குறிப்பு

என் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.

Wednesday, October 20, 2010

செல்போன் செயல்படாமல் போனால்?

 இன்று செல்போன் என்பது நமது வாழ்வின் ஒரு அங்கமாகி விட்டது. செல்போன் இல்லாமல் ஒரு சிலரால் சிறு துரும்பை கூட அசைக்க முடியாது. இன்னும் சிலருக்கு அது பதினோராவது விரல். இவர்களுக்கு எந்நேரமும் செல்போன் வேண்டும் குளிக்கும் போது கூட. திடீரென செல்போன்கள் அனைத்தும் செயல்படாமல் போனால் என்ன நடக்கும்?.

சிலருக்கு எஸ்எம்எஸ் டோன் அல்லது கால் ரிங்டோன் கேட்காமல் இருப்பது சிறிது நாட்களுக்கு தூக்கம் வராமல் போகலாம்.

சிலர் செல்போனை அலாரமாகவும் நேரம் பார்க்கவும் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் ஒரு டைம்பீஸையோ அல்லது கைக்கடிகாரத்தையோ தேட வேண்டி இருக்கும்.

அவசர அழைப்புகளுக்கு காயின் பாக்ஸ் தேடி ஓட வேண்டி இருக்கும்.

மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், தியேட்டர்  போன்ற இடங்களில் ஹலோ, !@#$%^ போன்ற வாக்கியங்களையோ, காதடைக்கும் செல்போன் ரிங்டோன்களையோ கேட்க முடியாது.

பஸ்சிலோ அல்லது ட்ரெயின்யிலோ நன்றாக தூங்கிக்கொண்டிக்கும்போது "என் உச்சி மண்டையில" அப்படீன்னு பக்கத்துக்கு சீட்ல இருந்து சத்தம் வராது.

வீட்டில் இரவிலோ அல்லது பகலிலோ தூங்கிக்கொண்டிக்கும்போது எழுப்பி கிரெடிட் கார்டோ அல்லது கடனோ வாங்கச் சொல்லமாட்டார்கள்.

உங்களுக்கு இந்த பாடல் பிடித்திருந்தால் ஒன்றை அழுத்தவும் என்று பதிவு செய்யப்பட பெண்குரல் தொந்தரவு செய்யாது.

தொப்பையை குறைக்க, இன்சூரன்ஸ், நிலம், வீடு போன்றவற்றை வாங்கச் சொல்லும் எஸ்எம்எஸ் வராது.

காதலி/காதலன் - தொடர்ந்து பேசாததால் அவர்களுக்கிடையேயான சண்டைகள் குறையும்.

"ஏங்க அப்படியே வரும்போது மார்க்கெட் போய் காய்கறி வாங்கி வாங்க" போன்ற மனைவிகள் தொந்தரவுகள் இருக்காது.

"நான் இப்ப கஸ்டமர் கூட ஒரு மீட்டிங்கல இருக்கேன்" என டாஸ்மாக்ல இருந்து பொய் சொல்லத் தேவையில்லை.

ட்ராபிக்ல கஷ்டப்பட்டு வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும்போது "ஹலோ கூடுவாஞ்சேரி கோவிந்தசாமி இருக்காரா?" அப்படின்னு முகம் தெரியாத யாரோ கஷ்டபடுத்த மாட்டார்கள்.

"ம்.. அப்புறம்... ம்.. அப்புறம்..." இப்படி ரூமேட்ஸ் யாரும் நைட்ல உளற மாட்டார்கள்.

கடன் வாங்கியவர்கள் "நான் இப்ப கன்னியாகுமரில இருக்கேன்" என பொய் சொல்லத் தேவையில்லை.

செல்போன் இல்லாததால் வாகன விபத்துக்கள் பெருமளவு குறையும். 

"மச்சான் மாசக் கடைசி ஆயிடுச்சு, ஒரு ரெண்டாயிர ரூபா கொடுடா" இப்படி நண்பர்கள் தொல்லை இருக்காது ஏனென்றால் மொபைல் பில் அப்படியே மிச்சம் ஆகும்.

ஐபாட், மியூசிக் பிளேயர் போன்றவை அதிகம் விற்பனை ஆகும்.

இதற்க்கு மேலும் பயன்கள் இருக்கும். உங்களுக்கு தெரிந்த பயன்களை கமெண்ட்ஸில் போடவும்.

