குறிப்பு

என் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.

Friday, September 7, 2012

அவளும் அவனும் பின்னே ரைட்டர் நாகாவும்!


அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் ஊழலைப் போல அவன் மனது முழுதும் அவள் நினைவு, இன்று எப்படியாவது அவளைப் பார்த்து விட வேண்டுமென காலையிலிருந்து உணவு, உடை, இருப்பிடம் என அனைத்தையும் மறந்து தவம் கிடந்தான் அவன், அவனைப்பற்றி ஒரே வரியில் சொல்ல முடியாது, அவனைப் புரிந்து கொண்டவர்கள் அவனையும் தவிர்த்து அவன் வீட்டு நாய் மட்டுமே!  கூதிர்  காலத்தில் குளிப்பான், கோடையில் குளிப்பதை மறப்பான், பகலில் நட்சத்திரங்களை எண்ணுவான், இரவினில் சூரியனைத் தேடுவான், சினிமாவில் ஆக்‌ஷன் காட்சிகளை ரசித்துப் பார்ப்பான், மிஷ்கின் படத்தில் டிரிபூட் தேடுவான், கமல் படத்தில் ஆபாசம் எதிர்ப்பான், மொத்தத்தில் தமிழ் படங்களில் லாஜிக் எதிர்பார்ப்பான்.



நாவலில் செண்டிமெண்ட் காட்சிகள் வந்தால் அழுவான், பின்நவீனத்துவத்திலிருந்து கட்டற்ற களஞ்சியமான விக்கீபீடியா வரை கரைத்துக் குடித்தவன், எப்போவதாவது குடிக்க மாட்டான், குடித்துவிட்டு தத்துவமோ கவிதையோ சொல்லமாட்டான், கள்ளையும் சாராயத்தையும் கலந்து குடித்து கலெக்டரைப் பார்க்க வேண்டுமென்பான், குடிக்கும் வரை தமிழனாய் இருந்துவிட்டு குடித்தபின் ஃபிரெஞ்ச்சோ, இலத்தீனோ சரளமாய் பேசுவான், குடித்த பின் இலக்கியம் பேசமாட்டான், குடிக்காமல் பேசவே மாட்டான்.


எதைப் பற்றியும் கவலைப் படமாட்டான், ஆனால் சில நேரம் ஓரமாய் ஊறும் எறும்பைக் கூட காப்பாற்றி அதன் வீட்டில் விடவேண்டுமென்பான்.,மொத்தத்தில் அவனுடைய பெற்றோர்களுக்கு அவன் புரியாத புதிர், அவனுடைய இலக்கிய நண்பர்களுக்கு அவன் ஊறுகாய் அவர்களின் போதைக்கு, இப்படியாய் நாளொரு புத்தகமும் பொழுதொரு குடியுமாய் போன அவனது வாழ்க்கையில் ஒரு புதினமாய் வந்தால் அவள். இவன் படிக்கும் நூலகத்தில் அவள் நூலகர், மின்னல் சிரிப்பு, கன்னக் கதுப்பு என அவளை பார்த்ததும் மயங்கினான், அவனிடம் இது வரை இல்லாத மனிதக் காதல் சுரப்பிகள் சுரக்கத் தொடங்கின.


அவளுக்காக முடி வெட்டினான்,  குளித்தான், தலை வாரினான், தமிழின் டாப்பர் ஹீரோ போல உடை அணிந்தான், காலையில் குடிப்பதை நிறுத்தினான். அவளிடம் இலக்கியம் பேசினான், பேசியதிலிருந்து அவளுக்கு பின்நவீனத்துவமும் கவிதையும் பிடிக்கும் என்று அவனுக்குத் தெரிந்தது. உடனே அவனுக்குள் இருந்த பாப்லோ நெரூடா விழித்துக் கொண்டான். அவளுக்காக ஒரு பின்நவீனத்துவ கவிதை இரண்டு வாரமாய் எழுதி இரண்டு நாட்களுக்கு முன் கொடுத்தான். அதை வாங்கியதிலிருந்து அவள் இரண்டு நாள் வராததால் இப்போது தவம் கிடக்கிறான்.


அவள் வருவது தூரத்தில் தெரிந்ததால் அவன் எழுந்து தலையை சரி செய்தான். அவள் அவனை நெருங்கி அழகாய் சிரித்து அவனிடம் ஏன் "ரைட்டர் நாகா" கவிதையை காப்பியடிச்சே என்றாள்..

பின்குறிப்பு:

கொஞ்சநாள் முன்னாடி டெர்ரர் கும்மியில் வெளியான எனது கட்டுரை, சில மாற்றங்களுடன்..

படங்கள் உதவி: கூகிள் இமேஜஸ்

11 comments:

TERROR-PANDIYAN(VAS) said...

// "ரைட்டர் நாகா"//

க்க்க்ர்ர்ர்ர்ர்ர்.... வாழ்த்துகள்!

வைகை said...

என்ன கருமண்டா இது? :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Lefter yaaru?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ங்கொய்யால ஒரு நல்ல படமா போட்டிருக்க கூடாதா......?

பட்டிகாட்டான் Jey said...

டேய் நாயே....மூனுவாடி படிச்சிட்டேண்டா.....ஒரு ம*ரும் புரியல. தேவா எழுதுனத மூனுவாட்டி படிச்சா கொஞ்சமாச்சும் புரியும்... ஆனா நீ எழுதுனதா சொன்ன இந்த கருமாந்திரத்த எத்தன தடவைப் படிச்சாலும் ப்ரியாதுபோலருக்கே....

நல்லாஇருடா.....
(ங்கொய்யா இப்படி பொலம்பவிட்டுட்டானே பரதேசி...)

NaSo said...

@ஜெய்,

எதுக்கும் இன்னொரு வாட்டி படிச்சுப் பாருங்க..

பட்டிகாட்டான் Jey said...

சாமீ....உனக்கு ஃபாலோவர் ஆயிட்டேன்.... இதுக்குதான ஆசைப்பட்டே எம் எல் ஏ.

இத்தோட விட்ரு மச்சி....உன் சங்காத்தமே வேணாம்...வரேன்...

(ங்கொய்யா சிக்குனா படிக்கவிட்டே நம்மள மெண்டலாகிருவாம்போல)

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்னைய வீட்டில கூப்பிட்டாங்க போயிட்டு வந்திடுறேன் மச்சி

நாய் நக்ஸ் said...

யோவ்வ்வ்வ்வ்வ் ....
கவிதைவீதி சௌந்தர்....

சும்மா இருக்க கூடாதா?????????

இப்ப பாரு கும்மி குரூப் கிளம்பிட்டாங்க...
யாருயா....தாங்கறது...??????

சௌந்தர் நீ இப்ப கொலை ஆகப்போற பாரு....

வெளங்காதவன்™ said...

வைகை said...

என்ன கருமண்டா இது? :-)
**********************
ரிப்பீட்டு.....

முத்தரசு said...

ஆங்