குறிப்பு

என் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.

Thursday, October 28, 2010

தீபாவளியும் புத்தாடைகளும்

                    தீபாவளி நெருங்கிவிட்டது. புதிய உடைகளும் பட்டாசும் இனிப்புவகைகளும் இனி கடைகளெங்கும் வியாபித்திருக்கும். வண்ணவண்ண ஆடைகள் ரங்கநாதன் தெருவெங்கும் நிறைந்திருக்கும்.  தென்னிந்திய, வட இந்திய, மேற்கத்திய ஆடைகள் என  பலதரப்பட்ட ஆடைகள் கிடைக்கும். மனிதன் ஆடைகளால் நாகரிகம் அடைந்தானா அல்லது நாகரிகத்தால் ஆடைகளை அணிந்தானா என்று தெரியவில்லை.


                     ஆடைகளுக்கும் நாகரிகத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஒவ்வொரு நாகரிகமும் தனக்கென தனிப்பட்ட பழக்கவழக்கங்கள், மொழி, கலை, கலாச்சாரம் இவற்றுடன் ஆடைகளையும் கொண்டுள்ளது. ஆடைகள் அந்த நாகரிகத்தின் ஒரு அடையாளமாகவும் கருதலாம். காலங்கள் மாறும்போது ஆடைகளும் அவற்றின் தேவைகளும் மாறுகின்றன. தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் தலைப்பாகை அத்தியாவசியமாய் இருந்தது. ஆனால் இன்று தலைப்பாகை என்றால் என்னவென்றே அறியாத தலைமுறையும் உள்ளது.

                         என்னுடைய பள்ளிக்காலம் கிராமத்திலேயே கழிந்தது. அதுவரை விதவிதமான ஆடைகளை நான் தொலைக்காட்சியில் கண்டதோடு சரி. ஆண்களுக்கு வேட்டி, சட்டை, பான்ட்; பெண்களுக்கு சேலை, தாவணி, பாவாடை அதிக பட்சமாய் சுரிதார். கிராமத்தில் அணிந்திருக்கும் ஆடையால் ஒருவன் மதிப்பிடப் படுவதில்லை. ஆனால் நகரத்தில் ஆடைகள் தான் ஒரு மனிதனின் அந்தஸ்தை நிர்ணயிக்கின்றன. ஒருவன் எவ்வளவு தான் பணம் படைத்தவனாக இருந்தாலும் கிழிந்த ஆடை அணிந்திருந்தால் அவனுடைய வீட்டிற்குள் கூட போக முடியாது.


                          சென்ற வாரத்தில் ஒரு நாள் நண்பர் ஒருவர் வீட்டிற்க்கு நான் சென்ற போது அவர் அப்போதுதான் தீபாவளிக்காக வாங்கி வந்த ஆடைகளை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தார். மொத்தமாக இருபது ஆடைகள்.  "எதற்காக இவ்வளவு  ஆடைகள்? உங்களுக்கு மட்டுமா? இல்லை உறவினர்களுக்கும் சேர்த்து எடுத்து விட்டீர்களா?" என்று கேட்டேன். "இவை அனைத்தும் எனக்கு மட்டுமே!" என்றார்.

 
                            "ஏன் இவ்வளவு ஆடைகள் எடுத்து உள்ளீர்கள்?" எனக்கேட்டதற்கு அவர் "இது எனது சிறு வயது ஆசை. நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். நான் சிறுவனாக இருக்கும் போது எனது நண்பர்களெல்லாம் தீபாவளிக்காக விதவிதமாக ஆடை உடுத்துவார்கள். எனக்கு தீபாவளிக்கு பலகாரமே கிடைக்காது. அப்படி இருந்தும் ஒரு முறை புத்தாடை கேட்டதற்கு விழுந்த அடியில் தீபாவளிக்கு பட்டாசே வெடிக்க முடியாமல் போய்விட்டது. அப்போது கிடைக்காத ஆடைகளுக்காக இப்போது நான் ஒவ்வொரு பண்டிகைக்கும் குறைந்தபட்சம் 10 ஆடைகளாவது எடுக்கிறேன்." என்றார்.