78 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தமிழ்மணத்துல சப்மிட் பண்ணல? (ஆமா ஏன்யா வேற டைமே கிடைக்கலியா? இப்பிடி நட்ட நடு ராத்திரில பதிவு போடுற?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

முக்கியமான நல்லது என்னான்னு கேட்டுக்கோ, பப்ளிக் பிளேசுல, லேடீச ஏடாகூடமா செல்போன வெச்சி படம்புடிக்கிறது குறையும்! இந்தக் கருமாந்திரம் புடிச்சவனுங்களால எல்லாரும் எப்பிடி பயந்து பயந்து சாகுறாங்க, எத்தனை பேரு மௌனமா அழுவுறாங்க! ராஸ்கல்ஸ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன தமிழ்மணத்துல சப்மிட் ஆக மாட்டேங்கிதா? செட்டிங்ஸ் போயி site feed ல post feed redirect URL ரிமோவ் பண்ணுய்யா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

காலேஜ் பசங்க ஒழுங்கா படிப்பானுங்க!

நாகராஜசோழன் MA said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

//

மாம்ஸ் ட்ரை பன்னுனேன். இணைக்க முடியலே.

நாகராஜசோழன் MA said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

தமிழ்மணத்துல சப்மிட் பண்ணல? (ஆமா ஏன்யா வேற டைமே கிடைக்கலியா? இப்பிடி நட்ட நடு ராத்திரில பதிவு போடுற?)
///

என்ன பன்றது மாம்ஸ் ஒரே ஆணி!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மாப்பு, தமிழ்மணத்துல இணைக்கிறதுக்கு மினிமம் 3 பதிவு போட்டிருக்கனும், அதான் ப்ராப்ளம்னு நெனைக்கிறேன்!

Chitra said...

இதற்க்கு மேலும் பயன்கள் இருக்கும். உங்களுக்கு தெரிந்த பயன்களை கமெண்ட்ஸில் போடவும்.

.....அடடா ...செல் போன்ல SMS மூலமாக பலன்கள் பற்றி அனுப்பலாம்னு நினைச்சேனே....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

முக்கியமான நல்லது என்னான்னு கேட்டுக்கோ, பப்ளிக் பிளேசுல, லேடீச ஏடாகூடமா செல்போன வெச்சி படம்புடிக்கிறது குறையும்! இந்தக் கருமாந்திரம் புடிச்சவனுங்களால எல்லாரும் எப்பிடி பயந்து பயந்து சாகுறாங்க, எத்தனை பேரு மௌனமா அழுவுறாங்க! ராஸ்கல்ஸ்!
///

அப்பா பன்னிகுட்டிக்கு வருமானம் இருக்காதே. சாப்பாட்டுக்கு என்ன செய்வாரு

சௌந்தர் said...

"மச்சான் மாசக் கடைசி ஆயிடுச்சு, ஒரு ரெண்டாயிர ரூபா கொடுடா" இப்படி நண்பர்கள் தொல்லை இருக்காது ஏனென்றால் மொபைல் பில் அப்படியே மிச்சம் ஆகும்.///

ஆமா ஆமா இந்த ரமேஷ் நேத்து கூட என் பைக் பெட்ரோல் போடனும் 100 ரூபாய் கொடு கேட்கிறார் முதல் இந்த செல் போன் தூக்கி போடனும்

நாகராஜசோழன் MA said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

மாப்பு, தமிழ்மணத்துல இணைக்கிறதுக்கு மினிமம் 3 பதிவு போட்டிருக்கனும், அதான் ப்ராப்ளம்னு நெனைக்கிறேன்!
//

அப்படிதான் நெனைக்கிறேன் மாம்ஸ்.

நாகராஜசோழன் MA said...

//Chitra said...

இதற்க்கு மேலும் பயன்கள் இருக்கும். உங்களுக்கு தெரிந்த பயன்களை கமெண்ட்ஸில் போடவும்.

.....அடடா ...செல் போன்ல SMS மூலமாக பலன்கள் பற்றி அனுப்பலாம்னு நினைச்சேனே....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....
//

செல்போனே வேண்டாம்னுதான் இந்த பதிவு மேடம்.

நாகராஜசோழன் MA said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

முக்கியமான நல்லது என்னான்னு கேட்டுக்கோ, பப்ளிக் பிளேசுல, லேடீச ஏடாகூடமா செல்போன வெச்சி படம்புடிக்கிறது குறையும்! இந்தக் கருமாந்திரம் புடிச்சவனுங்களால எல்லாரும் எப்பிடி பயந்து பயந்து சாகுறாங்க, எத்தனை பேரு மௌனமா அழுவுறாங்க! ராஸ்கல்ஸ்!
///

அப்பா பன்னிகுட்டிக்கு வருமானம் இருக்காதே. சாப்பாட்டுக்கு என்ன செய்வாரு
//

பகு மாம்ஸ், போலீஸ் கார் உங்களைப்பற்றி தப்பா பேசுறார். அவரோட பேக்ரௌண்ட அப்படியே எல்லார்க்கும் சொல்லிடுங்க.

நாகராஜசோழன் MA said...

//சௌந்தர் said...

