குறிப்பு

என் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.

Wednesday, November 17, 2010

நான் ரசித்த ரஜினி படங்கள் - தொடர் பதிவு

              என்னை இந்த தொடர் பதிவு எழுத அழைத்த பன்னிகுட்டி ராம்சாமி அவர்களுக்கு நன்றிகள் பல. சிறிய வயதில் சட்டையில் ரஜினி படம் குத்திக்கொண்டு பள்ளி செல்லும் அளவுக்கு நான் அவரின் தீவிர ரசிகன். என்னுடைய பள்ளி காலங்களில் ரஜினி படத்திற்காக அப்போது இருந்த பஞ்சாயத்து டிவி முன்னால் மாலையில் போடும் படத்திற்காக மதியத்திலிருந்தே தவம் கிடப்போம். ஆனாலும் முதல் நாள் முதல் ஷோ பார்த்தது இல்லை இதுவரையிலும்.

               ரஜினி நூற்றைம்பது படத்திற்கு மேல் நடித்திருந்தாலும் நான் பார்த்தது என்னவோ ஐம்பது படங்கள் கூட இருக்காது. நான் ரஜினியை ஒரு கடவுளாகவோ மாஸ் ஹீரோவாகவோ  பார்க்க மாட்டேன். என்னைப் பொறுத்தவரை ரஜினி என்பவர் ஒரு திறமையான நடிகர். உண்மையாகவே இயக்குனர்கள் அவரை சரியாகப் பயன்படுத்தவில்லை.

10. பில்லா
              இது அவருக்கு ஆக்சன், நடிப்பு மற்றும் காமெடி என பல்முகங்களைக்  காட்ட கிடைத்த படம். அடிபட்டு காரில் இருக்கும் பொழுதும் டி எஸ் பியை மிரட்டுவதும் வெத்தலைய போட்டேண்டி என அப்பாவியாய் ஆடும் காட்சியும் எனக்குப் பிடித்தவை.
 
9. தர்மத்தின் தலைவன் 
           இது நான் பலமுறை பார்த்த படம். வேட்டி இல்லாமல் ரோட்டில் நடப்பதும் அது தெரிந்து ஓடி ஒளிவதும் சுஹாசினியிடம் வெட்கப்பட்டுக் கொண்டே பேசுவதும் பின் பாதியில் ஆக்சனில் கலக்குவதும் இப்படத்தில் சிறப்பான காட்சிகள்.

8. தில்லு முல்லு
          ரஜினியின் காமெடிக்கென்றே பலமுறை நான் பார்த்த படம். இன்டர்வியூ காட்சியும், கமல் வரும் காட்சியும் மீசையை வைத்து ஒருத்தன் என்னை ஏமாத்திட்டான் என தேங்காய் சீனிவாசன் மீசையை எடுப்பதும் என படம் முழுக்க காமெடிதான்.

7. ராஜாதி ராஜா 
          நான் பார்த்த முதல் ரஜினி படம். சின்னராசு வாக வரும் ரஜினி எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனந்தராஜிடம் பழத்தாரை கொடுத்து அப்பாவியாய் நிற்பதும் தாயத்து கட்டியவுடன் அதே ஆனந்தராஜை கூப்பிட்டு அடிப்பதும் என வெளுத்துக் கட்டியிருப்பார்.

6. நான் அடிமை இல்லை 
           இதுவும் நான் மிகவும் ரசித்துப் பார்த்த படம். ரஜினி - ஸ்ரீதேவி  காதல் காட்சிகளும், ரஜினி குழந்தையுடன் இருக்கும் காட்சிகளும் என இந்த படத்தில் செண்டிமெண்ட் காட்சிகளே அதிகம். ரு ஜீவன் தான் பாடலில் வரும் "கீழ்வர்க்கம் மேல்வர்க்கம் இணையாத இருகோடுகள்" நான் மிகவும் ரசித்த வரிகள். 5. புவனா ஒரு கேள்விக்குறி  
            ரஜினி  ஒரு திறமையான நடிகர் என நிருபித்த படம். இதில் ஒரு நடிகனாக ரஜினி எனக்குப் பிடிக்கும்.