                            இளம் வயதில் நிராகரிக்கப்பட்ட ஏக்கம் இவருக்கு சுயமாகச்  சம்பாதிக்கும் போது கிடைத்தது. ஆனால் இது அனைவருக்கும் வாய்ப்பதில்லை. இன்றும் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ தீபாவளிக்காக மட்டுமல்ல மற்ற நாட்களிலும் புத்தாடைகளுக்காக ஏங்கும் எத்தனையோ குழந்தைகளை நீங்கள் காணலாம்.

 
                                       இன்று எங்கு பார்த்தாலும் ஆடைகளை வாங்கச் சொல்லி ஒரே விளம்பரம்தான். தொலைக்காட்சி, வானொலி, போகும் வழியெங்கும் சுவரில், ப்ளெக்ஸ் பேனரில், பேருந்தின் பின்னால் என எங்கும் விளம்பரமயம். அந்த துணிக்கடைகளில் ஆடைகள் வாங்காவிட்டால் நீங்கள் ஏதோ ஒரு குற்றம் செய்தது போல் மாயை உருவாக்கிவிட்டார்கள். அதுவும் குழந்தைகளை ஆடவிட்டு இளம் நெஞ்சுக்குள் அவர்களின் வியாபாரத்தை நஞ்சாய் விதைக்கிறார்கள்.

                       பள்ளி செல்லும் பிள்ளைகள் தீபாவளிக்கு மறுநாள் புத்தாடை அணிந்து வரலாம் என சொல்லுமளவிற்கு இவர்கள் மாற்றிவிட்டார்கள். தீபாவளி கொண்டாடாதவர்களானாலும் அவர்கள் குழந்தை பள்ளி செல்லுமென்றால் அவர்களும் புத்தாடை எடுத்துத் தரவேண்டும் என்றாகிவிட்டது.

             சமீபத்தில் ஒரு டீ கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தேன். அங்கு வேலை செய்யும் சிறுவன் சுவரில் தென்பட்ட ஒரு துணிக்கடையின் விளம்பரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். நான் அவனிடம், "ஏன் அதையே பார்க்கிறாய்?" என்று கேட்டேன். அதற்கு அவன் "அண்ணா அந்த பான்ட் என்ன விலை இருக்கும்?" என்று ஒரு கார்கோ பான்ட்டைக் காட்டினான். நான் "ஒரு 500 ரூபாய் இருக்கும், எதற்கு கேட்கிறாய்?" என்றேன். "எனக்கு தீபாவளி போனஸ் கிடைக்கும். போனஸ் வந்தவுடனே அந்த கடைக்கு போய் நான் அதே பான்ட்டை வாங்கப் போறேன்" என்றான். அப்போது அவன் கண்ணில் தெரிந்தது ஆர்வமா, ஏக்கமா, நம்பிக்கையா என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
                   

Wednesday, October 20, 2010

செல்போன் செயல்படாமல் போனால்?

 இன்று செல்போன் என்பது நமது வாழ்வின் ஒரு அங்கமாகி விட்டது. செல்போன் இல்லாமல் ஒரு சிலரால் சிறு துரும்பை கூட அசைக்க முடியாது. இன்னும் சிலருக்கு அது பதினோராவது விரல். இவர்களுக்கு எந்நேரமும் செல்போன் வேண்டும் குளிக்கும் போது கூட. திடீரென செல்போன்கள் அனைத்தும் செயல்படாமல் போனால் என்ன நடக்கும்?.


சிலருக்கு எஸ்எம்எஸ் டோன் அல்லது கால் ரிங்டோன் கேட்காமல் இருப்பது சிறிது நாட்களுக்கு தூக்கம் வராமல் போகலாம்.

சிலர் செல்போனை அலாரமாகவும் நேரம் பார்க்கவும் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் ஒரு டைம்பீஸையோ அல்லது கைக்கடிகாரத்தையோ தேட வேண்டி இருக்கும்.

அவசர அழைப்புகளுக்கு காயின் பாக்ஸ் தேடி ஓட வேண்டி இருக்கும்.

மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், தியேட்டர்  போன்ற இடங்களில் ஹலோ, !@#$%^ போன்ற வாக்கியங்களையோ, காதடைக்கும் செல்போன் ரிங்டோன்களையோ கேட்க முடியாது.

பஸ்சிலோ அல்லது ட்ரெயின்யிலோ நன்றாக தூங்கிக்கொண்டிக்கும்போது "என் உச்சி மண்டையில" அப்படீன்னு பக்கத்துக்கு சீட்ல இருந்து சத்தம் வராது.