"மச்சான் மாசக் கடைசி ஆயிடுச்சு, ஒரு ரெண்டாயிர ரூபா கொடுடா" இப்படி நண்பர்கள் தொல்லை இருக்காது ஏனென்றால் மொபைல் பில் அப்படியே மிச்சம் ஆகும்.///

ஆமா ஆமா இந்த ரமேஷ் நேத்து கூட என் பைக் பெட்ரோல் போடனும் 100 ரூபாய் கொடு கேட்கிறார் முதல் இந்த செல் போன் தூக்கி போடனும்
//

போலீஸ் காருக்கு யாரும் லஞ்சம் தரல போல!

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

காலேஜ் பசங்க ஒழுங்கா படிப்பானுங்க!
//

நீங்க படிக்கும்போது செல்போன் இல்ல. அப்ப நீங்க ஏன் நல்லா படிக்கல??

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

முக்கியமான நல்லது என்னான்னு கேட்டுக்கோ, பப்ளிக் பிளேசுல, லேடீச ஏடாகூடமா செல்போன வெச்சி படம்புடிக்கிறது குறையும்! இந்தக் கருமாந்திரம் புடிச்சவனுங்களால எல்லாரும் எப்பிடி பயந்து பயந்து சாகுறாங்க, எத்தனை பேரு மௌனமா அழுவுறாங்க! ராஸ்கல்ஸ்!
///

அப்பா பன்னிகுட்டிக்கு வருமானம் இருக்காதே. சாப்பாட்டுக்கு என்ன செய்வாரு////

இப்பல்லாம் தொழில்ல போட்டி ரொம்ப அதிகமாயிடிச்சுப்பா, யாரோ ரமேசு ரமேசுன்னு ஒரு ஆளு இப்போ புல்டைமா இந்த வேலதான் பண்றாப்புல, நம்மால தாக்குப்புடிக்க முடியல, அதுனால இந்தக் கருமத்தையெல்லாம் விட்டுபுட்டு, ஊருக்கு போயி புண்ணாக்கு யாவாரம் பண்ணலாம்னு இருக்கேன்!

ப.செல்வக்குமார் said...

நான் தினம் ஒரு மொக்கை அனுப்ப மாட்டேன் .,
அதனால நாட்டுல மக்களின் சந்தோசம் குறைய வாய்ப்பு இருக்கு ..!!

karthikkumar said...

செல்போன் இல்லேன்னா விபத்துக்கள் குறையும்ல பங்காளி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இப்பல்லாம் தொழில்ல போட்டி ரொம்ப அதிகமாயிடிச்சுப்பா, யாரோ ரமேசு ரமேசுன்னு ஒரு ஆளு இப்போ புல்டைமா இந்த வேலதான் பண்றாப்புல, நம்மால தாக்குப்புடிக்க முடியல, அதுனால இந்தக் கருமத்தையெல்லாம் விட்டுபுட்டு, ஊருக்கு போயி புண்ணாக்கு யாவாரம் பண்ணலாம்னு இருக்கேன்!//

பாதிய நீயே தின்னுடுவியே. பின்ன எப்படி வருமானம் வரும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சான் மாசக் கடைசி ஆயிடுச்சு, ஒரு ரெண்டாயிர ரூபா கொடுடா" இப்படி நண்பர்கள் தொல்லை இருக்காது ஏனென்றால் மொபைல் பில் அப்படியே மிச்சம் ஆகும்.///

ஆமா ஆமா இந்த ரமேஷ் நேத்து கூட என் பைக் பெட்ரோல் போடனும் 100 ரூபாய் கொடு கேட்கிறார் முதல் இந்த செல் போன் தூக்கி போடனும் //

ஒரு நூறு ரூப கொடுக்க வக்கில்லை பேச்சப்பாரு

நாகராஜசோழன் MA said...

// ப.செல்வக்குமார் said...

நான் தினம் ஒரு மொக்கை அனுப்ப மாட்டேன் .,
அதனால நாட்டுல மக்களின் சந்தோசம் குறைய வாய்ப்பு இருக்கு ..!!
//

செல்வா நீ மொக்கை போடாமா இருந்தா நாட்டுல எல்லாரும் சந்தோசமாத்தான் இருப்பாங்க!

நாகராஜசோழன் MA said...

// karthikkumar said...

செல்போன் இல்லேன்னா விபத்துக்கள் குறையும்ல பங்காளி
//

பங்காளி இதை நானே பதிவுலே சொல்லிட்டேன்.

நாகராஜசோழன் MA said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்பல்லாம் தொழில்ல போட்டி ரொம்ப அதிகமாயிடிச்சுப்பா, யாரோ ரமேசு ரமேசுன்னு ஒரு ஆளு இப்போ புல்டைமா இந்த வேலதான் பண்றாப்புல, நம்மால தாக்குப்புடிக்க முடியல, அதுனால இந்தக் கருமத்தையெல்லாம் விட்டுபுட்டு, ஊருக்கு போயி புண்ணாக்கு யாவாரம் பண்ணலாம்னு இருக்கேன்!
//

மாம்ஸ் தொழிலதிபர் ஆகப் போறீங்களா?

karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
// karthikkumar said...