4. ஆறிலிருந்து அறுபது வரை
            இதுவும்  ரஜினியின் சிறப்பான நடிப்புக்கு ஒரு சான்று. படம்முழுவதும் ஒரு சோகம் இழையோடும் அவரது நடிப்பில். "கண்மணியே காதல்" என்பது இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

3. தளபதி
            எனது  பள்ளி நாட்களில் வந்த படம். ரஜினி ரசிகர்களின் ஆராவாரத்துக் கிடையே நான் பார்த்தபடம். ரஜினி-மணிரத்னம் கூட்டணியில் பயங்கர ஹிட்டான படம். இதில் ரஜினி ஆக்சன், செண்டிமெண்ட் என கலந்துகட்டியிருப்பார்.

2. எஜமான்
           ரஜினியின்  திறமையை நிரூபித்த மாற்றுமொரு படம். பட்டாம்பூச்சி பிடிப்பது, ஆல விழுதுகளை அனுப்புவது, தூக்குச்சட்டிகளை  காலி செய்வது என நகைச்சுவை, செண்டிமெண்ட் என்று கலக்கியிருப்பார்.

1. பாட்ஷா
          ரஜினியே  சொன்னது போல அவரது ஆல் டைம் ஹிட்சில் முதலில் உள்ள படம். நான் ஒரு தடவ சொன்னா, உண்மையை சொன்னேன் இந்த இரண்டு டயலாக்குகளும் மறக்க முடியாதவை. இதிலும் ஆக்சன், காமெடி, செண்டிமெண்ட் என கலக்கியிருப்பார்.           இவை தவிர எனக்கு பிடித்த படங்கள்  மனிதன், மிஸ்டர் பாரத், மன்னன், சிவாஜி, அண்ணாமலை, முள்ளும் மலரும் (இந்த படம் நான் பார்க்காததால் லிஸ்டில் சேர்க்கவில்லை), ராஜா சின்ன ரோஜா, குரு சிஷ்யன், மாப்பிள்ளை, படிக்காதவன், சந்திரமுகி, முத்து, மாவீரன், படையப்பா  என ஒரு பெரிய லிஸ்டே உண்டு.

எனக்கு பிடித்த ரஜினி பாடல்கள்:
 • கண்மணியே காதல் என்பது - ஆறிலிருந்து அறுபது வரை
 • எங்கேயும் எப்போதும் - நினைத்தாலே இனிக்கும்
 • ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு - தர்ம யுத்தம்
 • அம்மா என்றழைக்காத - மன்னன்
 • வெற்றி நிச்சயம் - அண்ணாமலை
 • ஒரு ஜீவன் தான் - நான் அடிமை இல்லை
 • வெள்ளைப்புறா ஒன்று - புதுக் கவிதை
 • காதலின் தீபம் ஒன்று - தம்பிக்கு எந்த ஊரு
 • தாழம் பூவே வாசம் - கை கொடுக்கும் கை*
 • விடுகதையா இந்த- முத்து
   (கை கொடுக்கும் கை* - இந்த படத்தின் பெயர் சரியா எனத் தெரியவில்லை)

  இந்த தொடர் பதிவை தொடர நான் அழைப்பது:
      
  பிலாசபி பிரபாகரன் (ஏற்கனவே வாக்குக் கொடுத்தபடி நான் அழைக்கிறேன். இம்சை அரசன் பாபுவும் அழைத்திருக்கிறார்),
  வம்ப வெலைக்கு வாங்குவோம்ல மணிவண்ணன், 
  ரஹீம் கஸாலி

  பிகு: எனக்கு படங்கள் தந்து உதவிய கூகிள் இமேசஸ்க்கு நன்றி.

  79 comments:

  பதிவுலகில் பாபு said...

  அனைத்துமே அருமையான படங்கள்.. நல்ல தொகுப்பு நண்பரே..

  எஸ்.கே said...

  ரொம்ப நல்லா தொகுப்பு பாட்டும் அருமையான தேர்வு!

  Arun Prasath said...

  கலக்கல்

  karthikkumar said...

  சோழா மேஹஹஹ

  karthikkumar said...

  லேட்டா பதிவு போட்டாலும் நல்லா நச்சுனு போற்றுகீங்க

  அருண் பிரசாத் said...

  ரொம்ப நல்ல தொகுப்பு பாஸ்

  தொடர்பதிவு எழுதியதற்கு நன்றி

  philosophy prabhakaran said...