வீட்டில் இரவிலோ அல்லது பகலிலோ தூங்கிக்கொண்டிக்கும்போது எழுப்பி கிரெடிட் கார்டோ அல்லது கடனோ வாங்கச் சொல்லமாட்டார்கள்.

உங்களுக்கு இந்த பாடல் பிடித்திருந்தால் ஒன்றை அழுத்தவும் என்று பதிவு செய்யப்பட பெண்குரல் தொந்தரவு செய்யாது.


தொப்பையை குறைக்க, இன்சூரன்ஸ், நிலம், வீடு போன்றவற்றை வாங்கச் சொல்லும் எஸ்எம்எஸ் வராது.

காதலி/காதலன் - தொடர்ந்து பேசாததால் அவர்களுக்கிடையேயான சண்டைகள் குறையும்.

"ஏங்க அப்படியே வரும்போது மார்க்கெட் போய் காய்கறி வாங்கி வாங்க" போன்ற மனைவிகள் தொந்தரவுகள் இருக்காது.

"நான் இப்ப கஸ்டமர் கூட ஒரு மீட்டிங்கல இருக்கேன்" என டாஸ்மாக்ல இருந்து பொய் சொல்லத் தேவையில்லை.

ட்ராபிக்ல கஷ்டப்பட்டு வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும்போது "ஹலோ கூடுவாஞ்சேரி கோவிந்தசாமி இருக்காரா?" அப்படின்னு முகம் தெரியாத யாரோ கஷ்டபடுத்த மாட்டார்கள்.

"ம்.. அப்புறம்... ம்.. அப்புறம்..." இப்படி ரூமேட்ஸ் யாரும் நைட்ல உளற மாட்டார்கள்.

கடன் வாங்கியவர்கள் "நான் இப்ப கன்னியாகுமரில இருக்கேன்" என பொய் சொல்லத் தேவையில்லை.

செல்போன் இல்லாததால் வாகன விபத்துக்கள் பெருமளவு குறையும். 

"மச்சான் மாசக் கடைசி ஆயிடுச்சு, ஒரு ரெண்டாயிர ரூபா கொடுடா" இப்படி நண்பர்கள் தொல்லை இருக்காது ஏனென்றால் மொபைல் பில் அப்படியே மிச்சம் ஆகும்.

ஐபாட், மியூசிக் பிளேயர் போன்றவை அதிகம் விற்பனை ஆகும்.

இதற்க்கு மேலும் பயன்கள் இருக்கும். உங்களுக்கு தெரிந்த பயன்களை கமெண்ட்ஸில் போடவும்.

Friday, October 8, 2010

திரும்பவும் Dr விஜய்!!


(Disclaimer:  இது எனக்கு வந்த ஒரு ஆங்கில மடலின் தமிழாக்கம். இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.)
  
P.S. சிரிப்பு கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.

டாகுடரு விஜய் திரும்பவும் வந்துவிட்டார்!
ஒன்டிப்புலியாக!!

 

 மிகவும் அழகாக??

 சும்மா கும்முன்னு(?)..

அய்யய்யோ ...!!!


யம்மா??!!!


 அம்மாடியோ!!!???


 கடவுளே காப்பாத்துப்பா....


 உலக சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக பாடிகார்ட் கெட்டப்..


 டெர்ரரான பாடிகார்ட்??காமெடியான பாடிகார்ட்(?)!!
இந்த படத்தோட முதல் காட்சியில் வானத்த பொளந்துட்டு வர்றாரு நம்ம டாகுடரு விஜய்!!??


எப்பவும் போல மக்களின் நண்பனாய் ஒரு பஞ்ச் டயலாக் (ஹார்ட் ப்ளாக் பஸ்ட்டர் படம் சுறா வில் உள்ளது போல்)

"பாசத்துல 10  நாய்க்கு சமம் வீரத்துல 
100  விஜயகாந்துக்கு சமம் "

ஆனா இந்த படத்துல பஞ்ச் டயலாக் 30  நிமிடம் இருக்கு.


தமிழ்நாட்டின் தலை எழுத்து?

Sunday, October 3, 2010

என்னை பற்றி!!!

வர்ற 2011 சட்டமன்ற தேர்தல்ல, பல்லடம் தொகுதியில சுயேட்சையா நிக்கிறேன்!! அதுக்கு உங்க எல்லோருடைய ஆதரவும் எனக்கு வேணும்!!