செல்போன் இல்லேன்னா விபத்துக்கள் குறையும்ல பங்காளி//

பங்காளி இதை நானே பதிவுலே சொல்லிட்டேன்.///
வேகமா படிச்சிட்டேன் மக்கா அதான் விடுபட்டு போச்சு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//இப்பல்லாம் தொழில்ல போட்டி ரொம்ப அதிகமாயிடிச்சுப்பா, யாரோ ரமேசு ரமேசுன்னு ஒரு ஆளு இப்போ புல்டைமா இந்த வேலதான் பண்றாப்புல, நம்மால தாக்குப்புடிக்க முடியல, அதுனால இந்தக் கருமத்தையெல்லாம் விட்டுபுட்டு, ஊருக்கு போயி புண்ணாக்கு யாவாரம் பண்ணலாம்னு இருக்கேன்!//

பாதிய நீயே தின்னுடுவியே. பின்ன எப்படி வருமானம் வரும்//////

சாப்பாட்டு செலவு மிச்சம்ல! (கடையே அதுக்குத்தானே?)

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//சான் மாசக் கடைசி ஆயிடுச்சு, ஒரு ரெண்டாயிர ரூபா கொடுடா" இப்படி நண்பர்கள் தொல்லை இருக்காது ஏனென்றால் மொபைல் பில் அப்படியே மிச்சம் ஆகும்.///

ஆமா ஆமா இந்த ரமேஷ் நேத்து கூட என் பைக் பெட்ரோல் போடனும் 100 ரூபாய் கொடு கேட்கிறார் முதல் இந்த செல் போன் தூக்கி போடனும் //

ஒரு நூறு ரூப கொடுக்க வக்கில்லை பேச்சப்பாரு/////

யோவ் உனக்கு ஒரு நாள் தரலாம் ரெண்டு நாள் தரலாம் தினமும் கேட்டா என்னய்யா பண்றது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாகராஜசோழன் MA said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்பல்லாம் தொழில்ல போட்டி ரொம்ப அதிகமாயிடிச்சுப்பா, யாரோ ரமேசு ரமேசுன்னு ஒரு ஆளு இப்போ புல்டைமா இந்த வேலதான் பண்றாப்புல, நம்மால தாக்குப்புடிக்க முடியல, அதுனால இந்தக் கருமத்தையெல்லாம் விட்டுபுட்டு, ஊருக்கு போயி புண்ணாக்கு யாவாரம் பண்ணலாம்னு இருக்கேன்!//

மாம்ஸ் தொழிலதிபர் ஆகப் போறீங்களா?///////

என்னது தொழிலதிபரா? படுவா பிச்சிபுடுவேன் பிச்சி, எனக்கு கெட்ட கோவம் வரும்!

நாகராஜசோழன் MA said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது தொழிலதிபரா? படுவா பிச்சிபுடுவேன் பிச்சி, எனக்கு கெட்ட கோவம் வரும்!
//

மாம்ஸ் புண்ணாக்கு யாவாரம் தொழிலதிபர்கள் தானே பன்றாங்க?

நாகராஜசோழன் MA said...

// சௌந்தர் said...

யோவ் உனக்கு ஒரு நாள் தரலாம் ரெண்டு நாள் தரலாம் தினமும் கேட்டா என்னய்யா பண்றது
//

போலீஸ் கார், என்ன வருமானம் குறைந்து விட்டதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது தொழிலதிபரா? படுவா பிச்சிபுடுவேன் பிச்சி, எனக்கு கெட்ட கோவம் வரும்!//

மாம்ஸ் புண்ணாக்கு யாவாரம் தொழிலதிபர்கள் தானே பன்றாங்க?////

நான் முட்டுசந்துல கடை தொறக்கப் போறேன்னு சொன்னா, தொழிலதிபரு அது இதுன்னா என்ன பண்றது? நான் என்ன ஏதாவது மார்க்கெட்டு போன நடிகைய கல்யாணம் பண்ணவா ப்ளான் போடுறேன்?

அப்போ நீங்க அந்த மாதிரி எந்த பிளானும் போடலையா?

அருண் பிரசாத் said...

செல்போன் இல்லைனா எப்படி மிஸ்டு கால் கொடுக்கறது?

சி.பி.செந்தில்குமார் said...

சாரி ஃபார் லேட்,இனி பதிவு போடறப்ப எஸ் எம் எஸ் செய்யவும்.(இது ஒரு யூஸ்)

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தமிழ்மணத்துல சப்மிட் பண்ணல? (ஆமா ஏன்யா வேற டைமே கிடைக்கலியா? இப்பிடி நட்ட நடு ராத்திரில பதிவு போடுற?)