  அட நான் கூப்பிட நினைத்த அதே இரண்டு பேர் மணிவண்ணனும், ரஹீம் கசாலியும்... நீங்களே கூப்பிட்டுட்டீங்களா....

  LK said...

  நல்ல தொகுப்பு

  வெறும்பய said...

  நல்ல தொகுப்பு நண்பரே..

  Madhavan said...

  நன்றாக எழுதியுள்ளீர்கள்..

  //philosophy prabhakaran said..."அட நான் கூப்பிட நினைத்த அதே இரண்டு பேர் மணிவண்ணனும், ரஹீம் கசாலியும்... நீங்களே கூப்பிட்டுட்டீங்களா..."

  அப்ப நீங்க யாரக் கூப்பிடப் போறீங்க..

  கக்கு - மாணிக்கம் said...

  நல்ல செலக்சன் தான் . ஏன் யாருமே நினைத்தாலே இனிக்கும் பக்கம் போவதே இல்லை? அதில் ரஜினியின் குறும்பும் காதலும் கவர்ச்சியானவை.

  நாகராஜசோழன் MA said...

  // பதிவுலகில் பாபு said...

  அனைத்துமே அருமையான படங்கள்.. நல்ல தொகுப்பு நண்பரே..
  //

  நன்றிங்க பாபு!

  நாகராஜசோழன் MA said...

  //எஸ்.கே said...

  ரொம்ப நல்லா தொகுப்பு பாட்டும் அருமையான தேர்வு!
  //

  நன்றிங்க எஸ்.கே!

  நாகராஜசோழன் MA said...

  //Arun Prasath said...

  கலக்கல்
  //

  நன்றி அருண். தொடர்பதிவுக்கு உன்னைத் தான் அழைக்கிலாம் என்றிருந்தேன். அதற்கும் இம்சை அரசன் முந்திக் கொண்டார்.

  நாகராஜசோழன் MA said...

  //karthikkumar said...

  லேட்டா பதிவு போட்டாலும் நல்லா நச்சுனு போற்றுகீங்க
  //

  நாலு நாள் கேப் உனக்கு லேட்டா பங்காளி?

  நாகராஜசோழன் MA said...

  //அருண் பிரசாத் said...

  ரொம்ப நல்ல தொகுப்பு பாஸ்

  தொடர்பதிவு எழுதியதற்கு நன்றி
  //

  நன்றிங்க அருண் பிரசாத்.

  நாகராஜசோழன் MA said...

  // philosophy prabhakaran said...

  அட நான் கூப்பிட நினைத்த அதே இரண்டு பேர் மணிவண்ணனும், ரஹீம் கசாலியும்... நீங்களே கூப்பிட்டுட்டீங்களா....
  //

  சரி விடுங்க பாஸ். நமக்கு ஆளுக்கா பஞ்சம்?

  பிரியமுடன் ரமேஷ் said...

  அருமையான தொகுப்பு நண்பரே.. படங்களின் தொகுப்பை விட பாடல்களின் தொகுப்பு சூப்பர்.. எல்லாமே என் லிஸ்ட்லயும் இருக்கு..

  தாழம் பூவே வாசம் வீசு கை கொடுக்கும் கைதான்..

  நாகராஜசோழன் MA said...

  // LK said...

  நல்ல தொகுப்பு
  //

  நன்றிங்க எல்கே!

  நாகராஜசோழன் MA said...

  //வெறும்பய said...

  நல்ல தொகுப்பு நண்பரே..
  //

  நன்றி மச்சி!

  நாகராஜசோழன் MA said...

  //Madhavan said...

  நன்றாக எழுதியுள்ளீர்கள்..

  //philosophy prabhakaran said..."அட நான் கூப்பிட நினைத்த அதே இரண்டு பேர் மணிவண்ணனும், ரஹீம் கசாலியும்... நீங்களே கூப்பிட்டுட்டீங்களா..."

  அப்ப நீங்க யாரக் கூப்பிடப் போறீங்க..
  //

  உங்களையே திருப்பி கூப்பிடச் சொல்லலாமா?

  நாகராஜசோழன் MA said...

  //கக்கு - மாணிக்கம் said...

