வருஷக் கடைசி வந்துவிட்டது. இனி என்ன? டிசம்பர் மாச கச்சேரி பற்றி, கல்யாணி, தோடின்னு பல ராகத்தை அங்க இங்க இருக்கிற சபா சைட்டுல சுட்டு அது சூப்பர் இது சூப்பர்ன்னு வாரமலர் முதற்கொண்டு ராணி காமிக்ஸ் வரைக்கும் எழுதுவாங்க.
அப்புறம் இசை விமர்சனம் பன்றேன்னு ஒரு க்ரூப் கிளம்பி கேபி சுந்தராம்பாள்ல இருந்து பிரிட்னி ஸ்பியர்ஸ் வரைக்கும் வாய்ஸ் சரி இல்லை, மாடுலேஷன் இல்லை, உயிர் இல்லைன்னு கலாக்கா கணக்கா டார்ச்சர் பண்ணுவாங்க. இதையெல்லாம் பொறுத்துக்கலாம். இன்னொரு க்ரூப் இருக்கு.. இருங்க, நான் உங்களை சொல்லல..
அவார்டு தர்றேன், விருது தர்றேன், கருது தர்றேன், எனக்குப் பிடித்த டாப் டென் சூப்பர் படங்கள், எனக்குப் பிடித்த டாப் டென் மொக்கைப் படங்கள், எனக்குப் பிடித்த டாப் டென் பிகர்கள், எனக்குப் பிடித்த டாப் டென் பதிவர்கள்ன்னு சொல்லி கிளம்புவாங்க பாருங்க.. அதைத்தான் பொறுத்துக்க முடியாது.
அட விடுங்க, இதெல்லாம் சோஷியல் மேட்டர் விட்ருலாம். அதுக்கும் போயி எனக்கு உங்க விருதுல, லிஸ்ட்ல இது பிடிக்கல, அது பிடிக்கலன்னு சொல்லி ஒரு க்ரூப் கமெண்ட் போடும் பாருங்க, அவங்களை மட்டும் விடவே கூடாது. ஏன்யா அவரு ஏதோ அவருக்குப் பிடிச்சதுன்னு சொல்லிட்டு அவரு சந்தோசத்திற்கு ஒரு லிஸ்ட் போடுறார்ன்னா அங்கே போய் ஏன் நொன்னை பேசுறீங்க? வேணும்னா நீங்களும் ஒரு லிஸ்ட் போட்டுட்டு அதை எங்களுக்கு சொல்லுங்க. அங்கே வந்து கமெண்ட் போட்டு உங்களை நோவடிக்கிறோம்.
கடைசியா, புத்தக கண்காட்சி. யப்பா.. இதை சொல்லியே ஆகணும். முன்னெல்லாம் நான் வாங்கிய புத்தகங்கள், வாங்கப் போற புத்தகங்கள், நான் இத்தனாந் தேதி போறேன்னு சொல்லி ஸ்டேடஸ், பதிவு போடுவாங்க. ஆனாப் பாருங்க, இந்த வருஷத்தில் இருந்து என்னோட இந்த பொஸ்தவம் ரிலீஸ் ஆகுது, என்னோட இத்தனை பொஸ்தவம் ரிலீஸ் ஆகுது, இதெல்லாம் பிரிண்டிங்ல இருக்குது, பிரிண்டிங் மெஷின் ஆர்டர் பண்ணிருக்கேன்னு ஏகப்பட்ட ஸ்டேடஸ், பதிவுகள். அதிலயும் பாருங்க, நாவல்ல இருந்து, கட்டுரையில் இருந்து, கவிதையில் இருந்து, கெணத்தில் இருந்துன்னு ஏகப்பட்டது. முடியலடா சாமீ...
ஆனா ஒண்ணுங்க, தமிழ்நாட்டுல மட்டும் தான் வாசகர்களை விடவும் எழுத்தாளர்கள் அதிகமா இருக்காங்கன்னு திரும்பவும் நிரூபிச்சி இருக்கோம். அப்படியே என்னோட டாப் டென் படங்கள் பதிவு/ஸ்டேடஸுக்கு லைக் போட்டிடுங்க..