உங்க பிளாக் டைம் பார்த்தே டவுட் பட்டேன்யா,இப்போ கன்ஃபர்ம் ஆகிடுச்சு,நீங்க ஃபாரீன் பதிவர்தான்

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

முக்கியமான நல்லது என்னான்னு கேட்டுக்கோ, பப்ளிக் பிளேசுல, லேடீச ஏடாகூடமா செல்போன வெச்சி படம்புடிக்கிறது குறையும்! இந்தக் கருமாந்திரம் புடிச்சவனுங்களால எல்லாரும் எப்பிடி பயந்து பயந்து சாகுறாங்க, எத்தனை பேரு மௌனமா அழுவுறாங்க! ராஸ்கல்ஸ்!

நான் எது பண்ணூனாலும் எப்படியோ அது தெரிஞ்சுடுது ராமசாமிக்கு

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மாப்பு, தமிழ்மணத்துல இணைக்கிறதுக்கு மினிமம் 3 பதிவு போட்டிருக்கனும், அதான் ப்ராப்ளம்னு நெனைக்கிறேன்!

ஆமா ,அது ஒண்ணும் பிரச்சனை இல்ல 2 மொக்க பதிவு டம்மியா ரெடி பண்ணீ ப்போடுங்க

சி.பி.செந்தில்குமார் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

காலேஜ் பசங்க ஒழுங்கா படிப்பானுங்க!//

நீங்க படிக்கும்போது செல்போன் இல்ல. அப்ப நீங்க ஏன் நல்லா படிக்கல??

October 19, 2010 10:38 PM
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

முக்கியமான நல்லது என்னான்னு கேட்டுக்கோ, பப்ளிக் பிளேசுல, லேடீச ஏடாகூடமா செல்போன வெச்சி படம்புடிக்கிறது குறையும்! இந்தக் கருமாந்திரம் புடிச்சவனுங்களால எல்லாரும் எப்பிடி பயந்து பயந்து சாகுறாங்க, எத்தனை பேரு மௌனமா அழுவுறாங்க! ராஸ்கல்ஸ்!
///

அப்பா பன்னிகுட்டிக்கு வருமானம் இருக்காதே. சாப்பாட்டுக்கு என்ன செய்வாரு////

இப்பல்லாம் தொழில்ல போட்டி ரொம்ப அதிகமாயிடிச்சுப்பா, யாரோ ரமேசு ரமேசுன்னு ஒரு ஆளு இப்போ புல்டைமா இந்த வேலதான் பண்றாப்புல, நம்மால தாக்குப்புடிக்க முடியல, அதுனால இந்தக் கருமத்தையெல்லாம் விட்டுபுட்டு, ஊருக்கு போயி புண்ணாக்கு யாவாரம் பண்ணலாம்னு இருக்கேன்!

யோவ் ,சிரிப்புபோலீஸ்,ந்நீ பண்றது எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சு பாருய்யா

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாகராஜசோழன் MA said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்பல்லாம் தொழில்ல போட்டி ரொம்ப அதிகமாயிடிச்சுப்பா, யாரோ ரமேசு ரமேசுன்னு ஒரு ஆளு இப்போ புல்டைமா இந்த வேலதான் பண்றாப்புல, நம்மால தாக்குப்புடிக்க முடியல, அதுனால இந்தக் கருமத்தையெல்லாம் விட்டுபுட்டு, ஊருக்கு போயி புண்ணாக்கு யாவாரம் பண்ணலாம்னு இருக்கேன்!//

மாம்ஸ் தொழிலதிபர் ஆகப் போறீங்களா?///////

என்னது தொழிலதிபரா? படுவா பிச்சிபுடுவேன் பிச்சி, எனக்கு கெட்ட கோவம் வரும்!

யோவ்,கோபம்னாலே அது கெட்டதுதான்,அதுல என்ன நல்ல கோபம்,கெட்ட கோபம்,?

நாகராஜசோழன் MA said...

//அருண் பிரசாத் said...

செல்போன் இல்லைனா எப்படி மிஸ்டு கால் கொடுக்கறது?
//

அதனால தான் செல்போன் வேண்டாம்னு சொல்றேன்.

நாகராஜசோழன் MA said...

//சி.பி.செந்தில்குமார் said...

சாரி ஃபார் லேட்,இனி பதிவு போடறப்ப எஸ் எம் எஸ் செய்யவும்.(இது ஒரு யூஸ்)
//

அண்ணே இதுக்காகவும் செல்போன் வேண்டாம்னு சொல்றேன்.

நாகராஜசோழன் MA said...

// சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தமிழ்மணத்துல சப்மிட் பண்ணல? (ஆமா ஏன்யா வேற டைமே கிடைக்கலியா? இப்பிடி நட்ட நடு ராத்திரில பதிவு போடுற?)