  நல்ல செலக்சன் தான் . ஏன் யாருமே நினைத்தாலே இனிக்கும் பக்கம் போவதே இல்லை? அதில் ரஜினியின் குறும்பும் காதலும் கவர்ச்சியானவை.
  //

  நான் அந்த படம் பார்க்கல அண்ணே!

  நாகராஜசோழன் MA said...

  //பிரியமுடன் ரமேஷ் said...

  அருமையான தொகுப்பு நண்பரே.. படங்களின் தொகுப்பை விட பாடல்களின் தொகுப்பு சூப்பர்.. எல்லாமே என் லிஸ்ட்லயும் இருக்கு..

  தாழம் பூவே வாசம் வீசு கை கொடுக்கும் கைதான்..
  //

  தகவலுக்கு நன்றி ரமேஷ். எனக்கு எப்பவுமே மெலடியான பாடல்கள் தான் பிடிக்கும்.

  பிரியமுடன் ரமேஷ் said...

  //எனக்கு எப்பவுமே மெலடியான பாடல்கள் தான் பிடிக்கும்.

  எனக்கும்தான்.. நைட்டு தூங்கறதுக்கு முன்னாடி ஹெட்போன்ல மெலடி சாங்க்ஸ் கேட்டுட்டு தூங்கறதே ஒரு தனி சுகம்தான்..

  பிரியமுடன் ரமேஷ் said...

  தேங்க்ஸ் டூ இளையராஜா, கங்கை அமரன், சங்கர் கணேஷ் இன்ன பிற அப்போதைய இசையமைப்பாளர்கள்.. (நாம் இளையராஜா சாங்க்ஸ் என்று ரசிக்கும் பாடல்களில் சிலவற்றுக்கு இசை இளையராஜா அல்ல)

  ரஹீம் கஸாலி said...

  நீங்கள் தொகுத்திருக்கும் படங்கள் யாவும் கலக்கல். என்னையும் மதித்து தொடர்பதிவிற்கு அழைத்தமைக்கு நன்றி சோழ பரம்பரை எம்.எல்.ஏ.

  ப.செல்வக்குமார் said...

  // ரஜினி நூற்றைம்பது படத்திற்கு மேல் நடித்திருந்தாலும் நான் பார்த்தது என்னவோ ஐம்பது படங்கள் கூட இருக்காது.///

  நானும் அப்படித்தான் அண்ணா , கமல் படங்கள் கம்மியாத்தான் பார்த்திருக்கிறேன் ..

  ப.செல்வக்குமார் said...

  நல்லாவே தொகுத்திருக்கீங்க..!! நான் ஒரு சில படங்கள் பார்த்ததில்லை ..

  ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  appaalikkaa varen

  இம்சைஅரசன் பாபு.. said...

  பாடல்களில் வரிசை சூப்பர் ......எல்லாமே நல்ல பாட்டு ...........முதல்ல லேயே சொல்லி இருக்கலாம் இல்ல ?பிரபாகர் நான் கூப்பிட போர்றேன்னு ?

  Arun Prasath said...

  //Arun Prasath said...

  கலக்கல்//

  நன்றி அருண். தொடர்பதிவுக்கு உன்னைத் தான் அழைக்கிலாம் என்றிருந்தேன். அதற்கும் இம்சை அரசன் முந்திக் கொண்டார்.//

  நன்றி ச.ம. உ அய்யா.... உங்கள் அன்புக்கு நன்றி.. எழுதீடேன் வந்து பாருங்க

  நா.மணிவண்ணன் said...

  அருமையான பதிவு . ஆனா என்னைய மாட்டிவிடீங்களே.தொடர் பதிவு போட்ற அளவுக்கெல்லாம் நா வொர்த் தான ஆள் இல்லீங்க .ம்ம்ம் பொது வுள்ள சொல்லீடீங்க முயற்சி பண்றேன் . ரெண்டுநாள்ல பதிவ போட்ருவோம்

  ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  super collection

  ஆர்.கே.சதீஷ்குமார் said...

  தொகுப்பு ரொம்ப நல்லாருக்கு ஓட்டு போட்டாச்சி

  TERROR-PANDIYAN(VAS) said...

  ரொம்ப நல்லாருக்கு. போட்டாச்சி ஓட்டு

  அன்பரசன் said...

  நல்ல தொகுப்பு

  எப்பூடி.. said...

  சிறந்த தொகுப்பு, வாழ்த்துக்கள்.

