குறிப்பு

என் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.

Tuesday, August 21, 2012

பெட்ரோல் பங்கில் கொள்ளை - தொழிலாளர்களின் அராஜகம்


இரு சக்கரமோ, நான்கு சக்கரமோ பொருத்திய ஏதாவது ஒரு வண்டி வாங்கி அதை இயக்குவதே பெரும்பாடாகிப் போன தற்காலத்தில், ஒரு வாகன ஓட்டி/வாகன உரிமையாளர் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது. திருப்பங்களில் நின்றிருக்கும் பிள்ளையார் கோவில்கள் முதல் சாலையை எந்த பிரக்ஞையின்றி கடக்கும் மாடுகள், எருமை மாடுகள், பன்றிகள், சில சமயம் மனித உருவில் இருக்கும் மாக்கள், அதிவேகத்தில் வாகனத்தை ஒட்டி வந்து முந்திச் செல்பவர்கள், காதடைக்க ஒலியெழுப்பும் புகைபோக்கி கொண்டவர்கள், சாலையை தனது தாத்தா வீட்டு சொத்தாய் பாவித்து வாகனம் இயக்கும் அன்பர்கள், இறுதியாய் அங்கிங்கு எனாதபடி எங்கும் நிற்கும் காவல்துறை நண்பர்கள் வரை நிறைந்தது சென்னையில் இருக்கும் கரடுமுரடான சாலைகள்.

நிற்க, நான் இங்கே சொல்ல வந்தது சென்னை சாலைகளைப் பற்றியல்ல. சென்னையில் இருக்கும் அநேக பெட்ரோல் பங்குகளில் நடக்கும் பகல் கொள்ளைகளைப் பற்றி. பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் அளவு சரியாய் இருக்காது, விலையேற்ற நாட்களில் பெட்ரோல் ஸ்டாக் இருக்காது போன்ற முதலாளித்துவ பிரச்சினைகளை விட்டுத் தள்ளுங்கள். அதற்காய் நாம் போராடி நம் ஜனநாயக நாட்டில் வெற்றி பெற முடியாது. பின் வேறு என்ன பிரச்சனை என்கிறீர்களா? நான் மட்டுமல்ல என் நண்பர்கள் பலரும் எதிர் கொண்ட பிரச்சினைகள் பின்வருமாறு.




அ). நீங்கள் பெட்ரோல் பங்க் பம்ப்பின் முன் உங்கள் வண்டியை நிறுத்தி, இவ்வளவு பெட்ரோல் போட வேண்டும் என்று அங்கிருக்கும் அன்பரிடம் சொல்கிறீர்கள். அவரும் ஆமோதித்து, அந்த பம்ப் கைப்பிடியை உங்கள் வண்டி டேங்க்கின் மீது வைத்து இயக்கி, பின் திடீரென்று நிறுத்தி விடுவார். அப்போது அளவு காட்டி ரூ. 50/- காட்டிக் கொண்டிருக்கும். அவரிடம் நான் இவ்வளவு ரூபாய்க்கு/லிட்டர் போடச் சொன்னேன், ஏன் ஐம்பது ரூபாய்ல நிறுத்திட்டீங்கன்னு கேட்டால், அப்படியா என்று ஆச்சர்யப் பட்டுக் கொண்டு திரும்பவும் தொடருவார். நீங்கள் அதன் தொடக்க அளவை கவனித்து இருக்க மாட்டீர்கள். அந்த ரூ. 50/- முன்னாடியே இயக்கியது/இவர்களாக செட் செய்வது. இப்போது நீங்கள் ஐம்பது ரூபாய்க்கான பெட்ரோலை இழந்து விட்டீர்கள்.

ஆ). அடுத்த பிரச்சினை, இரண்டு அன்பர்கள் அங்கே இருப்பார்கள். ஒருவர் அந்த பம்ப்பின் கைப்பிடியை வைத்திருப்பார். மற்றவர் உங்களிடம் பணம் வாங்கும் காசாளர். நீங்கள் இவ்வளவு அமவுண்ட்/லிட்டர் பெட்ரோல் என்று சொல்லிய பின், அந்தக் காசாளர் உங்களிடம் பேச்சுக் கொடுப்பார். வண்டி நல்லா இருக்கே, எப்போ சார் சர்வீஸ் செஞ்சீங்க. நீங்கள் அவரிடம் பதில் சொல்லி முடிக்கும் போது உங்களுக்கான பெட்ரோல் போடப் பட்டிருக்கும். இப்போது உங்களுக்கு எவ்வளவு பெட்ரோல் போடப்பட்டது என்பது அந்த சிபிஐயால் கூட கண்டுபிடிக்க முடியாது.