உங்க பிளாக் டைம் பார்த்தே டவுட் பட்டேன்யா,இப்போ கன்ஃபர்ம் ஆகிடுச்சு,நீங்க ஃபாரீன் பதிவர்தான்
//

அண்ணே நான் பாரின் பதிவர் இல்ல உள்ளூர் பதிவர் தான்.

நா.மணிவண்ணன் said...

சந்துக்கு சந்துக்கு இருக்குருர செல்போன் கடையெல்லாம் முடிடுவுவாங்க

மங்குனி அமைசர் said...

யார்ரா இவன் வில்லங்கமா யோசிக்கிறான் , நான் இப்பத்தான் கஷ்டப்பட்டு ரெண்டு பிகர உஷார் பண்ணி வச்சு இருக்கேன் , இந்த நேரத்துல தலைல இடிவிழுந்த மாதி இப்படி ஒரு பதிவு போடுறானே, உனக்கு பிகர் கிடைக்காட்டி போயி ஆத்துல குளத்துல விழுந்து சாவு , எங்க வாழ்க்கைல ஏன் விளையாடுற , பன்னாட ,டோமரு

நாகராஜசோழன் MA said...

//நா.மணிவண்ணன் said...

சந்துக்கு சந்துக்கு இருக்குருர செல்போன் கடையெல்லாம் முடிடுவுவாங்க
//

கரெக்ட்ங்க மணிவண்ணன்.

நாகராஜசோழன் MA said...

//Blogger மங்குனி அமைசர் said...

யார்ரா இவன் வில்லங்கமா யோசிக்கிறான் , நான் இப்பத்தான் கஷ்டப்பட்டு ரெண்டு பிகர உஷார் பண்ணி வச்சு இருக்கேன் , இந்த நேரத்துல தலைல இடிவிழுந்த மாதி இப்படி ஒரு பதிவு போடுறானே, உனக்கு பிகர் கிடைக்காட்டி போயி ஆத்துல குளத்துல விழுந்து சாவு , எங்க வாழ்க்கைல ஏன் விளையாடுற , பன்னாட ,டோமரு
//

அமைச்சரே ரெண்டு பிகரு ஒரே நேரத்திலா? தாங்கமுடியலடா சாமி. யோவ் உங்களைமாதிரி ஆளுக டார்ச்சர் தாங்க முடியாமதான் இப்படி பதிவு போட்டு இருக்கிறேன்.

நாகராஜசோழன் MA said...

//மங்குனி அமைசர் said...

யார்ரா இவன் வில்லங்கமா யோசிக்கிறான் , நான் இப்பத்தான் கஷ்டப்பட்டு ரெண்டு பிகர உஷார் பண்ணி வச்சு இருக்கேன் , இந்த நேரத்துல தலைல இடிவிழுந்த மாதி இப்படி ஒரு பதிவு போடுறானே, உனக்கு பிகர் கிடைக்காட்டி போயி ஆத்துல குளத்துல விழுந்து சாவு , எங்க வாழ்க்கைல ஏன் விளையாடுற , பன்னாட ,டோமரு
//

எனக்கு பிகரு கெடக்கலைன்னு யார் சொன்னா? எத்தனை பேருக்கு அல்வா கொடுத்திருப்பேன்!!

பார்வையாளன் said...

இதை படிச்சதும் செல்போனை எங்கேயாவது தொலைச்சுடாலம்னு தோணுது

RVS said...

பல்லடத்துல நீங்க செயிச்சதும் மொபைல்ல கூப்பிட்டு சொல்லுங்க... நன்றி.. ;-) ;)

Saran said...

//
RVS said...
பல்லடத்துல நீங்க செயிச்சதும் மொபைல்ல கூப்பிட்டு சொல்லுங்க... நன்றி.. ;-) ;

//

செயிச்சதும் எல்லாருக்கும் ஃப்ரீ செல் ஃபோனாம்.

RVS said...

@Saran
நல்ல அதிரடி திட்டமா இருக்கு. வெற்றி நிச்சயம் அப்படின்னு வருங்கால முதல்வர் கிட்ட சொல்லிடுங்க. அப்புறம் அந்த மொட்டை எல்லாம் இப்பவே எரிச்சுற சொல்லாதீங்க. சமயம் வரும்போது எரிக்கலாம்.

நாகராஜசோழன் MA said...

//RVS said...

பல்லடத்துல நீங்க செயிச்சதும் மொபைல்ல கூப்பிட்டு சொல்லுங்க... நன்றி.. ;-) ;)
//

கண்டிப்பா, என்னோட லேன்ட் லைன்ல இருந்து உங்க செல்போன்க்கு கூப்பிட்டு சொல்றேன்.

நாகராஜசோழன் MA said...

//Saran said...