  பெயர் சொல்ல விருப்பமில்லை said...

  Superb!

  I like it!

  philosophy prabhakaran said...

  10, 8, 7, 4, 3 இவையெல்லாம் எனக்கும்ஜ் பிடித்த படங்கள்...
  புவனா ஒரு கேள்விக்குறி இதுவரை பார்த்ததில்லை... பார்க்கவேண்டும் என்று ஆசை இருக்கிறது...
  அநேகமாக நீங்க எழுதியிருக்குற படங்கள்ல பாதிப் படங்கள் என்னுடைய பதிவிலும் வரும்...

  ராஜி said...

  எல்லா பதிவர்களும் சொல்லி வச்ச மாதிரி பாட்சா, தில்லுமுல்லு,... இப்படியேவா ஒரேமாதிரி சொல்லனும்.
  ஆக்சன் படங்களில் நடித்துக்கொண்டே சூப்பர் ஸ்டார் இமேஜை விட்டு வெளியேற நடித்த படங்கள் ராகவேந்திரா, வயதான கேரக்டரில் நடித்த நல்லவனுக்கு நல்லவன், அதுமட்டுமன்றி படிக்காதவன, அடுத்த வாரிசு. பாயும் புலி. நான் மகான் அல்ல, ஜானீ இதுபோன்ற படங்கள்லாம் உங்க கண்ணுக்குலாம் தெரியாதா? எல்லாம் ஒரே குட்டைல ஊறின மட்டைங்க

  நாகராஜசோழன் MA said...

  //பிரியமுடன் ரமேஷ் said...

  தேங்க்ஸ் டூ இளையராஜா, கங்கை அமரன், சங்கர் கணேஷ் இன்ன பிற அப்போதைய இசையமைப்பாளர்கள்.. (நாம் இளையராஜா சாங்க்ஸ் என்று ரசிக்கும் பாடல்களில் சிலவற்றுக்கு இசை இளையராஜா அல்ல)
  //

  நானும் நிறைய முறை இந்த மாதிரி ஏமாந்திருக்கேன்.

  நாகராஜசோழன் MA said...

  //ரஹீம் கஸாலி said...

  நீங்கள் தொகுத்திருக்கும் படங்கள் யாவும் கலக்கல். என்னையும் மதித்து தொடர்பதிவிற்கு அழைத்தமைக்கு நன்றி சோழ பரம்பரை எம்.எல்.ஏ.
  //

  சீக்கிரம் எழுதுங்க.

  நாகராஜசோழன் MA said...

  //ப.செல்வக்குமார் said...

  // ரஜினி நூற்றைம்பது படத்திற்கு மேல் நடித்திருந்தாலும் நான் பார்த்தது என்னவோ ஐம்பது படங்கள் கூட இருக்காது.///

  நானும் அப்படித்தான் அண்ணா , கமல் படங்கள் கம்மியாத்தான் பார்த்திருக்கிறேன் ..
  //

  பேசாம நீ கமல் பத்து எழுதேன்??

  நாகராஜசோழன் MA said...

  //இம்சைஅரசன் பாபு.. said...

  பாடல்களில் வரிசை சூப்பர் ......எல்லாமே நல்ல பாட்டு ...........முதல்ல லேயே சொல்லி இருக்கலாம் இல்ல ?பிரபாகர் நான் கூப்பிட போர்றேன்னு ?
  //

  நான் அவருக்கு பன்னிக்குட்டி ப்ளாக்ல சொல்லிருந்தேன். அப்புறம் உங்க ப்ளாக்ல நீங்க கூப்பிடிருந்ததை பார்த்தேன். முன்னாடியே சொன்னதனால் தான் அவர் பெயரைப் போட்டேன்.

  நாகராஜசோழன் MA said...

  //Arun Prasath said...

  //Arun Prasath said...

  கலக்கல்//

  நன்றி அருண். தொடர்பதிவுக்கு உன்னைத் தான் அழைக்கிலாம் என்றிருந்தேன். அதற்கும் இம்சை அரசன் முந்திக் கொண்டார்.//

  நன்றி ச.ம. உ அய்யா.... உங்கள் அன்புக்கு நன்றி.. எழுதீடேன் வந்து பாருங்க
  //

  பார்த்திட்டேன். (நான் அய்யா போடுமளவிற்கு வயதானவன் இல்லை)

  நாகராஜசோழன் MA said...

