை ஏற்றம் இருக்கும் என்று சொல்கிறார்கள்.

NaSo said...
This comment has been removed by the author.
NaSo said...

// RVS said...

//"தோட்டத்துக்கு வந்தால் வேலை செய்யணும் ஆனா நூறு நாள் வேலைக்கு போனால் வேலை செய்யத் தேவை இல்லை கமிசன் போக தொண்ணூறு ரூபாய் கிடைக்கும் அதனால யாரும் வர்றதில்லை" என்றார் அப்பா.//
எம்.எல். ஏ .. இதுபோல நிறைய அநியாயம் நடக்குது.. வேலையே செய்யாமல் கணக்குல ருபாய். யார் என்னத்த கேக்கறது.. உண்மையா உழைக்கிறவனுக்கு ஆழாக்கு அரிசி கூட மிஞ்சாது போலருக்கு..
மஞ்சள் விலை கேக்கவே சிகப்பா இருக்கு..
//

கமிசன் எடுக்கிறவன் ஒரு ஆளுக்கு பத்து ரூபாய் என நூறு ஆட்களுக்கு எடுத்தால் அவனுக்கு ஒரு நாள் வருமானம் ஆயிரம் ரூபாய். அது போக அரசு சம்பளம். உண்மையா உழைத்தால் ஒரு ரூபாய் கூட சேமிக்க முடியாது போலிருக்குங்க.

NaSo said...

//ராஜ நடராஜன் said...

விலை ஒரு பக்கமிருக்கட்டும்.இதில் உற்பத்தியாளருக்கு எவ்வளவு லாபம்ன்னு சொல்லுங்க.
//

மஞ்சள் விலையில் உற்பத்தியாளர்களுக்கு லாபம் அதிகம் தாங்க.

NaSo said...

//அன்பரசன் said...

//அடுத்த வருஷம் இன்னும் ரெண்டு ஏக்கர் சேர்த்து மஞ்சள் போடுறேன். ரெண்டு பேரும் அதைய பார்த்துக்கங்க, அதுவே போதும்"//

அது எவ்வளவோ மேல்.
//

உண்மைதாங்க. (இங்க படுற கஷ்டத்துக்கு)

NaSo said...

//ப்ரியமுடன் வசந்த் said...

ரெண்டு ஏக்கர்ல அரை ஏக்கர் எனக்கு கொடுத்துடுங்க எம் எல் ஏ வாழ்க்கைய மஞ்சளாவே ஓட்டிடுவேன் எத்தனை நாளைக்கு பாலைவனத்துல இருந்துகிட்டு மஞ்சளாவே யூரின் போறது :(
//

அரை ஏக்கர் என்ன ஒரு ஏக்கராகவே எடுத்துக்கங்க. விவசாயம் பார்க்க ஆள் இல்லையென்று தான் கஷ்டப் படுகிறார்கள்.

NaSo said...

// philosophy prabhakaran said...

கொஞ்ச நாளா ஆளைக் காணோம்... ஊருக்கு போயிட்டு இப்போதான் வந்தீர்களா... உங்களை யாரோ ஒரு தொடர்பதிவிற்கு அழைத்ததாக ஞாபகம்... அதை எப்போ எழுதுவீங்க...
//

இந்த வாரத்தில் எழுதிடுவேன் நண்பா.

மங்குனி அமைச்சர் said...

T - ஷர்ட்////

T - ஷர்ட் அப்படின்னா சட்டில T - ன்னு போட்டு இருக்குமா ???

மங்குனி அமைச்சர் said...

உண்மைதான் இப்பொழுது விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பது கஷ்டமாக உள்ளது

தனி காட்டு ராஜா said...

நாகராஜா ....இந்த வருடம் ஈரோடு ,கோவை மாவட்டம் பார்த்த இடம் எல்லாம் ஒரே மஞ்சள் மயமாக உள்ளது .....
இந்த வருடம் மஞ்சள் விலை இறங்க வாய்ப்பு உள்ளதாக சொல்லுகிறார்கள் ....export என்று பெரியதாக ஏதும் இல்லை என்றால் .....

//உண்மைதாங்க. (இங்க படுற கஷ்டத்துக்கு)//

இங்க நீ படுத்தற கஷ்டத்துக்கு...

சரி கெளம்பி வா .....நான் கூட எதிர் காலத்தில் விவசாயம் பார்க்கலாம்(யாராவது செய்தா அதை பார்க்கறது இல்ல .....:) என்று உள்ளேன் ......:)

தினேஷ்குமார் said...

மிஸ்டர் கோல்ட் பிரேம்

மஞ்சளின் மகத்துவம் மருத்துவகுனம்
விவசாயம் படும்பாட்டை சில வரிகளில் சொன்னாலும் தெளிவா சொல்லியிருக்கீக
நல்லது கொஞ்சம் திரும்பி பாப்போம் விவசாயத்தை

கட பக்கம் கொஞ்சம் வர்றது நிகழ்நவீனதுவ கவிதை ஒன்னு ரெடியா இருக்கு

போளூர் தயாநிதி said...

parattugal
polurdhayanithi

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அடேங்கப்பா....மஞ்சளுக்கு இந்த விலையா?