//
RVS said...
பல்லடத்துல நீங்க செயிச்சதும் மொபைல்ல கூப்பிட்டு சொல்லுங்க... நன்றி.. ;-) ;

//

செயிச்சதும் எல்லாருக்கும் ஃப்ரீ செல் ஃபோனாம்.
//

ஆமாங்க எல்லோருக்கும் ப்ரீ செல்போன் ஆனா ஜெயிச்சதுக்கு அப்புறம் தான். (எந்த அரசியல்வாதி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கார்.)

நாகராஜசோழன் MA said...

// RVS said...

@Saran
நல்ல அதிரடி திட்டமா இருக்கு. வெற்றி நிச்சயம் அப்படின்னு வருங்கால முதல்வர் கிட்ட சொல்லிடுங்க. அப்புறம் அந்த மொட்டை எல்லாம் இப்பவே எரிச்சுற சொல்லாதீங்க. சமயம் வரும்போது எரிக்கலாம்.
//

@RVS "வருங்கால முதல்வர்" இதுல உள்குத்து எதுவும் இல்லையே??

அன்னு said...

மொபைல் காணாம போனாத்தான் வீட்டுல இருக்கற அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள் உறவே சில பேருக்கு தெரிய வருது. எல்லா மனைவிமார்களும் வாரத்துக்கு ரெண்டு தடவையாவது கணவனோட மொபைலையும் லேப்டாப்பையும் ஒளிச்சு வெச்சிட்டா இன்னும் சுகம். :)

முசமில் இத்ரூஸ் said...

Verum moondru padhivugalil muppadhu followergal enbadhu migaperiya sadhanaithaan.valthukkal

RVS said...

இது ஒரு கும்மாங்குத்து. அதாவது நீங்க முதல்வரா வருவதற்கு எல்லோரும் சேர்ந்து உங்க சின்னத்துக்கு குத்தப்போகும் ஓட்டு சார். ;-)

நாகராஜசோழன் MA said...

// அன்னு said...

மொபைல் காணாம போனாத்தான் வீட்டுல இருக்கற அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள் உறவே சில பேருக்கு தெரிய வருது. எல்லா மனைவிமார்களும் வாரத்துக்கு ரெண்டு தடவையாவது கணவனோட மொபைலையும் லேப்டாப்பையும் ஒளிச்சு வெச்சிட்டா இன்னும் சுகம். :)
//

சரியா சொன்னீங்க. தங்கள் வருகைக்கு நன்றி!

நாகராஜசோழன் MA said...

// முசமில் இத்ரூஸ் said...

Verum moondru padhivugalil muppadhu followergal enbadhu migaperiya sadhanaithaan.valthukkal
//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி முசமில் இத்ரூஸ்.

நாகராஜசோழன் MA said...

// RVS said...

இது ஒரு கும்மாங்குத்து. அதாவது நீங்க முதல்வரா வருவதற்கு எல்லோரும் சேர்ந்து உங்க சின்னத்துக்கு குத்தப்போகும் ஓட்டு சார். ;-)
//

நமக்கு முதல்வர் ஆக ஆசையில்லீங்க. ஏதோ இந்த பிரதமர் பதவி கெடச்சா கூட போதுமுங்க.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

me 60

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

எனக்கு ஒரு பாயிண்ட் கூட தோணலை. அனேகமா எல்லாமே கவர் பண்ணிட்டீங்கன்னு நினைக்கிறேன்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

me the 32

(ஹிஹி. உங்க 32-வது follower நானுங்கோ!)

RVS said...

ச்சே ச்சே... அதெல்லாம் வேண்டாம். ஆய்.
அப்புறம் பின்னாடி இருந்து யாரோ கீ குடுப்பாங்க. சுதந்தரமா செயல்பட முடியாது. அவங்க கையை ஆட்டுன்னா ஆட்டனும் காலை ஆட்டுன்னா ஆட்டனும். சுதந்திர இந்தியாவுல நீங்க ஒரு சுதந்திர முதல்வர செயல்பட தான் இந்த நாடு விருப்பப்படும். மொதெல்ல ஸ்டேட் அப்புறம்தான் சென்டர். சரியா... ;-)

ராஜகோபால் said...

பாஸ் உங்க படம் நம்ம தேட்டர் - ல
ஓடுது கொஞ்சம் வாங்க

http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/10/3.html

நாகராஜசோழன் MA said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...

me 60

me the 32

(ஹிஹி. உங்க 32-வது follower நானுங்கோ!)
//

வருகைக்கு ரொம்ப நன்றி பாஸ்.

நாகராஜசோழன் MA said...

// பெயர் சொல்ல விருப்பமில்லை said...

எனக்கு ஒரு பாயிண்ட் கூட தோணலை. அனேகமா எல்லாமே கவர் பண்ணிட்டீங்கன்னு நினைக்கிறேன்.
//

இன்னும் எதிர்காலத்துல அதிகமாக வரும் பாஸ்.