  //நா.மணிவண்ணன் said...

  அருமையான பதிவு . ஆனா என்னைய மாட்டிவிடீங்களே.தொடர் பதிவு போட்ற அளவுக்கெல்லாம் நா வொர்த் தான ஆள் இல்லீங்க .ம்ம்ம் பொது வுள்ள சொல்லீடீங்க முயற்சி பண்றேன் . ரெண்டுநாள்ல பதிவ போட்ருவோம்
  //

  சீக்கிரம் போட்ருங்க.

  நாகராஜசோழன் MA said...

  // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  super collection
  //

  நன்றிங்க போலீஸ் கார்.

  நாகராஜசோழன் MA said...

  //ஆர்.கே.சதீஷ்குமார் said...

  தொகுப்பு ரொம்ப நல்லாருக்கு ஓட்டு போட்டாச்சி
  //

  நன்றிங்க சதீஷ்!

  நாகராஜசோழன் MA said...

  //TERROR-PANDIYAN(VAS) said...

  ரொம்ப நல்லாருக்கு. போட்டாச்சி ஓட்டு
  //

  தேங்க்ஸ் மச்சி!

  நாகராஜசோழன் MA said...

  //அன்பரசன் said...

  நல்ல தொகுப்பு
  //

  நன்றிங்க அன்பரசன்!

  நாகராஜசோழன் MA said...

  //எப்பூடி.. said...

  சிறந்த தொகுப்பு, வாழ்த்துக்கள்.
  //

  நன்றிங்க எப்பூடி!

  நாகராஜசோழன் MA said...

  //பெயர் சொல்ல விருப்பமில்லை said...

  Superb!

  I like it!
  //

  நன்றிங்க பெயர் சொல்ல விருப்பமில்லை!

  நாகராஜசோழன் MA said...

  //philosophy prabhakaran said...

  10, 8, 7, 4, 3 இவையெல்லாம் எனக்கும்ஜ் பிடித்த படங்கள்...
  புவனா ஒரு கேள்விக்குறி இதுவரை பார்த்ததில்லை... பார்க்கவேண்டும் என்று ஆசை இருக்கிறது...
  அநேகமாக நீங்க எழுதியிருக்குற படங்கள்ல பாதிப் படங்கள் என்னுடைய பதிவிலும் வரும்...
  //

  ரொம்ப நல்லாருக்கும் அந்த படம்.

  நாகராஜசோழன் MA said...

  //ராஜி said...

  எல்லா பதிவர்களும் சொல்லி வச்ச மாதிரி பாட்சா, தில்லுமுல்லு,... இப்படியேவா ஒரேமாதிரி சொல்லனும்.
  ஆக்சன் படங்களில் நடித்துக்கொண்டே சூப்பர் ஸ்டார் இமேஜை விட்டு வெளியேற நடித்த படங்கள் ராகவேந்திரா, வயதான கேரக்டரில் நடித்த நல்லவனுக்கு நல்லவன், அதுமட்டுமன்றி படிக்காதவன, அடுத்த வாரிசு. பாயும் புலி. நான் மகான் அல்ல, ஜானீ இதுபோன்ற படங்கள்லாம் உங்க கண்ணுக்குலாம் தெரியாதா? எல்லாம் ஒரே குட்டைல ஊறின மட்டைங்க

  நீங்க சொன்ன படங்களில் படிக்காதவன் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். நான் பார்த்த படங்களில் தானே எனக்கு பிடித்த பத்து எழுத முடியும்?

  சௌந்தர் said...

  சூப்பர் சூப்பர் சொல்லிய விதம் சூப்பர் எனக்கு எல்லாமே பிடித்த படம் தான்

  ஹரிஸ் said...

  சூப்பர்..

  ஹரிஸ் said...
  This comment has been removed by the author.
  philosophy prabhakaran said...

  குறிப்பிட்ட அந்த இடுகையை நீக்கிவிட்டேன் நண்பரே... என் தளத்திற்கு வருகை தந்து நடுநிலையான கருத்துக்களை தெரிவித்ததற்கு நன்றி...

  கவிதை காதலன் said...