இ). காற்று இலவசம் என்று எல்லாப் பங்க்குகளிலும் ஒட்டி இருக்கும். ஆனால் காற்றுப் பிடிக்கும் அன்பருக்கு காசு தராமல் காற்றுப் பிடித்துப் பாருங்கள், சென்னையில் இருக்கும் அனைத்து கெட்ட வார்த்தைகளாலும் அர்ச்சனை செய்யப்படுவீர்கள். அதிலும் ஓர் அற்ப சந்தோசம், உங்களுக்கு தமிழில் அர்ச்சனை கிடைப்பது என்பதே!

இந்தப் பிரச்சனைகளை தவிர்க்க சிறந்த வழி, நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பதே! இதை எதிர்த்துப் போராடினால் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கிறார்கள் என்று நம்மையே தான் திட்டுவார்கள். 

  • எப்போதும் தொடக்க அளவு பூஜ்ஜியத்தில் இருக்கிறதா என்று கவனிக்கவும்.
  • தேவையற்ற பேச்சுக்களில் கவனம் செலுத்த வேண்டாம்.
  • பெட்ரோல் போடும் கைப்பிடி மீதிருந்து கையை எடுக்கச் சொல்லவும்.
  • காற்றுக்கு காசு கேட்பின், மேலாளரிடம் புகார் கொடுக்கவும். அவர் இல்லையெனில் வேறு எதுவும் செய்ய இயலாது.
பி.கு.: இந்தப் பதிவுக்கான தலைப்பை வைக்க அண்ணாந்து விட்டத்தைப் பார்த்து நெடுநேரம் யோசித்தேன். எதுவும் பிடிபடவில்லை. கண நேரத்தில் உதித்த சிந்தனையாய் "அந்த" வெப்சைட்டுக்கு சென்றதும், கிடைத்ததே இந்தத் தலைப்பு.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த HuntForHint இன்னும் சில தினங்களில்!

படங்கள் உதவி: கூகிள் இமேஜஸ்

21 comments:

TERROR-PANDIYAN(VAS) said...

தகவலுக்கு நன்றி!

TERROR-PANDIYAN(VAS) said...

நான் பைக் வாங்கினால், சென்னை வந்தால் கண்டிப்பாக நீங்கள் கூறிய அறிய கருத்துகளை நினைவில் கொள்கிறேன்.. :)

பட்டிகாட்டான் Jey said...

திரும்பவும் பெட்ரோல் வெலை ஏத்தப்போரானுகளாம்..., இவனுக அக்கபோர் வேற.. பேசாம சைக்கிள் வாங்கிடலாம்னு இருக்கேன்... உடம்புக்கும் நல்லது, பாக்கெட்டுகும் நல்லது....

பட்டிகாட்டான் Jey said...

எம் எல் ஏ...
வலைதளத்தில்...
நோ ......
ஓட்டு...
பெட்டி ....
ஆச்சர்யக்குறி!!!!....


நோட்பண்ணுங்கப்பா... நோட் பண்ணூங்கப்பா...

NaSo said...

//TERROR-PANDIYAN(VAS) said...
நான் பைக் வாங்கினால், சென்னை வந்தால் கண்டிப்பாக நீங்கள் கூறிய அறிய கருத்துகளை நினைவில் கொள்கிறேன்.. :)//

நடக்கிற காரியத்தை மட்டும் பேசவும்..

NaSo said...

//பட்டிகாட்டான் Jey said...
எம் எல் ஏ...
வலைதளத்தில்...
நோ ......
ஓட்டு...
பெட்டி ....
ஆச்சர்யக்குறி!!!!....


நோட்பண்ணுங்கப்பா... நோட் பண்ணூங்கப்பா...

August 21, 2012 11:30 AM //

அதை வச்சு அண்ணா நகர்ல வீடு கிடைக்குமா அண்ணே?

TERROR-PANDIYAN(VAS) said...

//நடக்கிற காரியத்தை மட்டும் பேசவும்.. //

நடக்கரதுக்கு எதுக்கு மச்சி பெட்ரோல் போடனும்?

TERROR-PANDIYAN(VAS) said...