நாகராஜசோழன் MA said...

// RVS said...

ச்சே ச்சே... அதெல்லாம் வேண்டாம். ஆய்.
அப்புறம் பின்னாடி இருந்து யாரோ கீ குடுப்பாங்க. சுதந்தரமா செயல்பட முடியாது. அவங்க கையை ஆட்டுன்னா ஆட்டனும் காலை ஆட்டுன்னா ஆட்டனும். சுதந்திர இந்தியாவுல நீங்க ஒரு சுதந்திர முதல்வர செயல்பட தான் இந்த நாடு விருப்பப்படும். மொதெல்ல ஸ்டேட் அப்புறம்தான் சென்டர். சரியா... ;-)
//

ஆமாங்க நான் அதை மறந்திட்டேன். முதல்ல முதல்வர் ஆகிடறேன். அப்புறமா பிரதமர் பதவி பற்றி யோசிக்கலாம்.

நாகராஜசோழன் MA said...

// ராஜகோபால் said...

பாஸ் உங்க படம் நம்ம தேட்டர் - ல
ஓடுது கொஞ்சம் வாங்க

http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/10/3.html
//

படம் ரொம்ப நல்லாருக்கு நண்பா..

ரஹீம் கஸாலி said...

இந்த செல்போன் இல்லாட்டி, நீங்க தேர்தல்ல நிற்கும்போது எனக்கு வோட்டு போடுங்கன்னு கேட்டு தொந்தரவு பண்ணமாட்டீங்க. சரியா?

தேவா said...

என்னா பாஸ் நீங்க வர சட்டமன்ற தேர்தல்ல நீங்க இலவசமா செல்போன் தருவீங்கன்னு நினச்சேன் கடைசில இப்படி ஏமாத்திறீங்களே?

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

வெளிநாடு போயிருந்த ஒரு மாதம் செல்போன் உபயோகிக்காமல் இருந்தேன்... உண்மையாகவே நிம்மதியாகவே இருந்தது..

Abhi said...

நல்லா இருக்கு ! பாராட்டுக்கள் !

தனி காட்டு ராஜா said...

நாகராஜா ,உன் பங்காளி ஒருத்தன் கெளம்பி வந்து இருக்கான்...........
இல்ல...நீ தான் அவனா ..... நீ அவன் இல்லையா ....

எப்படியோ சிண்டு முடிஞ்சு விட்டாச்சு ...எஸ்கேப் ....
http://goldframenagarajacholan.blogspot.com

நாகராஜசோழன் MA said...

// ரஹீம் கஸாலி said...

இந்த செல்போன் இல்லாட்டி, நீங்க தேர்தல்ல நிற்கும்போது எனக்கு வோட்டு போடுங்கன்னு கேட்டு தொந்தரவு பண்ணமாட்டீங்க. சரியா?
//

ஆமாங்க. ஆனால் தெருவெல்லாம் மேடை போட்டு தூங்கவுட மாட்டோம், பரவாயில்லையா?

நாகராஜசோழன் MA said...

//தேவா said...
என்னா பாஸ் நீங்க வர சட்டமன்ற தேர்தல்ல நீங்க இலவசமா செல்போன் தருவீங்கன்னு நினச்சேன் கடைசில இப்படி ஏமாத்திறீங்களே?
//

அட நீங்க வேற. இப்ப மத்திய அரசே செல்போன் இலவசமா கொடுக்கிறாங்க. நான் இன்னும் என்னென்னமோ தரலாம்னு இருக்கேன் ஆனா ஜெயிச்சதுக்கு அப்புறம் தான்.

நாகராஜசோழன் MA said...

// பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

வெளிநாடு போயிருந்த ஒரு மாதம் செல்போன் உபயோகிக்காமல் இருந்தேன்... உண்மையாகவே நிம்மதியாகவே இருந்தது..
//

நெஜமாலுமே சந்தோசமா இருக்கலாம்க.

நாகராஜசோழன் MA said...

// Abhi said...

நல்லா இருக்கு ! பாராட்டுக்கள் !
//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க அபி.

நாகராஜசோழன் MA said...

// தனி காட்டு ராஜா said...

நாகராஜா ,உன் பங்காளி ஒருத்தன் கெளம்பி வந்து இருக்கான்...........
இல்ல...நீ தான் அவனா ..... நீ அவன் இல்லையா ....

எப்படியோ சிண்டு முடிஞ்சு விட்டாச்சு ...எஸ்கேப் ....
http://goldframenagarajacholan.blogspot.com
//

ராஜா நான் அவன் இல்லைங்க. அது யாரோ நம்ம பங்காளிங்க. (சிண்டு முடிஞ்சாலும் சமாளிப்போமில்ல!!)