  //காதலின் தீபம் ஒன்று - தம்பிக்கு எந்த ஊரு //

  மறக்க முடியாத பாட்டு.. அருமை நண்பரே..

  பட்டாபட்டி.. said...

  ரைட்..ரைட்

  Anonymous said...

  எனக்குப் பிடித்த படம் “ஆறிலிருந்து அறுபது வரை“ தான்.
  மற்ற தேர்வுகளும் அருமை.

  நாகராஜசோழன் MA said...

  // சௌந்தர் said...

  சூப்பர் சூப்பர் சொல்லிய விதம் சூப்பர் எனக்கு எல்லாமே பிடித்த படம் தான்
  //

  நன்றி சௌந்தர்.

  நாகராஜசோழன் MA said...

  //ஹரிஸ் said...

  ஏம்ப்பா M L A நம்ம தொகுதி பக்கமும் கொஞ்சம் வந்து போங்க..
  //

  வந்துட்டேன் நண்பா!

  நாகராஜசோழன் MA said...

  // philosophy prabhakaran said...

  குறிப்பிட்ட அந்த இடுகையை நீக்கிவிட்டேன் நண்பரே... என் தளத்திற்கு வருகை தந்து நடுநிலையான கருத்துக்களை தெரிவித்ததற்கு நன்றி...
  //

  உங்களின் புரிதலுக்கும் விரைவாக பிரச்சனையை முடித்ததற்கும் நன்றி நண்பரே! தொடர்ந்து எழுதுங்கள்!

  நாகராஜசோழன் MA said...

  // கவிதை காதலன் said...

  //காதலின் தீபம் ஒன்று - தம்பிக்கு எந்த ஊரு //

  மறக்க முடியாத பாட்டு.. அருமை நண்பரே..
  //

  ஆம் நண்பா! நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடலில் இதுவும் ஒன்று.

  நாகராஜசோழன் MA said...

  //பட்டாபட்டி.. said...

  ரைட்..ரைட்
  //

  நன்றி பட்டாப்பட்டி சாப்.

  நாகராஜசோழன் MA said...

  // இந்திரா said...

  எனக்குப் பிடித்த படம் “ஆறிலிருந்து அறுபது வரை“ தான்.
  மற்ற தேர்வுகளும் அருமை.
  //

  வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க!

  பார்வையாளன் said...

  சூப்பர் பதிவுங்கண்ணா...

  அடுதத எல்க்‌ஷன்ல கண்டிப்பா உங்களை ஜெயிக்க வச்சுடுவோம்

  ரஹீம் கஸாலி said...

  நாங்களும் பதிவு போட்டுட்டோம்ல .பார்க்க....ரஜினி நடிப்பில் எனக்கு பிடித்த 10 படங்கள்

  THOPPITHOPPI said...

  அருமையான படங்கள் டாப் டென்னில்

  மனசாட்சி said...

  அருமையான வரிசையில் - எல்லாமே ரஜினியின் நடிப்பு வெளிப்பட்ட படங்கள்

  Maheswaran.M said...

  super MLA sir. Keep it.. adraa sakka adraa sakka

  மோகன்ஜி said...

  இன்னிக்கு தான் உங்க வலையை பார்க்கிறேன் !கலக்குறீங்க! வாழ்த்துக்கள்

  Riyas said...

  எல்லாம் அருமையான தெரிவுகள்..

  உங்கள் வலைப்பக்கம் இப்பதான் வருகிறேன் எல்லாம் நல்லாயிருக்கு..

  பாரத்... பாரதி... said...

  //"கீழ்வர்க்கம் மேல்வர்க்கம் இணையாத இருகோடுகள்" //

  பாரத்... பாரதி... said...

  //தாழம் பூவே வாசம் வீசு கை கொடுக்கும் கைதான்.//
  waong..
  துடிக்கும் கரங்கள்.. எஸ்.பி.பி. இசை

  ஆர்.கே.சதீஷ்குமார் said...

  ராஜாதிராஜா செம காமெடியா இருக்கும் ரெண்டு ரஜினிக்கும் நிறைய வித்தியாசம் காட்டி இருப்பார்

  Balaji saravana said...

  நல்ல தொகுப்பு..வாழ்த்துக்கள்

  ம.தி.சுதா said...

  நல்லதொரு தொகுப்பு வாழ்த்துக்கள்...