//எம் எல் ஏ...
வலைதளத்தில்...
நோ ......
ஓட்டு...
பெட்டி ....
ஆச்சர்யக்குறி!!!!.... //

அதை நான் தேர்தல் சமயத்தில் மட்டும் தான் வைப்பேன். எல்லா நேரத்திலும் வைக்க நான் என்ன லூசா?

இப்படிக்கு
எம்.எல்.ஏ

பட்டிகாட்டான் Jey said...

//அதை வச்சு அண்ணா நகர்ல வீடு கிடைக்குமா அண்ணே?//

இத படிச்சி, நொந்தவனுக்கு, தடவுரதுக்கு பச்சிலை ரெடி பண்ணுவாஙகல்ல அதுக்குதான் நோட் பண்னச் சொன்னது...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பதிவு அருமை... த.ம. 0

மங்குனி அமைச்சர் said...

nee kalakku chiththappu

பட்டிகாட்டான் Jey said...

//பதிவு அருமை... த.ம. 0 //

பன்னி ஊருக்குள்ள ரெண்டு பேரு இத தொழிலாவே பண்ணிட்டிருங்காங்க டா ஒரு நாள் இல்லினா ஒருநாள் சரியா வாங்கி கட்டப்போராங்க...

என்ன கருமம் நம்மூர் சைடா வேர இருந்து மானத்த வாங்குறாங்க...

பட்டிகாட்டான் Jey said...

//nee kalakku chiththappu//

எலேய் எம்மெல்லே நீ சித்தப்பா ஆனத சொல்லவே இல்ல.... பேட் ஃபெல்லோ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருமையான விழிப்புணர்வுக் கட்டுரை ஒன்றை சமைத்தமைக்கு நன்றி தோழர்... இதனை நல்ல கல்வெட்டு ஒன்றில் செதுக்கி வைத்துவிட்டு அருகில் அமர்ந்து கொள்ளவும்.

NaSo said...

//பட்டிகாட்டான் Jey said...
//பதிவு அருமை... த.ம. 0 //

பன்னி ஊருக்குள்ள ரெண்டு பேரு இத தொழிலாவே பண்ணிட்டிருங்காங்க டா ஒரு நாள் இல்லினா ஒருநாள் சரியா வாங்கி கட்டப்போராங்க...

என்ன கருமம் நம்மூர் சைடா வேர இருந்து மானத்த வாங்குறாங்க...

August 21, 2012 11:44 AM //

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதீரும்...

NaSo said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அருமையான விழிப்புணர்வுக் கட்டுரை ஒன்றை சமைத்தமைக்கு நன்றி தோழர்... இதனை நல்ல கல்வெட்டு ஒன்றில் செதுக்கி வைத்துவிட்டு அருகில் அமர்ந்து கொள்ளவும்.//

தோழர், தங்களின் இக்கூற்று தொழிலார்களின் நலனுக்கு எதிரானது..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// பன்னி ஊருக்குள்ள ரெண்டு பேரு இத தொழிலாவே பண்ணிட்டிருங்காங்க டா ஒரு நாள் இல்லினா ஒருநாள் சரியா வாங்கி கட்டப்போராங்க...///

அவர்களை மன்னித்துவிடுங்கள் தோழர், அவர்களை ஓட்டு போட்டு ஓட்டு வாங்கும் உயரிய பணியினை செய்துவருகிறர்கள், ஒருநாள் அணைத்து ஓட்டுகளையும் வைத்து தமிழ்ச் சமூகத்திற்கு ஏதாவது செய்யாமலா போய்விடுவார்கள்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// August 21, 2012 11:47 AM Nagarajachozhan MA said...//பன்னிக்குட்டி ராம்சாமி said...அருமையான விழிப்புணர்வுக் கட்டுரை ஒன்றை சமைத்தமைக்கு நன்றி தோழர்... இதனை நல்ல கல்வெட்டு ஒன்றில் செதுக்கி வைத்துவிட்டு அருகில் அமர்ந்து கொள்ளவும்.//தோழர், தங்களின் இக்கூற்று தொழிலார்களின் நலனுக்கு எதிரானது../////

அப்படியென்றால் கல்வெட்டிற்கு அருகில் அமர்ந்து கொள்ளாமல் நின்று கொள்ளவும்...!

வைகை said...

இதுபோன்ற குறைகளை தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நிவர்த்தி செய்யவும் :-)

Madhavan Srinivasagopalan said...

Our Town.. -- is good in this... I mean, customers are lucky not to get cheated these ways..

Easy (EZ) Editorial Calendar said...

பகிர்வுக்கு நன்றி.....

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)